இந்தியாவில் நவராத்திரி, கர்வா சௌத், தந்தேராஸ், தீபாவளி என வருடத்தின் முக்கியமான பண்டிகை அனைத்தும் அக்டோபர் மாதம் மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்ட நிலையில் நாட்டின் மொத்த வர்த்தக சந்தைக்கு இது மிகவும் சிறப்பான வர்த்தகமாக மாறியது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் அடுத்த மெகா விற்பனை காலம் நவம்பர் மாதம் முதல் துவங்கியுள்ளது.
நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலம் தான் இந்தியாவின் திருமண சீசன், இக்காலக்கட்டத்தில் நாடு முழுவதும் அதிகப்படியான திருமணங்கள் நடக்கும் காரணத்தால், தீபாவளி பண்டிகை முடிந்த உடன் இந்திய ரீடைல் சந்தையில் தீருமண சீசன் வர்த்தகத்திற்கு தயாராகியுள்ளது.

அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு (CAIT) கணக்கீட்டின்படி, இந்த வருட திருமண சீசனில் நாடு முழுவதும் சுமார் 48 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் நாடு முழுவதும் திருமணத்தை மையாக வைத்து நடைபெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 48 லட்சம் திருமணத்தில் டெல்லியில் மட்டும் சுமார் 4.5 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் டெல்லி பொருளாதாரத்திற்கு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தக பங்களிப்பு பெறும் என கணிக்கப்படுகிறது.
நவம்பர் 12 ஆம் தேதி தொடங்கும் திருமண சீசனுக்கு சில்லறை வியாபாரிகள் தயாராகியுள்ளனர். குறிப்பாக நகை கடைக்காரர்கள், டெக்ஸ்டைல் கடைகள் - உற்பத்தியாளர்கள், உணவு பொருட்கள், ஆட்டோமொபைல் துறை என பல முக்கியமான துறைகள் இந்த திருமண சீசனை மையமாக வைத்து வர்த்தகத்தை ஈர்க்க துவங்கியுள்ளனர்.

CAIT-ன் சமீபத்திய ஆய்வின்படி, சரக்கு மற்றும் சேவைகள் இரண்டையும் உள்ளடக்கிய ரீடைல் விற்பனை துறை இந்த பண்டிகை காலத்தில் மொத்த ரூ.5.9 லட்சம் கோடி டர்ன்ஓவர் அடைய வாய்ப்புள்ளது என கணித்திருந்தது. இதற்கு ஏற்றார் போல் ஈகாமர்ஸ் துறையின் வர்த்தகம் மட்டும் 1.1 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இந்தியாவில் திருமணங்கள் என்றால் தங்கம், வெள்ளி முக்கிய பங்கு வகிக்கும், இதனால் இந்த தீருமண சீசனில் அதிகப்படியான வர்த்தகத்தை கைப்பற்ற அனைத்து முன்னணி நகை கடைகளும் அதிகப்படியான விளம்பரங்களையும், சலுகைகளையும் அளித்து வருகிறது.
தற்போது சந்தையில் தங்கம் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மாற்று முறையில் பரிசுகளையும், கிஃப்ட்களையும் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்த வருடம் வெள்ளி, ரியல் எஸ்டேட், வாகனங்கள், வைப்பு நிதி, பங்குச்சந்தை முதலீடு வாயிலாக கிஃப்ட் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications