தக்காளி விலை கடந்த ஆண்டை விட ஆகஸ்ட் மாதத்தில் அதிகமாக இருந்ததால் சைவ சாப்பாட்டின் விலை 24 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. எவ்வாறாயினும், ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது விலை சற்று குறைந்துள்ளதாக கிரிசில் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் மற்றும் அனலிட்டிக்ஸ் மாத இதழான 'ரோட்டி அரிசி விலை' அறிக்கை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சைவ சாப்பாட்டின் விலை மாதாந்திர அடிப்படையில் சிறிதளவு குறைந்துள்ளது, ஆனால் வருடாந்திர அடிப்படையில் இரண்டாவது முறையாக தொடர்ந்து உயர்த்துள்ளது.
சைவ சாப்பாடு விலையில் 24 சதவிகிதம் உயர்வுக்கு, 21 சதவிகிதம் தக்காளியின் விலை மட்டுமே காரணம் என்று கூறலாம்.

தக்காளி விலை வருடாந்திர அடிப்படையில் 176 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் கிலோ ஒன்றுக்கு 37 ரூபாயாக இருந்த தக்காளி விலை 102 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதேவேளையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்ததால் சாப்பாடு விலை அதிகரிக்கக் காரணமாக அமைந்தது. குறிப்பாக வீட்டு உபயோக சிலிண்டர்கள் விலை குறையாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஹோட்டல் உரிமையாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
அந்த அறிக்கையின்படி அசைவ சாப்பாட்டு விலை குறைவாக உள்ளது. பிராய்லர் கோழியின் விலை குறைந்துள்ளதால் இவ்வாறு உள்ளது. அசைவ சாப்பாட்டில் 50 சதவீத செலவு கோழியினால் ஏற்படுகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 3 சதவீதம்தான் அதிகரித்துள்ளது.
சமையல் எண்ணெய் விலை 17 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல் உருளைக்கிழங்கின் விலை 14 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட குறைவாகும். தக்காளியின் சில்லறை விலை தற்போது கிலோ ரூ.51 ஆக இருப்பதால் சாப்பாடு விலை செப்டம்பரில் குறையும் என்று கூறப்படுகிறது.
14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆகஸ்ட்டில் ரூ.1,103 ஆக இருந்தது. இது செப்டம்பரில் ரூ.903 ஆகக் குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிம்மதியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications