டெல்லி: கூடிய விரைவில் ஆடம்பரமான ஹேண்ட்பேக்குகள், சன் கிளாஸ்கள் மற்றும் காஸ்மெட்டிக் சிகிச்சைகளுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் 18 அல்லது 12 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 58 பொருட்கள் மற்றும் 24 சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் இதனால் மாற்றம் காண இருக்கிறது.
அழகுக்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள், போடாக்ஸ் சிகிச்சை, நெயில் மற்றும் டாட்டூ பார்லர்கள், லக்ஸூரி ஸ்பா சர்வீஸ், சூப்பர் லக்ஸூரி சலூன் சர்வீஸ்கள் ஆகியவற்றிற்கான ஜிஎஸ்டி வரி விகிதம் கூடிய விரைவில் உயர இருக்கிறது.

அது மட்டும் இன்றி 10000 ரூபாய்க்கு மேல் விலை கொண்ட ஹேண்ட்பேக்குகள் மற்றும் சன் கிளாஸ்களுக்கான ஜிஎஸ்டி வரியும் அதிகரிக்கப்பட உள்ளது. 5,000 ரூபாய்க்கும் மேல் விலை கொண்ட பேனாக்கள், 50,000 ரூபாய்க்கு மேல் விலை கொண்ட சைக்கிள்கள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரியையும் உயர்த்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜிஎஸ்டி கவுன்சிலால் அமைக்கப்பட்டுள்ள ஜிஓஎம் எனப்படும் அமைச்சர்கள் குழு இது தொடர்பாக தங்களுடைய பரிந்துரையை ஜிஎஸ்டி கவுன்சிலிடம் வழங்க இருக்கின்றன. தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில் அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பீகார் துணை முதலமைச்சர் சாம்ராஜ் சவுத்ரியின் தலைமையில் இந்த குழு செயல்பட்டு வருகிறது. பல்வேறு பொருட்களுக்காக ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றுவது குறித்து இந்த குழு ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த வகையில் நவம்பர் மாதத்தில் இந்த குழு தன்னுடைய பரிந்துரையை ஜிஎஸ்டி கவுன்சிலிடம் வழங்கும் என தெரிகிறது. எனவே இவற்றுக்கான விலைகளை உயர்த்தலாமா என்ற இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலிடமே உள்ளது. இந்த அமைச்சர்கள் குழு பொதுவாகவே ஆடம்பர பொருட்கள் மற்றும் ஆடம்பர சேவைகள் ஆகியவற்றுக்கான வரியை உயர்த்தலாம் என பரிந்துரை செய்ய இருக்கிறது.
எனவே 18 சதவீத வரி விகித பிரிவின் கீழ் இருக்கும் 10 சதவீத பொருட்களுக்கான வரி விகிதம் 28 சதவீதம் ஆகவும், 12 சதவீத வரி விகிதத்தில் இருக்கும் 5 சதவீத பொருட்களின் வரி விகிதமும் 28 சதவீதம் என உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆடம்பர பொருட்கள் என்ற பிரிவின் கீழ் வரும் பொருட்களுக்கான சேவைகளுக்கு மட்டுமே வரிகளை உயர்த்தவதற்கு இந்த குழு பரிந்துரைப்பதாக தெரிகிறது. தற்போது இந்தியாவில் 5, 12, 18, 28 என நான்கு விகிதங்கள் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்படுகிறது.
அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட ஜிஎஸ்டி வரி விகித பிடித்தங்களை மாற்றி அமைத்து வருகிறது. இந்தியாவில் ஆடம்பர பொருட்களை வாங்கும் போக்கு அதிகரித்திருப்பதாக அண்மையில் ஒரு ஆய்வறிக்கை வெளியான நிலையில் அவற்றுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications