பெரும்பாலான முதலீட்டாளர்கள் பெரிய நிறுவனங்களை பற்றி தகவல்களை அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால் அதிகம் அறியபடாத பல ஸ்மால்கேப் பங்குகள் நிலத்தில் புதைந்திருக்கும் புதையல் போன்றது.
அப்படிப்பட்ட அதிகம் வெளியே தெரியாத கிரீன் எனர்ஜி துறையை சேர்ந்த 3 நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஓரே ஆண்டில் மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளன. அந்த 3 நிறுவனங்களும் குறைந்த கடனை கொண்டவை என்பது முக்கியமானது.

கேபி எனர்ஜி லிமிடெட்: கேபி எனர்ஜி லிமிடெட் நிறுவனம் காற்றாலை டெவல்ப்மென்ட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்நிறுவனம் தனது கடனை குறைத்துள்ளது. இந்நிறுவனம் கடனை - ஈக்விட்டி விகிதத்தில் 0.4 ஆக குறைத்துள்ளது. அதேவேளையில், இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் சிறப்பாக உள்ளது.
2023 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 25 சதவீதம் அதிகரித்து ரூ.69.38 கோடியாக உயர்ந்துள்ளது. இதேகாலத்தில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.8.22 கோடி ஈட்டியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.825.50ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,839 கோடியாக உள்ளது.
கடந்த 6 மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை 168 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 365 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் தற்போது அது ரூ.4.65 லட்சமாக உயர்ந்திருக்கும்.
வெப்சோல் எனர்ஜி சிஸ்டம் லிமிடெட்: வெப்சோல் எனர்ஜி சிஸ்டம் லிமிடெட் நிறுவனம் சோலார் செல்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தனது கடனை ஈக்விட்டி விகிதத்தில் 0.14 ஆக குறைத்துள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து கடந்த சில காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
இருப்பினும் கடந்த 6 மாத காலத்தில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 230 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. உதாரணமாக 6 மாதத்துக்கு முன்பு முதலீட்டாளர் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது தற்போது ரூ.3.30 லட்சமாக உயர்ந்திருக்கும். கடந்த ஒராண்டில் இப்பங்கின் விலை 180 சதவீதம் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.275.20ஆக இருந்தது.
ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ்: ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனம் காற்றாலை செயல்பாடு மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கி வருகிறது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்நிறுவனம் தனது கடனை ஈக்விட்டி விகிதத்தில் 0.31 ஆக குறைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 23 சதவீதம் குறைந்து ரூ.47.39 கோடியாக சரிவடைந்துள்ளது. இருப்பினும் அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபமாக ரூ.5.76 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.8.21 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது.
ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை 132 சதவீதம் உயர்ந்தது. ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 183 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
அதாவது ஓராண்டுக்கு முன்பு இந்நிறுவன பங்கில் நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.2.83 லட்சமாக உயர்ந்திருக்கும். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.85 சதவீதம் குறைந்து ரூ.132.40ல் வர்த்தகமானது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications