மும்பை: நாடு முழுவதும் செப்டம்பர் 6 மற்றும் 7ஆம் தேதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பங்குச்சந்தைகள் முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஈக்விட்டி (equity) பிரிவு மற்றும் ஈகிவிட்டி டெரிவேட்டிவ் (equity derivative) பிரிவுகள் மற்றும் செக்யூரிட்டி லெண்டிங் அண்ட் பாரோயிங் (Security Lending and Borrowing) பிரிவுகள் முழுமையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை செப்டம்பர் 5ஆம் தேதி அன்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவிலேயே முடிவடைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 151 புள்ளிகள் சரிவடைந்து 82,201 புள்ளிகள் என்ற அளவில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 54 புள்ளிகள் சரிவடைந்து வர்த்தகத்தின் முடிவில் 25,154 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது.
வியாழக்கிழமை அன்று பங்குச்சந்தையை பொறுத்தவரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டாடா மோட்டார்ஸ், நெஸ்லே, இந்தியா பாரதி ஏர்டெல் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. இவற்றின் பங்கு மதிப்புகள் சராசரியாக 1.41% வரை சரிவடைந்தன.
30 சென்செக்ஸ் பங்குகளில் 20 பங்குகள் சரிவிலேயே முடிவடைந்தன. அதே வேளையில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சுமார் 322 பங்குகள் தன்னுடைய 52 வார கால உச்சபட்ச மதிப்பை எட்டின. 30 பங்குகள் அதன் 52 வார கால குறைந்தபட்ச மதிப்புக்கு வீழ்ந்தன. மும்பை பங்குச்சந்தையை பொறுத்தவரை மொத்தம் உள்ள 4037 பங்குகளில் 2256 பங்குகளின் மதிப்பு வளர்ச்சியிலேயே இருந்தது.
அதே வேளையில் 1672 பங்குகள் சரிவிலும், 109 பங்குகளின் மதிப்புகள் மாறாமலும் முடிவடைந்தன. செப்டம்பர் 5ஆம் தேதியை பொருத்தவரை 398 பங்குகள் அப்பர் சர்க்கியூட் நிலையை எட்டின, 221 பங்குகள் லோயர் சர்க்கியூட் நிலைக்கு சென்றன. செப்டம்பர் 4ஆம் தேதி அன்று முதலீட்டாளர்கள் பலர் பங்குகளை விற்பனை செய்த நிலையில் வியாழக்கிழமை நிஃப்டி அதிலிருந்து மீண்டு வர முயற்சித்தது என பங்குச்சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வியாழக்கிழமை அன்று காலை வர்த்தகத்தில் நிஃப்டி 25,275 புள்ளிகளை எட்டியது. அப்போது பெரும்பாலான முதலீட்டாளர்கள் கிடைத்தவரை இலாபத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் வர்த்தகம் செய்ததால் காலையில் நிஃப்டி புள்ளிகள் ஏறி வர்த்தகம் முடியும் தருவாயில் சரிந்தது என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிவடைந்தது நிஃப்டின் ஒட்டுமொத்த புள்ளிகள் குறைவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications