பானி பூரி முதல் கிரில் சிக்கன் வரை.. இந்தியாவின் டாப் 10 புட் ஸ்ட்ரீட்.. விலை நிலவரம் எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய காலமாக தெருவோர உணவு கலாச்சாரம் என்பது மிக வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. மக்களும் அதிகளவில் விரும்பத் தொடங்கியுள்ளனர். கிராமங்கள் முதல் மெட்ரோ நகரங்கள் வரையில் ஆங்காங்கே புற்றீசல் போல புதுபுது ஸ்ட்ரீட் உணவகங்கள் தோன்றுகின்றன.

 

இவற்றின் ருசி மிக அபாரமான ஒன்றாக உள்ளது. அதன் விலையும் சற்று மலிவான ஒன்றாக உள்ளது. இதுவே மக்கள் மத்தியில் இந்த தெருவோர கடைகள் எளிதில் பிரபலமாக காரணமாக அமைந்துள்ளது.

இப்படி மக்கள் மத்தியில் அதிகம் விருப்பப்படும் 10 ஸ்ட்ரீட் உணவகங்களை கொண்ட சிறந்த 10 வீதிகள் எது? இங்கு விலை விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

 கோடிகளில் புரளும் தென்னிந்திய நடிகைகள்... யார் டாப் தெரியுமா? கோடிகளில் புரளும் தென்னிந்திய நடிகைகள்... யார் டாப் தெரியுமா?

திண்டி பீடி (பெங்களூரு)

திண்டி பீடி (பெங்களூரு)

பெங்களூரு விவிபுரத்தில் அமைந்துள்ள இந்த இடம் உணவு பிரியர்களின் சொர்க்கமாகும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தொடங்கப்படும் இந்த கடைகள் திறக்கப்பட்டு, இரவு வரையில் மக்களை மகிழ்விக்கும் ஒரு உணவகங்களாக உள்ளன. இந்த திண்டி பீடி, தெருவோர உணவகத்திற்கு பேர்போன ஒன்றாக உள்ளது. இங்கு பொடி தோசை, சாக்லேட் பானி பூரி என பல உணவுகள் இங்கு ரொம்ப பிரபலம். இங்கு இந்திய உணவு முதல் சீனா உணவுகள் வரையில் பலவும் கிடைக்கும். விலை 10 ரூபாயில் இருந்து ரூ.100 வரையில் உள்ளது.

கார்டர் சாலை காவ் கல்லி, மும்பை

கார்டர் சாலை காவ் கல்லி, மும்பை


மக்கள் விரும்பும் ஷவர்மா முதல் தோசை வரையில் பல உணவுகள் இங்கு பிரபலம். இது மும்பையில் பிரபலமான உணவுகள் அனைத்தும் இந்த வீதிகளில் கிடைக்கிறது. விலையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற ஒன்றாக உள்ளது. இங்குள்ள இனிப்புகளும், பிரை அயிட்டங்களும் பிரபலமானது. லஸ்ஸி டே பரோத்தாவிலிருந்து, இறைச்சி வகைகளும் கிடைக்கிறது. கீழ்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் விரும்பும் வகையில் பல வகையான கடைகள் உள்ளன.

பிப்லோட் நைட் பஜார், சூரத்
 

பிப்லோட் நைட் பஜார், சூரத்

குஜராத்தின் சூரத்தில் உள்ள இந்த இரவு நேர தெருவோர உணவகங்களை, அந்த பகுதியில் அறியாத மக்கள் இருக்க முடியாது. பலர்தரப்பட்ட உணவகங்கள் அப்பகுதியில் நிறைந்துள்ளன. இந்த உணவகங்கள், இனிபகங்கள், பல விதமான ருசியில் ஐஸ் க்ரீம், பலூடா என மக்களுக்கு பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்த தெருவோர உணவகங்களில் விலையும் மக்கள் விரும்பும் ஒன்றாக உள்ளது. இங்கு விலைவாசியானது வெறும் 20 ரூபாயில் ஆரம்பிக்கின்றது.

செளகார்பேட், சென்னை

செளகார்பேட், சென்னை

சென்னையின் மிக பிரபலமான பிசியான இடங்களில் செளகார் பேட்டையும் ஒன்று. இது ஷாப்பிங்கிற்காக மட்டும் அல்ல, இது மக்களுக்கு பிடித்தமான தெருவோர உணவகங்கள் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள சீனா பாய் கடை மிக பிரபலமாகும். இங்குள்ள உணவுகளின் விலை 50 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது. இங்கு மக்களுக்கு பிடித்தமான கச்சோரி முதல் சான்ட்விச்சகள வரையில் அங்கு விற்பனை செய்யப்பட்டாலும், சீனாபாய் கடையில் விற்பனை செய்யப்படும் பல வகையான தோசை இங்கு மிக பிரபலமாகும்,

சரஃபா பஜார். இந்தூர்

சரஃபா பஜார். இந்தூர்

சரஃபா பஜார். இந்தூரில் உள்ள பரபரப்பான இரவு உணவு சந்தைகளில் ஒன்றாகும். இங்கு வட இந்திய மற்றும் தென் இந்திய உணவுகளின் மையமாக உள்ளது. பெரும் நகை கடைத் தெருவாக மட்டு அல்ல, சிறந்த உணவக தெருவாகவும் உள்ளது. விலையும் பலதரப்பு மக்களுக்கும் ஏற்ற ஒன்றாக இருந்து வருகின்றது.

டிஎல்ஜி -  ஹைத்ராபாத்

டிஎல்ஜி - ஹைத்ராபாத்

ஹைத்ராபாத்தில் நிஜாம்கள், முகலாயர்காள் மற்றும் குதுப் ஷாஹிகள் போன்ற பல வம்சங்களை கொண்டுள்ளது. அதன் உணவு கலாச்சார உணவுகள் நாடு முழுவதும் விரும்பும் ஒன்றாக உள்ளது. இப்படிப்பட்ட நகரில் அமைந்துள்ள இந்த டி எல் ஜி தெருவோர உணவகத்தில் பல வகையான அசைவ உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த கடை 5 மணி வரையில் கூட திறந்துள்ளது.

 சாந்தினி செளக், டெல்லி

சாந்தினி செளக், டெல்லி

ஆடைகள், நகைகள், பழங்காலப் பொருட்கள் மற்றும் உணவுகளுக்கான ஒரு தெருவாக உள்ளது. பல்வேறு கடைகளை கொண்ட ஒரு தெருவாக உள்ளது. இது மக்களுக்கு விருப்பமான ஷாப்பிங் இடமாகவும், அங்கு மக்கள் விரும்பி உண்ணும் உணவுகளும் உள்ளன. இங்கு பல தெருவோர உணவகங்களும் உள்ளன.

SM வீதி; கோழிகோடு

SM வீதி; கோழிகோடு

கோழிக்கோடு பகுதியில் அமைந்துள்ள எஸ் எம் விதி மிட்டாய் வீதி என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள கறுப்பு அல்வா மிக பேர்போனது எனலாம். இங்கு 50 வகையான சுவைகளில் அல்வா தயாரிக்கப்படுகிறது. இது மக்களுக்கு பிடித்தமான ஒன்றாக உள்ளது. இங்கு விலை கிலோவுக்கு 110 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது.

மஹிம் காவ் கல்லி, மும்பை

மஹிம் காவ் கல்லி, மும்பை

முன்னதாக பலமியா சாலை என்று அழைக்கப்பட்ட இந்த ட்ரீட் லேன், ஒவ்வொரு ரம்ஜான் மற்றும் ஈத் பண்டிகையிலும் அதன் காரமான மற்றும் சுவையான உணவுப் பொருட்களை கொண்டுள்ளது. அசைவ உணவுகளை வழங்குகிறது. பலூடா, குல்ஃபி மற்றும் பல வகையான உணவு பொருட்களை கொண்டுள்ள இந்த வீதி, மக்களுக்கு மும்பையில் பிடித்தமான பகுதிகளில் ஒன்றாகும்.

ட்ரெட்டா பஜார், கொல்கத்தா

ட்ரெட்டா பஜார், கொல்கத்தா

கொல்கத்தா கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும், மக்களை ஒன்றினைக்கும் ஒன்றாகவும் உள்ளது. இங்கு பெங்காலி உணவுகளைத் தவிர, பல இனிப்புகளையும் கொண்டுள்ளது, இங்கு நகரத்தில் பல சுவாரஸ்யமான உணவு பொருட்கள் உள்ளன. ஓல்டு சைனா டவுன் என அழைக்கப்படும் இந்த நகரம் சீன உணவுகளை அறிமுகப்படுத்திய நகரங்களில் ஒன்றாகும். இங்கும் உணவுகளின் விலை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the 10 best food street in india for a foodies day out? How much does it cost?

What are the 10 best khau gallis in india for a foodies day out? How much does it cost?/இந்தியர்கள் மிக விரும்பும் ஸ்ட்ரீட் உணவுகளை கொண்ட வீதிகள் எது... விலை நிலவரம்?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X