2024 டாடா ஐபிஎல் போட்டியில் விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூர் அணியை ஓடஓட விரட்டியது போல் தரமான வெற்றியைப் பதிவு செய்து, விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை ப்ளேஃஆப்-ல் இருந்து மொத்தமாக வெளியேற்றியது.
பெங்களூர் அணியின் தோல்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொண்டாடி வருகின்றனர். சமூகவலைத்தளத்தில் மீம், வீடியோ என கலாய்த்து தள்ளி வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அனல் பறந்தாலும் விராட் கோலி டி20 உலக கோப்பை போட்டிக்குப் பயிற்சி துவங்கும் முன்பு பெரும் பணத்தை சம்பாதித்துள்ளார்.

உலகளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் செலிப்ரிட்டியாகவும், பிரபல கிரிக்கெட் வீரராகவும் இருக்கும் விராட் கோலி மற்றும் நடிகையும் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோ டிஜிட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர்.
இந்த முதலீடு, கோ டிஜிட் நிறுவனத்தின் ஐபிஓ மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. கோ டிஜிட் நிறுவனம் இன்று மே 23 ஆம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.
கோ டிஜிட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.300 ஐ கடந்துள்ள நிலையில், இத்தனை நாள் தங்களது பங்குகளை விற்பனை செய்யாமல் வைத்திருந்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா-வின் முதலீடு நான்கு மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது.
இந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ரெட் ஹெரிங் ப்ராஸ்பெக்டஸ் (DRHP) அறிக்கையின்படி, விராட் கோலி ரூ.75 என்ற விலையில் 2,66,667 பங்குகளை வாங்கினார். இதன் மூலம் அவரது மொத்த முதலீடு ரூ.2 கோடி ஆகும். நடிகை அனுஷ்கா ஷர்மா ரூ.50 லட்சம் மதிப்பிலான 66,667 பங்குகளை வாங்கினார். இதன் மூலம், இந்த தம்பதியின் மொத்த முதலீடு ரூ.2.5 கோடியாக இருந்தது.
தற்போது பங்கு விலை ரூ.300 ஐ தாண்டியுள்ள நிலையில், விராட் கோலி முதலீடு செய்த ரூ.2 கோடி மதிப்பிலான பங்குகள் ரூ.8 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், அனுஷ்கா ஷர்மா முதலீடு செய்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பங்குகள் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், தற்போது அவர்களது 2.5 கோடி ரூபாய் முதலீட்டில் பெற்ற பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.10 கோடியாக உயர்ந்துள்ளது.
வியாழக்கிழமை (மே 23) தேதி தேசிய பங்குச் சந்தையில் (NSE) பட்டியலிடப்பட்ட கோ டிஜிட் பங்குகள், 5.15% பிரீமியத்தில் வர்த்தகமானது. இதன் வெளியீட்டு விலை ரூ.272 ஆக இருந்த நிலையில், பங்குச் சந்தையில் ரூ.286 என அதிகரித்துப் பட்டியலிடப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் (BSE) ரூ.281.1 என 3.35% அதிகரித்துப் பட்டியலிடப்பட்டது.
பட்டியலிடுவதற்கு முன்னதாக, பட்டியலிடப்படாத சந்தையில் கோ டிஜிட் பங்குகள் ரூ.25 பிரீமியத்தில் வர்த்தகமாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
கோ டிஜிட் நிறுவனம் புதிய பங்கு வெளியீடு மூலம் ரூ.1,125 கோடி முதலீட்டைத் திரட்ட திட்டமிட்டு இந்த ஐபிஓ வெளியிட்டது. இதற்கு சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்ததன் விளைவாக, இந்த ஐபிஓ கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமாக முதலீடுகள் குவிந்தது, இதன் எதிரொலியாகவே மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ப்ரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications