இதுக்கு மேல் நடத்த முடியாது.. உண்மையை போட்டுடைத்த வோடபோன் ஐடியா.. நெருக்கடியில் மத்திய அரசு

நாட்டின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம் வோடபோன் ஐடியா. இந்நிறுவனம் கடுமையான கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது. இருப்பினும், தட்டு தடுமாறி வணிகத்தை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், அரசு எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லையென்றால், நாங்கள் திவால் நடவடிக்கைக்கு செல்ல வேண்டியிருக்கும், 2025-26ம் நிதியாண்டுக்கு பிறகு எங்களால் செயல்பட முடியாது என்று மத்திய அரசாங்கத்திடம் வோடபோன் இந்தியா தெரிவித்துள்ளது.

கட்டண பாக்கி
அண்மையில் வோடாபோன் ஐடியா நிறுவனம் ஸ்பெக்ட்ரம் கட்டண பாக்கியின் ஒரு பகுதிக்காக, ரூ.36,950 கோடி மதிப்பிலான பங்குகளை மத்திய அரசுக்கு மாற்றியது. இதன் பிறகும், வோடாபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு ஏஜிஆர் மற்றும் ஸ்பெக்டரம் பாக்கி தொகையாக மொத்தம் ரூ.1.95 லட்சம் கோடி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

இதுக்கு மேல் நடத்த முடியாது.. உண்மையை போட்டுடைத்த வோடபோன் ஐடியா.. நெருக்கடியில் மத்திய அரசு

தற்போது நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டுமானால் அரசாங்கத்தின் கூடுதல் ஆதரவு தேவை என்று வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்நிறுவனம் கூறியிருப்பதாவது, நிறுவனத்தில் ரூ.26,000 கோடி முதலீடு செய்யப்பட்டது மற்றும் அரசாங்கத்துக்கு பங்குகள் மாற்றம் செய்யப்பட்டபோதிலும், வங்கிகளிடமிருந்து ஆதரவை பெறவில்லை. அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல், வங்கிகளிடமிருந்து நிதி (கடன்) பெறுவதில் முன்னேற்றம் காண முடியாது.

ஆதரவு
அரசாங்கத்தின் ஆதரவு இல்லையென்றால், 2025-26ம் நிதியாண்டுக்கு பிறகு நிறுவனத்தால் செயல்பட முடியாது. அரசாங்க ஆதரவு இல்லாத நிலையில், அரசாங்கத்தின் வசம் உள்ள வோடபோன் ஐடியா நிறுவன பங்குகளின் மதிப்பு பூஜ்யமாக குறையக்கூடும். இதன் விளைவாக, ரூ.1.8 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் நிலுவை தொகையை எங்களிடமிருந்து மீட்டெடுக்க முடியாது.

அரசாங்க ஆதரவு செயல்படவில்லையென்றால், நிறுவனம் தனது சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆர்) நிலுவைத் தொகையை செலுத்த தவறினால், நிறுவனம் திவால் நடவடிக்கைக்காக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று மத்திய அரசை வோடபோன் ஐடியா எச்சரிக்கை செய்துள்ளது.

ஏஜிஆர்
வோடபோன் ஐடியா, ஏஜிஆர் பாக்கிகளில் இருந்து கூடுதல் நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், ஏஜிஆர் தீர்ப்பால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக மேலும் நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் முடங்கி உள்ளது. ஏஜிஆர் மற்றும் ஸ்பெக்ட்ரம் பாக்கிகளை பங்குகளாக மாற்றிய பிறகு அரசாங்கம் இப்போது நிறுவனத்தில் ஒரு கூட்டாளியாக உள்ளது. அரசு வசம் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகள் உள்ளன.

கூடுதல் அரசாங்க ஆதரவு இல்லையென்றால் இந்த துறை சரிந்து விடும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வோடபோன் ஐடியா கோரிக்கை விடுத்துள்ளது. வரும் திங்கட்கிழமை (மே 19) இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

திவால் நடவடிக்கை
வோடாபோன் ஐடியா நிறுவனம் திவால் நடவடிக்கைக்கு சென்றால், 20 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் பாதிக்கப்படலாம். மேலும், வோடாபோன் ஐடியா நெட்வொர்க்கில் ஏற்படும் ஒரு இடையூறு மற்ற துறைகளிலும் தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் நாட்டின் டிஜிட்டல் லட்சியத்திலும் பின்னடைவை ஏற்படுத்தும்.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் வோடபோன் ஐடியா பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.94 சதவீதம் உயர்ந்து ரூ.7.37ஆக இருந்தது.

இன்ஃபோசிஸ் முதல் விப்ரோ வரை.. லட்சக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய ஐடி நிறுவனங்கள்.. விஷயம் இதுதாங்க.!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+