சென்னையில் நேற்று காலை தொடங்கி இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் தங்கத்தின் விலை மூன்று முறை மாற்றம் கண்டு இருக்கிறது. இதில் ஒருமுறை விலை குறைந்திருக்கிறது , இரண்டு முறை விலை உயர்வு கண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று காலை 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 70 ரூபாய் உயர்வு கண்டு 13,670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதுவே நேற்று மாலை தங்கத்தின் விலை சரிவடைந்து ஒரு கிராம் 13,350 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த சூழலில் இன்று காலை தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று மாலை நிலவரத்தோடு ஒப்பிடும்போது சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராம் 80 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று காலையிலிருந்து இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மூன்று முறை தங்கம் விலை மாறி இருக்கிறது. இதில் இரண்டு முறை விலை உயர்ந்திருக்கிறது. எனவே மீண்டும் தங்கத்தின் விலை ஏறுமுகத்தை நோக்கி செல்கிறதோ என்ற அச்சம் மக்களிடையே உண்டாகி இருக்கிறது.
சென்னை பொறுத்தவரை நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,06,800 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்றைய தினம் 640 ரூபாய் விலை உயர்ந்து 1,07,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 800 ரூபாய் விலை உயர்ந்து 1,34,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை உயர்வு கண்டிருக்கிறது. 24 கேரட் தூய தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 87 ரூபாய் உயர்ந்து 14,651 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 696 ரூபாய் விலை உயர்ந்த 1,17,208 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,200 ரூபாக்கும் ஒரு சவரனுக்கு 520 ரூபாய் விலை உயர்ந்து 89,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி இன்று வரையிலான இந்த ஐந்து நாட்களை பார்க்கும்போது ஆபரண தங்கத்தின் விலை மூன்று நாட்கள் குறைந்து இருக்கிறது, இரண்டு நாட்கள் விலை உயர்ந்திருக்கிறது. தங்கம் ஏமாற்றம் தந்தாலும் வெள்ளி விலை குறைந்து நிம்மதியை தந்துள்ளது. சென்னையில் வெள்ளியின் விலை இன்றைய தினம் ஒரு கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 245 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 15,000 ரூபாய் குறைந்து 2,45,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஈரான் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் கூறும் கருத்துகளும், அதற்கு நேர்மாறாக ஈரான் கூறும் கருத்துகளும் கச்சா எண்ணெய் விலைகளை ஏற்ற இறக்கத்துடன் வைத்துள்ளன, இது தான் தங்கம் விலையையும் ஏற்ற இறக்கத்திலேயே வைத்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications