Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலையானது சமீபத்திய வாரங்களாக அதிக ஏற்ற இறக்கத்தை கண்டு வரும் நிலையில், இந்த வருடம் அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க முடியுமா என்ற கவலை பலரின் மத்தியிலும் காணப்படுகிறது. கவலையே வேண்டாம், விலை ஏறினாலும் சரி, உங்கள் பட்ஜெட் மாறாமல் தங்கம் வாங்க நகைக்கடைகள் இப்போது ஒரு சூப்பர் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளன. அதுதான் கோல்டு பிரைஸ் லாக் (Gold Price Lock) அல்லது விலை பாதுகாப்பு (Price Protection) சலுகை.

அட்சய திருதியை அன்று தங்கம் விலை சவரனுக்கு ஆயிரக்கணக்கில் உயர்ந்தாலும், நீங்கள் இன்று என்ன விலைக்கு முன்பதிவு செய்கிறீர்களோ, அதே விலைக்கு நகைகளை வீட்டுக்கு எடுத்து செல்லலாம். ஒருவேளை அன்றைய தினம் விலை குறைந்தால்? கவலையே வேண்டாம், குறைந்த விலையில் நீங்கள் நகையை பெற்றுக் கொள்ளலாம். விலை ஏறினால் பழைய விலை. விலை இறங்கினால் புதிய விலை என வாடிக்கையாளர்களுக்கு இரட்டை லாபம் தரும் இந்த அதிரடி திட்டம் எப்படி செயல்படுகிறது? எந்தெந்த முன்னணி நகைக்கடைகள் இந்த சலுகையை வழங்குகின்றன?
அட்சய திருதியை 2026 -ல் புத்திசாலித்தனமாக தங்கம் வாங்குவது எப்படி? முழுமையான வழிகாட்டி இதோ..

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலையில் காணப்படும் ஏற்ற இறக்கத்தின் மத்தியில், நகைக் கடைக்காரர்கள் தங்களது விற்பனையை அதிகரிக்க பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக வரவிருக்கும் ஏப்ரல் 19 அன்று கொண்டாடப்படவுள்ள அட்சய திருதியை 2026 -ஐ தொடர்ந்து பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் மிகப்பெரிய நாடான இந்தியாவில், தங்கம் என்பது உணர்ச்சிகரமான முதலீடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. நமது பாரம்பரியத்துடன் தொடர்புடைய தங்கம், அஸ்தஸ்தின் சிறந்த அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் அட்சய திருதியை முன்னிட்டு கிஷ்னா டைமண்ட் அண்ட் கோல்ட் ஜூவல்லரி, தங்கம் விலை பாதுகாப்பு திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகைக்கு முன்பே நகைகளை வாங்குவதை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் வாங்கிய பிறகு நகை விலை உயர்ந்தாலும் வாடிக்கையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை, மேலும் அட்சய திருதியை போன்ற விசேஷ நாட்களில் கூட்டமாக இருந்தாலும் அதை பற்றி அஞ்சத் தேவையில்லை. பொறுமையாக தங்களுக்கு பிடித்தமான நகைகளை தேர்வு செய்து, அதை இப்போதே உறுதி செய்து கொள்ளலாம். இது விலை ஏற்றத் தாழ்வுகளில் இருந்து பாதுகாப்பான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. பிடித்த நகைகளில் விரும்பிய நாளிலும் வாங்க உதவுகிறது.

Also Read

இந்த சலுகையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கத்தின் விலையில் 25% செலுத்தி விலையை லாக் செய்து கொள்ளலாம். இந்த திட்டமானது ஏப்ரல் 19 வரையில் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த 19ம் தேதிக்குள் விலை குறையும் நாளில் சென்று உங்கள் விலையை லாக் செய்து கொள்ளலாம். இது விலையேற்றத்தில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பும் அளிக்கும்.

இந்த திட்டமானது சர்வதேச சந்தையில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியில் வந்துள்ளது. குறிப்பாக திருமண விழா போன்ற பண்டிகை காலத்திற்காக வாங்க நினைப்பவர்களுக்கு உதவலாம். இதில் சலுகையும் கிடைக்கும். ஒரு நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.

Recommended For You

இது குறிப்பிட்ட இந்த நிறுவனத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பல்வேறு நகை கடைகள் இதுபோன்ற ஏராளமான சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஆக உங்களுக்கு அட்சய திருதியை நாளில் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இதுபோன்ற சலுகைகளை பயன்படுத்தி, நம்பிக்கையான கடைகளில் புக் செய்யலாம். விலையும் குறைவாக கிடைக்கும். கூட்டம் குறைவு என்பதால் பொறுமையாக பிடித்ததையும் வாங்க முடியும்.

இன்றைய சூழலில் ஆபரண தங்கம் விலையானது சென்னையில் கிராமுக்கு 13,950 ரூபாயாகவும், சவரனுக்கு 1,11,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே 18 கிராம் தங்கம் விலையானது கிராமுக்கு 11,635 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 255 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+