நீங்க அசைவம் சாப்பிடுவீங்களா? உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்.. சைவம் நிலைமை மோசம்தான்!

சென்னை: வீட்டில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் "சைவதாலி" (Veg Meals) விலை மார்ச் மாதத்தில் 7% அதிகரித்து, சராசரியாக 27.3 ரூபாயை எட்டியது. இதே "சைவ சாப்பாட்டின்" விலை கடந்த ஆண்டு மார்ச் 2023 இல் 25.5 ரூபாயாக இருந்தது. மாறாக, "அசைவ தாலி" விலை 7% குறைந்து சராசரியான ரூ. 59.2 இல் இருந்து ரூ.54.9 ஆக குறைந்துள்ளது என CRISIL மதிப்பீட்டு நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது. சைவ உணவில் ரொட்டி, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, அரிசி, பருப்பு, தயிர் மற்றும் சாலட் ஆகியவை அடங்கும். அசைவ உணவில் இவை இருக்கும் என்றபோதிலும் பருப்புக்கு பதிலாக கோழி இருக்கும்.

CRISIL இன் ரொட்டி ரைஸ் ரேட் அறிக்கையானது, வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பொருட்கள் பயன்படுத்துவதன் விலைகளைப் பொருத்தே வீட்டில் சமைக்கப்படும் தாலியின் சராசரி விலை கணக்கிடப்படுகிறது. வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை முந்தைய ஆண்டை விட 40%, 36% மற்றும் 22% அதிகரித்ததால் சைவ தாலியின் விலை உயர்ந்துள்ளது என்று கூறுகிறது.

நீங்க அசைவம் சாப்பிடுவீங்களா? உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்.. சைவம் நிலைமை மோசம்தான்!


கடந்த நிதி ஆண்டில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு வரத்து குறைந்தது. மேலும், தக்காளியின் விலையும் குறைவாக இருந்தது. குறைந்த வரத்து காரணமாக அரிசி விலையில் 14% மற்றும் பருப்பு விலையில் 22% அதிகரிப்புக்கு வழிவகுத்தது. மார்ச் மாதத்தில், தக்காளி விலை 2% குறைந்ததால், பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது சைவ தாலியின் விலை 1% குறைந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் சைவ தாலியின் விலை ரூ.27.4. மறுபுறம், கறிக்கோழி விலை 16% குறைந்ததால், மார்ச் மாதத்தில் அசைவ தாலியின் விலை முந்தைய ஆண்டை விட குறைந்துள்ளது. CRISIL மார்க்கெட் இன்டலிஜென்ஸ் மற்றும் அனலிட்டிக்ஸ் ஆராய்ச்சி இயக்குனர் புஷன் ஷர்மா,கடந்த ஐந்து மாதங்களாக சைவம் மற்றும் அசைவ உணவு விலையில் வித்தியாசம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

சைவ உணவுப் ப்ளேட்டின் விலை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் அசைவ உணவின் விலை குறைந்துள்ளது. பிராய்லர் கோழியின் வரத்து அதிகமாக உள்ளதால் இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, மார்ச் மாதத்தில் அசைவ தாலியின் விலை 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பிராய்லர் கோழியின் விலை 5 சதவிகிதம் உயர்ந்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம். மேலும் ரம்ஜான் காலங்களில் கோழி இறைச்சிக்கு அதிக டிமாண்ட் இருக்கும். தீவன விலை ஏற்றமும் அசைவ உணவு விலை அதிகரிப்புக்குக் காரணமாகிறது.

புதிய அறுவடைப் பொருட்கள் சந்தைக்கு வருவதால் கோதுமை விலை குறையும் என்றும், தக்காளி விலை சீராக இருக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ராபி அறுவடை 20% குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், எதிர்காலத்தில் வெங்காயத்தின் விலை உயரக்கூடும். இதனால் தாலி விலை உயர வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+