பொதுவாக எந்தவொரு நாட்டுக்கும் சுற்றுலா துறை வாயிலாக கணிசமான வருவாய் கிடைக்கும் மேலும் உள்ளூர் மக்களுக்கும் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் ஒவ்வொரு நாடும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், அண்மையில் இலங்கையும், தாய்லாந்தும் இந்திய பயணிகளை ஈர்க்கும் நோக்கில், தங்கள் நாட்டுக்கு வர விசா தேவையில்லை என்று அறிவித்தன.
இலங்கை அரசு தங்கள் நாட்டுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்பபதற்காக இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு இலவச விசா வழங்கப்படும் அறிவித்தது. மேலும், 2024 மார்ச் 31ம் தேதி வரை இது சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது என்று அந்நாடு அறிவித்தது.

தாய்லாந்து சுற்றுலா துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 நவம்பர் 10 முதல் 2024 மே 10ம் தேதி வரை தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. தாய்லாந்து வரும் இந்தியர்கள் 30 நாட்கள் விசா இல்லாமல் தங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை, தாய்லாந்தை தொடர்ந்து வியட்நாமும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் வியட்நாமை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்க. வியட்நாம் என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது கம்யூனிசம், போர்கள்.
ஆனால் ஆசிய நாடுகளிலேயே மிகவும் அழகான நாடு என்றால் அது வியட்நாம் தான். கடற்கரைகள், ஆறுகள், புத்த பகோடாக்கள், தங்க கைகள் பாலம், ஹோய் அன் நகரம், பான் ஜியோக் நீர்வீழ்ச்சி என பல பார்த்து ரசிக்க பல சுற்றுலா தலங்கள் அந்நாட்டில் உள்ளது.
வியட்நாமின் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் குயென் வான் ஹங் பேட்டி ஒன்றில், சுற்றுலாவை மீட்டெடுக்க சீனா மற்றும் இந்தியா போன்ற முக்கிய சந்தைகளுக்கு குறுகிய கால விசா தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
எனவே இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வர விசா தேவையில்லை என்று விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், சுவீடன் மற்றும் பின்லாநது ஆகிய நாட்டவர்களை மட்டுமே விசா இல்லாமல் வியட்நாமுக்கு செல்ல முடியும்.

2023ம் ஆண்டில் முதல் 10 மாதங்களில் (ஜனவரி-அக்டோபர்) வியட்நாம் சுமார் 1 கோடி சர்வதேச பயணிகளை வரவேற்றுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 4.6 மடங்கு அதிகமாகும் மற்றும் இந்த ஆண்டுக்கான இலக்கையும் விஞ்சியது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத மத்தியில், அனைத்து நாடுகளை சேர்ந்த தனிநபர்களுக்கும் இ விசாக்களை வழங்க தொடங்கியது. இது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் வியாட்நாமுக்கு அவர்கள் வந்து செல்ல அனுமதிக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications