வாரன் பஃபெட்- நானும் படுக்கமாட்டேன், தள்ளியும் படுக்கமாட்டேன்..! சம்பளம், ஈவுத்தொகைக்கு பெரிய 'நோ'

வாரன் பஃபெட் தனது சொத்து பெரும் பகுதியை நன்கொடையாக கொடுத்த பின்பும் மனுஷன் 136 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 6வது பெரும் பணக்காரராக உள்ளார். இந்த நிலையில் வாரன் பஃபெட் சம்பளம் வேணுமான்னு கேட்டாலே தெறித்து ஓடுவாராம். ஏன் என்பதை சமுகவலைத்தளத்தில் நியன்டர் செய்த சுவாரஸ்ய பதிவு விளக்குகிறது.

வரி கட்டலாம், ஆனால் வரிக்கு வரி கட்டலாமோ? இப்பவே கண்ண கட்டுதே என டென்சன் ஆகவேண்டாம். விலாவாரியாக பேசலாம்
வாரன் பஃபெட்டின் கம்பனியில் ஒரு பங்குக்கு நூறு ரூபாய் நிகர லாபம் வருகிறது என வைத்துக்கொள்ளுங்கள்.

வாரன் பஃபெட்- நானும் படுக்கமாட்டேன், தள்ளியும் படுக்கமாட்டேன்..! சம்பளம், ஈவுத்தொகைக்கு பெரிய 'நோ'

அந்த நூறு ரூபாய்க்கு 30% வருமான வரி என வைத்துக்கொண்டால் மீதம் ரூ.70 இருக்கு, அந்த 70 ரூபாயில் 50% அளவை பங்குதாரர்களுக்கு டிவிடண்ட் (ஈவுத்தொகை) கொடுக்கிறார்கள், மீதத்தை கம்பனி வளர்ச்சிக்கு முதலீடு செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம்
அதாவது பங்கு ஒன்றுக்கு தலா ரூ 35 டிவிடன்ட் ஆக வரும்
இந்த ரூ 35 நமக்கு வருமானம்.

அமெரிக்காவில் கம்பனி சட்டபடி கம்பனி தனி, பங்குதாரர் தனி
அதனால் இந்த ரூ 35ல் இன்னொரு 30% அளவை அரசு வரியாக பிடுங்கிவிடும். அதாவது ரூ 12 காலி. ஆக நூறு ரூபாயில் ரூ 42 வரிக்கே போய்விட்டது. நம் கையில் இருப்பது ரூ 23 தான்
அந்த 23 ரூபாயை எடுத்துகொண்டு கடைக்கு போய் ஒரு சாண்ட்விச் சாப்பிட்டால் விற்பனை வரி என ஒரு 10% போய்விடும். ரூ 20 தான் கையில் இருக்கும். அதுவும் கையில் எங்கே இருக்கும் சாண்ட்விச் ஆக இருக்கும்.

நூறு ரூபாய் சம்பாதித்து கடைசியில் கையில் ரூ 20 இருந்தால் அது என்னவகை மினிமலிசம்? அதனால் தான் தலைவர் வாரன் பஃபெட்டின் கம்பனியில் டிவிடண்ட் கொடுக்கும் வழக்கமே இல்லை
கம்பனி துவக்கிய நாள் முதல் இன்று வரை பங்கு ஈவுதொகை எதுவும் கிடையாது. பங்கின் விலை ஏறுவதுதான் லாபம்.

1963ல் கம்பனியை வாங்குகையில் ஒரு பங்கின் மதிப்பு இந்திய ரூபாயில் ரு 646 இன்றைய தேதியில் ஒரு பங்கின் விலை ஜஸ்ட் ரூ.5 கோடி. ஒரே ஒரு பங்கின் விலை தான் ஐந்துகோடி ரூபாய்
பைசா டிவிடண்ட் இல்லை.

மேலும் கம்பனி சீஇஓ-க்களுக்கு சம்பளமும் உண்டு. ஆனால் சம்பளம் வாங்கினால் அதற்கும் 30% வரி கட்டவேண்டும், அதனால் தாத்தா வாரன் பஃபெட் சம்பளமும் வாங்குவதில்லை. ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் தான் சம்பளம் ( ரூ.85 லட்சம்) அவரது கம்பனியில் இருக்கும் ஒரு கணிணி பொறியாளருக்கு இதில் டபிள் மடங்கு சம்பளம் கிடைக்கும்.

ஆக சம்பளமும் இல்லாமல், டிவிடண்டும் இல்லாமல் ஆண்டுக்கு 1 லட்சம் டாலரில் எப்படி வாழ்க்கையை நடத்துகிறார் என எல்லாம் யோசித்து குழப்பமடைய வேண்டாம் அவர் மினிமலிஸ்ட். தினமும் காலையில் மெக்டானல்ட்ஸுக்கு போய் ரூ 180 அங்கே கிடைக்கும் சாஸேஜை தான் சாப்பிடுவார், பயன்படுத்திய பழைய காரைத் தான் வாங்குவார்.

அவரது வீடு 1958ல் வாங்கியது. அதில் தான் இன்னும் வசிக்கிறார்
பொழுதுபோக்கு என்பது ஞாயிறு அவர்கள் ஊரில் இருக்கும் வயதான கிழவர்களுடன் சேர்ந்து பிங்கோ ஆடுவது. அவரது கல்யாணம் அவரது ஊரில் எளிமையாக நடந்தது. ஊரில் இருக்கும் கடல் உணவகத்துக்கு எல்லாரையும் அழைத்துபோய் உணவு வாங்கிக்கொடுத்தார்
ஆக இப்படி செலவே பண்ணாமல் இருந்தால் சொத்து பெருகிக்கொண்டே போகும்.

"செலவே பண்ணாம அந்த காசை வெச்சு என்ன பண்ணபோறார்? இது எல்லாம் ஒரு பிசினஸ் பிஸ்தாக்கள் வாழ்க்கையானு டென்சன் ஆகவேண்டாம். இருந்த பணத்தில் ரியல் எஸ்டேட், ஏழெட்டு வீடு, நகை, தோட்டம், துரவுன்னு இருந்தால் அதை எல்லாம் கட்டிட்டு அழவேண்டும்.

அதுக்கு ஒரு தோலான், துருத்தியான்னு மேனேஜர், டிரைவர், மெசின்கன் ஏந்திய பாதுகாவாவலர்கள்னு கருப்பு பூனைகளுடன் உலா வந்துகொன்டு இருக்கவேண்டும். பழைய காரை எடுத்துகொன்டு, மெக்டானல்ட்ஸில் ஜாலியாக சாப்பிட்டுவிட்டு, ஊர் கிழவர்களுடன் பிங்கோ ஆடும் மகிழ்ச்சி அதில் வருமா?

அவரது வாழ்க்கையில் இருந்து இப்படி வரிகளில் இருந்து விடுதலை பெறுவது எப்படின்னு பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்
நான் வாரன் பஃபெட் நிலையில் இருந்தால் ஐம்பது வயதில் ஓய்வு பெற்று மெக்சிகோவில் ஒரு பீச்சில் ஜாலியாக வாக்கிங் போய்க்கொன்டு இருந்து இருப்பேன்.

கிழவருக்கு வாழ்க்கையில் என்ன சந்தோஷமோ அதை செய்து ஜாலியாக இருக்கிறார். அவ்வளவு தான். மனிதரின் வயது 93
அந்த வயது வரை வாழ முடிவதே பெரிய சாதனை தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+