தமிழ்நாடு அரசு ஏற்கனவே பெண்கள் தொழில் துவங்குவதற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் வேளையில், இத்திட்டத்தில் சில முக்கிய மாற்றங்களுடனும், தளர்வுகளுடனும் புதிய பெயரில் திட்டத்தை மேம்படுத்தி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 2 நாட்களில் பட்ஜெட் அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யப்பட இருக்கும் இத்தகவல் வெளியாரியுள்ளது.
அதாவது சுய உதவி குழுக்கள் மூலம் பயன் பெற முடியாத இளம் பெண்களுக்கு, பல்வேறு சமூகத்தை சேர்ந்த பெண்கள் தொழில் துவங்குவதற்காக தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடன் உதவியும், நிதியுதவியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பல்வேறு தளர்வுகளுடன் சிங்கப்பெண்கள் தொழில்முனைவோர் கடன் திட்டம் என்ற பெயரில் இத்திட்டத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி தமிழ்நாடு அரசு தற்போது கூட்டுறவு வங்கிகள் வாயிலாக விவசாயிகள், பெண்கள் சுய உதவிக்குழுக்கள், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என பல பிரிவினர்கள் சமுகத்திலும், வாழ்க்கையிலும் பின்தங்கியிருக்க கூடாது என்பதற்காக முந்தை அரசு மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் இத்திட்டத்தை பெரிய அளவில் ஆதரவு அளித்த வருகிறது.
இந்த நிலையில் ஜூலை 2 ஆம் தேதி முதல்வர் விஜய் தலைமையில் கூட்டுறவு அமைப்புகள் உடனான சந்திப்பில் Singapengal Entrepreneurship Credit Scheme திட்டத்தின் கீழ் இளம் தலைமுறை பெண்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினரில் இருக்கும் பெண்களுக்கு அளிக்கப்படும் கடன் திட்டத்தில் அளிக்கப்படும் கடனை 25 சதவீகம் வரையில் அதிகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
கடன் கொடுக்கும் அளவீட்டை 25 சதவீதம் அதிகரிப்பது குறித்து கூட்டுறவு வங்ககியின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளுக்குளும் உத்தரவும் கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 30 சதவீதம் பேர் புதிய நபர்களுக்கு கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்ற முக்கிய கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ளது.
விஜய்யின் தேர்தல் வாக்குறுதியில் பெண்கள் தொழில் துவங்குவதற்காக 5 லட்சம் வரையில் வட்டியில்லா கடன்களை அளிக்க வேண்டும் என்ற முக்கிய திட்டத்தை முன்வைத்திருந்தார், இத்திட்டத்தை புதன்கிழமை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் சிங்கப்பெண்கள் தொழில்முனைவோர் கடன் திட்டம் என்ற பெயரில் இத்திட்டத்தை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
