இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியும், மக்களின் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் வொர்க் பரம் ஹோம் கலாச்சாரத்தை மக்களும், ஊழியர்களும் மிகவும் எளிதாகக் கையாண்டு உள்ளனர்.
குறிப்பாக ஆக்சென்சூர் நிறுவனத்தின் மேம்பட்ட டிஜிட்டல் திறன் மூலம் இன்னும் எளிதாகக் கையாண்டுள்ளது என இந்நிறுவனத்தின் உயர் நிர்வாக இயக்குனர் ரேகா மேனன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் மற்றும் லாக்டவுன்
கொரோனா மற்றும் லாக்டவுன் நேரத்தில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வர்த்தக வளர்ச்சி குறித்துப் பேசிய ரேகா மேனன், 2020ல் இந்தியாவில் கொரோனா காலத்தில் வைரஸ் தொற்றுக் காரணமாக வர்த்தகச் சந்தை முடங்கிய நிலையிலும், நிறுவனத்தின் மேம்பட்ட டிஜிட்டல் சேவை திறனின் வாயிலாகத் தனது நிறுவனமும், ஊழியர்களும் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் வர்த்தகத்தைச் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைத்தாகக் கூறியுள்ளார்.
சிறு நகரங்களுக்கு ஜாக்பாட்
இந்தியாவில் பெரும் நகரங்களில் மட்டுமே அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருந்த நிலையில் வொர்க் பரம் ஹோம் மூலம் நாட்டின் சிறு நகரங்களில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகப்பட்டு உள்ளது. குறிப்பாக வேலைவாய்ப்பில் flexibility-ஐ விரும்பும் கோடிக்கணக்கான மக்களுக்கு வொர்க் பரம் ஹோம் மிகப்பெரிய அளவில் சாதகமாக அமைந்துள்ளது.
உண்மையில் வொர்க் பரம் ஹோம் சிறு நகரங்களுக்கு ஒரு ஜாக்பாட் தான்.
வர்த்தக விரிவாக்கம்
இதுமட்டும் அல்லால் தற்போது பல ஐடி நிறுவனங்கள் இந்தியாவில் சிறு நகரங்களுக்குத் தனது வர்த்தகத்தையும், அலுவலகத்தையும் விரிவாக்கம் செய்து வருகிறது. இதில் குறிப்பாக ஹெச்சிஎல் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் பல மாநிலங்களில் சிறு நகரங்களில் தனது அலுவலகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
பெண்களுக்கு ஜாக்பாட்
வொர்க் பரம் ஹோம் அமைப்பின் மூலம் அதிகளவிலான பெண்கள் வேலைவாய்ப்பு சந்தைக்கு வந்துள்ளனர். குடும்பம், குழந்தை எனப் பல்வேறு காரணங்களுக்காக வேலைவாய்ப்பை இழந்த பல லட்ச பெண்கள் மீண்டும் வேலைவாய்ப்பு சந்தைக்குள் வர முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
WFH பிரச்சனை
ஆனால் அதேவேளையில் ஊழியர்கள் மத்தியிலான நம்பகத்தன்மையை மேம்படுத்தவும், பெண்களுக்கு இருக்கும் கூடுதல் சுமை (வேலை மற்றும் குடும்பம்) ஆகியவற்றைக் குறைக்கவும் ஒரு வடிவமைப்பை உருவாக்க வேண்டும். இதற்கு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் தொழிற்துறை, அரசு, சமூகம் என அனைத்து பிரிவின் தலையீடும் அவசியமாக உள்ளது.
டிசிஎஸ் அதிரடி
இதேவேளையில் ஆக்சென்சூர் நிறுவனத்தைப் பின்னுக்குத்தள்ளி உலகிலேயே அதிக மதிப்புடைய ஐடி நிறுவனமான உருவெடுத்துள்ளது. இன்று அதிகளவிலான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் வர்த்தக முடிவில் 0.30 சதவீதம் சரிந்து 3,290 ரூபாய் விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications