மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றான வெசுவியஸ் இந்தியா நிறுவனம் சூளைகள், உலைகள் மற்றும் பிற தொழில்துறை உபகரணங்களில் பயன்படுத்தப்படும் வெப்ப எதிர்ப்பு பொருளான ரெஃபரக்டரியின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதனுடன் டிவிடெண்ட் மற்றும் பங்கு பிரிப்பு நடவடிக்கையும் அறிவித்தது. இதனையடுத்து நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை 6 சதவீதம் உயர்ந்தது.
2024 டிசம்பர் காலாண்டில் வெசுவியஸ் இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.60 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் சிறிது அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.57 கோடி ஈட்டியிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் வெசவியஸ் இந்தியா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.509 கோடி ஈட்டியுள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.417 கோடியாக இருந்தது.

வெசுவியஸ் இந்தியா நிறுவனம் 2024 டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.14.50 டிவிடெண்ட் வழங்க உள்ளதாக அறிவித்தது. அதேசமயம் இது நிறுவனத்தின் எதிர்வரும் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் பெறுவதற்கான பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்கான பதிவு தேதியை 2025 மே 1ம் தேதியாக நிர்ணயம் செய்துள்ளது. 2025 மே 8ம் தேதி நடைபெறும் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் டிவிடெண்ட் வழங்குவதற்கு பங்குதாரர்கள ஒப்புதல் அளித்தால் டிவிடெண்ட் வழங்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெசுவியஸ் இந்தியா நிறுவனம் தனது பங்குகளை 1:10 என்ற விகிதத்தில் பங்கு பிரிப்பு செய்ய உள்ளது. அதாவது ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முகமதிப்பு கொண்ட 10 பங்குகளாக பிரிக்கப்பட உள்ளது. பங்கு பிரிப்பு நடவடிக்கைக்கு நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும் எதிர்வரும் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பங்கு பிரிப்புக்கு பங்குதாரர்கள் ஒப்புதலுக்கு உட்பட்டது. ஒப்புதல் வழங்கப்பட்டால் பங்குகள் பிரிக்கப்படும்.
நடுத்தர கால அளவில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. 2022 ஜூன் முதல் இதுவரையிலான காலத்தில் வெசுவியஸ் இந்தியா பங்கு முதலீட்டாளர்களுக்கு 300 சதவீதம் ஆதாயத்தை கொடுத்துள்ளது. இந்த காலத்தில் இப்பங்கின் விலை ரூ.1,028-லிருந்து தற்போதைய வர்த்தக விலையான ரூ.4,164 வரை அதிகரித்துள்ளது. 2024 செப்டம்பரில் இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.5,999ஐ எட்டியது. இருப்பினும் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது.
Story written: subramanian
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications