நாடி நரம்பு ரத்தம் எல்லாம் வர்த்தக நினைப்பு ஊறிப்போன ஒருவர் தொழிலில் எந்த அளவுக்கு பெரிய உச்சத்தை அடைவார் என்பதற்கு தேவிதா ஷராப்பின் உயர்வை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்திய மக்களுக்கு ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தவர்.
2019ல் பார்ச்சூன் இந்தியா வெளியிட்ட இந்தியாவின் சக்தி வாயந்த 50 பெண்கள் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்று இருந்தது. இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.1,800 கோடியாகும். இவரது வியு டெலிவிஷன்ஸ் நிறுவனம் இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமான டி.வி.க்களை விற்பனை செய்துள்ளது.

இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் உலகின் அதிகம் விற்பனையாகும் இந்திய டி.வி. பிராண்டாக விளங்குகிறது. வியு குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக தேவிதா ஷராப் உள்ளார்.
மும்பையில் மார்வாடி குடும்பத்தை சேர்ந்த ராஜ்குமார் ஷராப் தம்பதியினருக்கு மகளாக பிறந்து வளர்ந்தவர் தேவிதா ஷராப். இவருக்கு ஒரு சகோதரனும் உள்ளார். இவரது தந்தை ஜெனித் கம்ப்யூட்டர்ஸ் என்ற தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தை நடத்தி வந்தார்.
ராஜ்குமார் ஷராப் தனது மகள் மற்றும் மகனையும் அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போதே தனது அலுவலகங்கள், ஆலைகள் மற்றும் கூட்டங்களுக்கு அழைத்து செல்வார். இதனால் தேவிதா ஷராப் தனது 16 வயதிலேயே வர்த்தக நுணுக்கங்களை கற்க தொடங்கினார். வர்த்தகத்தில் தனது தந்தைக்கு உதவி செய்ய தொடங்கினார்.
இது ஒரு கட்டத்தில் நாமும் இந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று விருப்பத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தியது. சர்வதேச சந்தையை புரிந்துகொள்ள அமெரிக்கா சென்று படித்தார்.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் படித்தார். படிக்கும்போது, இந்திய நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுடன் போட்டியிட விரும்பினால் தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதை உணர்ந்தார். இந்திய நிறுவனங்கள் பட்ஜெட் நிறுவனங்கள் அதேசமயம் வெளிநாட்டு நிறுவனங்கள் பிரீமியம் நிறுவனங்கள் என்பதை தெரிந்து கொண்டார்.
பெரிய அளவில் ஏதாவது செய்ய, இந்தியாவில் புதிய தொழில்நுட்பத்துடன் முன்னேற வேண்டு்ம் என்பது அவருக்கு புரிந்தது. படிப்பு முடிந்து இந்தியா திரும்பியவுடன் இந்தியாவில் பிரீமியம் பொருட்கள் தயாரிப்பு வர்த்தகத்தில் ஈடுபட முடிவு செய்தார்.
2006ல் தனது 25 வயதில் வியு டெலிவிஷன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, தனது சொந்த தயாரிப்பு மேம்பாட்டு ஆய்வகத்தை உருவாக்கினார். அதில் தனது வர்த்தகத்திற்கான அனைத்து சொந்த கண்டுப்பிடிப்புகளையும் நடத்தினார். டி.வி. மற்றும் CPU கலந்த ஒரு அட்வான்ஸ்டு டிவியை தயாரித்தார்.
இதில், யூடியூப் மற்றும் ஓ.டி.டி. தளங்கள் போன்ற ஆப்ஸ்களை இதில் எளிதாக பயன்படுத்த முடியும். ஆரம்பத்தில் தேவிதாவின் அட்வான்ஸ்டு டி.வி.க்கள் மக்கள் மத்தியில் சென்றடையவில்லை. இருப்பினும் அவருக்கு தனது தயாரிப்பு மீது அதிக நம்பிக்கை இருந்தது. 2014ம் ஆண்டு வரை நம்பிக்கையுடன் பொறுமையாக 8 ஆண்டுகள் காத்திருந்தார்.
இந்த காலத்தில் அவரது வர்த்தகம் ஜீரோவிலிருந்து ரூ.30 கோடி அளவுக்கே வளர்ந்து இருந்தது. ஆனால் அதன் பிறகு அவர் தனது பழைய காலத்தை நினைத்து பார்க்கக் கூட நேரம் இல்லாத அளவுக்கு அவரது வர்த்தகம் ஜெட் வேகத்தில் வளர்ச்சி கண்டது.
தேவிதா ஷராப், வருவாய் வளர்ச்சியை விட லாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்தினார். சோனி, சாம்சங் மற்றும் எல்.ஜி. போன்ற பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடுவதில் அவர் கவனம் செலுத்தினார். இதனால் அவரது பிராண்ட் பிரீமியத்தை உருவாக்கியது, அவருக்கும் அதிக லாபம் கிடைத்தது. 2014ம் ஆண்டுக்கு பிறகான 4 ஆண்டுகளில் வியு டெலிவிஷன்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,000 கோடியை தாண்டியது.
தேவிதா ஷராப் தனது அனுபவத்தில் வர்த்தகத்தில் ஈடுபட விரும்பும் புதிய தலைமுறையினருக்கு அறிவுரையாக கூறுவது என்னவென்றால், வர்த்தகத்தில் வெற்றி பெற வேண்டுமானால் ரிஸ்க் எடுப்பது முக்கியம். நீங்கள் செய்ய விரும்பும் தொழில் இன்று இல்லாவிட்டாலும் நாளை நிச்சயமாக வேலை செய்யும் என்ற புரிதல் உங்களுக்கு இருந்தால், உங்களிடம் நிதி ஆதாரம் இருந்தால் நீங்கள நிச்சயமாக வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications