இந்தியாவில் உணவு டெலிவரி சேவையில் ஸ்விக்கி, சோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் தான் முன்னிலையில் இருக்கின்றன . இந்த நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கும் இடையே நீண்ட காலமாக வரி தொடர்பான ஒரு விஷயத்தில் பெரிய முரண்பாடு நிலவி வந்தது. தற்போது அதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் விளக்கம் தந்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டுள்ள விளக்கத்தின் படி ஸ்விக்கி, சோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி வரிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். இந்நிறுவனங்கள் வரிச்சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது ஸ்விக்கி, சோமேட்டோ வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் தொகையை செலுத்த வேண்டி இருக்கும் .

ஜிஎஸ்டி கவுன்சில், ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி சேவை வழங்கும் நிறுவனங்கள் அந்த சேவைக்கான ஜிஎஸ்டி வரியை டெலிவரி ஊழியர்கள் சார்பாக நிறுவனங்கள்தான் செலுத்த வேண்டும் என விளக்கம் தந்திருக்கிறது. அதாவது இந்த 18 சதவீத வரி ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற டெலிவரி சேவை நிறுவனங்களின் மீது விழுந்திருக்கிறது . இவற்றை இந்த நிறுவனங்கள் எப்படி கையாள போகின்றன என்பதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
எக்னாமிக்ஸ் டைம்ஸுக்கு பேட்டி அளித்திருக்கும் சோமேட்டோ, ஸ்விக்கி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் முதலில் இந்த வரி ஊழியர்களிடமிருந்து வசூல் செய்யப்படும் என்றும் இதனால் குறுகிய காலத்தில் அவர்களின் வருமானம் குறையலாம் என்றும் கூறியிருக்கின்றனர். பின்னர் படிப்படியாக இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது தான் சுமத்த போகிறோம் எனக் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாகவே உணவு டெலிவரி சேவை வழங்கக்கூடிய செயலிகளுக்கும் அரசுக்கும் இடையே இந்த ஜிஎஸ்டி விவகாரத்தில் பல்வேறு முரண்பாடுகள் நிலவிய வண்ணம் இருக்கின்றன . அதாவது இந்த நிறுவனங்கள் வசூல் செய்யக்கூடிய டெலிவரி கட்டணம் மற்றும் டெலிவரி ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய சம்பளம் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரியை யார் செலுத்துவது என்பது குறித்த குழப்பம் தான் அது.
இந்த சேவையை வழங்கக்கூடிய நிறுவனங்கள் இந்த ஜிஎஸ்டி வரியை ஏற்க வேண்டுமா அல்லது டெலிவரி ஊழியர்கள் ஏற்க வேண்டுமா அல்லது சேவையை பெறக்கூடிய வாடிக்கையாளர்களே ஏற்க வேண்டுமா என்பது குறித்து தொடர்ந்து முரண்பாடுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சோமேட்டோ நிறுவனம் 803 கோடி ரூபாய் அளவிற்கு ஜிஎஸ்டி வரி நிலுவையில் இருப்பதாக ஜிஎஸ்டி அதிகாரிகளிடமிருந்து நோட்டீஸ் பெற்றது. 2019 லிருந்து 2022 வரையிலான காலகட்டத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் ஆக இது அனுப்பி வைக்கப்பட்டது . இதேபோல ஸ்விகி நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் தான் சேவை வழங்கக்கூடிய நிறுவனங்கள் தான் இதனை ஏற்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூறியிருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலை பொறுத்தவரை உணவு டெலிவரி சேவைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டாயம் என்கிறது. இந்த நிறுவனங்கள் ஏற்கனவே வாடிக்கையாளர்களிடமிருந்து டெலிவரி கட்டணம் என்பதை வசூல் செய்வதால் இந்த ஜிஎஸ்டி வரியை செலுத்தும் பொறுப்பு நிறுவனங்களிடம் தான் இருக்கிறது என கூறுகிறது.
ஆனால் டெலிவரி சேவை வழங்கும் நிறுவனங்களோ வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறக்கூடிய டெலிவரி கட்டணம டெலிவரி ஊழியர்களுக்கு தான் வழங்கப்படுகிறது சில சமயங்களில் நாங்கள் வாடிக்கையாளரிடம் டெலிவரி கட்டணம் வாங்குவதில்லை தள்ளுபடி செய்து விடுகிறோம் இருந்தாலும் அதற்கு ஏற்றபடி நாங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு சம்பளம் வழங்கியாக வேண்டி இருக்கிறது என கூறுகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications