அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Realbotics உலகிற்கு வழங்கிய AI ரோபோ ஆரியா தற்போது உலக கவனத்தை ஈர்த்து வருகிறது. நேற்று இரவு லாஸ் வேகாஸில் நடைபெற்ற நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் ஆர்யாவை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த ஏஐ 'காதலி'க்காக அந்நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
மனிதனைப் போன்ற துணையாக ஆர்யா சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளார். ஆர்யாவால் கிட்டத்தட்ட உயிருள்ள மனிதர்களை போன்ற முகபாவனைகளை வெளிப்படுத்தவும் ஆழமான மற்றும் முக்கிய தொடர்புகளை வழங்கவும் முடியும். ஆர்யா ஏற்கனவே 'AI Robot Girlfriend' என்ற பெயரைப் பெற்றது. ஆர்யாவின் விலை சுமார் 1.5 கோடி ($175,000) ஆகும்.
RealBotics CEO Andrew Kiguel கூறுகையில், இந்த ரோபோ தனிமையை எதிர்த்துப் போராடுவதையும், AI தோழர்களை மனிதர்களிடமிருந்து பிரித்தறிய முடியாததாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக பகிர்ந்து கொண்டார். உலகில் இதுவரை உருவாக்கப்பட்ட சிறந்த AI ரோபோக்களில் ஆர்யாவும் ஒருவர் என்று கூறப்படுகிறது. ஆர்யா ஒரு காதல் ஜோடியாக நடிக்க முடியும் என்றும், காதலன் அல்லது காதலி போல பழக முடியும் என்றும் கூறியுள்ளார்.

இந்த ஏஐ ரோபோ காதலி யதார்த்தமான முகபாவனைகளை உருவாக்கும் திறமை கொண்டதாகவும், கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கின் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் நடக்கக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், RealBotics முகபாவனைகளில் வைத்து சந்தையில் முதன்மை வகிக்க முயற்சிக்கிறது. இது தொழில்நுட்ப மாநாடுகளில் ஒரு முக்கிய ஈர்ப்பாக மாறிவிட்டதாக கூறியுள்ளார்.
5 பங்குக்கு 3 பங்கு ப்ரீ.. பென்னி ஸ்டாக் கொடுக்கும் பம்பர் ஆஃபர்.. 5 நாள்தான் டைம்..!!
ஆர்யாவின் யதார்த்தனமான முகபாவனைகளை காண இந்த ஏஐ தொழில்நுட்ப மாநாட்டில் நீண்ட வரிசை காணப்பட்டது. ஆர்யா தனது மனித உருவத்தை காட்டும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆர்யாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். நிறுவனம் ஆர்யாவில் RFID தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. டெஸ்லாவின் ஆப்டிமஸ் ரோபோ போன்ற பிற ரோபோ படைப்புகளுடன் இணைந்து ரோபாட்டிக்ஸ் முன்னேற்றத்தை ஆராயும் என்றும் RealBotics கூறியுள்ளது.
எதிர்காலத்தில் ரோபோவின் முகத்தை ரோபோ வைத்திருப்பவர்களால் தனிப்பயனாக்கப்படலாம். இது மக்களின் தனிமை மீதான வெறுப்பு மற்றும் மக்களிடையே உள்ள தூரத்தை அதிகரிக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆர்யாவின் தனிப்பயனாக்கக்கூடிய அம்சங்கள், சமூக நுண்ணறிவு மற்றும் உயிரோட்டமான தோற்றம் ஆகியவை நவீன உலகில் தோழமையில் நல்ல மாற்றத்தை கொண்டுவரும் என்று நிறுவனம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications