எஸ்பிஐ அதிரடி: 30,000 ஊழியர்களுக்கு 'விஆர்எஸ்', புதிதாக 14,000 பேருக்கு வேலை..!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பல்வேறு நிர்வாக மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது 2 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இந்த முடிவால் ஸ்டேட் பாங்க் இந்தியா ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்திய வங்கிகள் வராக்கடன் உயரும் அபாயம், வர்த்தக சரிவு, வருமானத்தில் பெரிய இழப்பு என பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டும் வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் செலவுகளை குறைக்கவும், வர்த்தக செயல்முறையை மேம்படுத்தவும் 2 முக்கிய முடிவுகளை ஓரே நேரத்தில் எடுக்க முடிவு செய்துள்ளது.

விஆர்எஸ்

விஆர்எஸ்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக திகழும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது நிதி நிலையை மேம்படுத்த voluntary retirement திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சுமார் 30,190 எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் தகுதிப்பெற்றுள்ளதாகவும், இந்த முடிவை இறுதி ஒப்புதலுக்காக எஸ்பிஐ வங்கி நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மார்ச் 2020ஆம் முடிவில் நிதியாண்டு முடிவுகளில் வெளியிட்ட தகவல்கள் படி இவ்வங்கியில் தற்போது சுமார் 2.49 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள், இது கடந்த வருடம் 2.57 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விஆர்எஸ் திட்டம் 'Second Innings Tap VRS-2020' என அழைக்கப்படுகிறது.

25 வருட பணி

25 வருட பணி

இந்த விஆர்எஸ் திட்டம் எஸ்பிஐ வங்கியில் 25 வருட பணியாற்றவர்கள் அல்லது 55 வயதை நெருங்கியவர்களுக்கு கொடுப்பட உள்ளது. இதேபோல் பணியில் உயர் நிலையை அடை முடியாதவர்கள், குடும்பம் மற்றும் உடல்நல சூழ்நிலை காரணமாக பணியை விட விரும்பவோரும் இந்த விஆர்எஸ் திட்டத்தை தேர்வு செய்யலாம் என தெரிவித்துள்ளது எஸ்பிஐ நிர்வாகம்.

இத்திட்டம் உயர்மட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்தால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 28 வரையில் நடைமுறையில் இருக்கும்.

சேமிப்பு

சேமிப்பு

எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தற்போது அறிவித்துள்ள 'Second Innings Tap VRS-2020' திட்டத்தில் தகுதிப்பெற்ற 30,190 ஊழியர்கள் எண்ணிக்கையில் 30 சதவீதம் பேர் தேர்வு செய்து வெளியேறினால் கூட எஸ்பிஐ வங்கி நிர்வாகத்திற்கு 1,662.86 கோடி ரூபாய் அளவிலான நிதி சேமிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஊழியர்கள்

புதிய ஊழியர்கள்

ஒருபக்கம் செலவுகளை குறைக்க ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள நிலையில், மறுப்பக்கம் இந்த வருடம் புதிதாக 14,000 ஊழியர்களை பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது.

இது இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கி தரும் என தெரிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+