டெல்லி: இத்தனை ஆண்டுகளாக தனித்தனியாக இயங்கி வந்த ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி பேங்க் ஆகிய இரு வங்கிகள் இப்போது ஒரே நிறுவனமாக இணைந்து செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் முக்கிய நிறுவனங்களான ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஒரே நிறுவனமாக இணைய உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்றைய தினம் இந்த இரு நிறுவனங்களும் இணைந்துள்ளன.

வீட்டுக் கடன் வழங்கும் ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (HDFC) மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை இன்று ஒரே நிறுவனமாக இணைவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது..
வங்கிகள் இணைப்பு: இந்த இணைப்பிற்குப் பிறகு அவை ஹெச்டிஎப்சி வங்கி என்றே அழைக்கப்படும். இதற்கான ஒப்புதலை போர்ட் அளித்துள்ள நிலையில், இன்று முதல் இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக இணைந்து செயல்பட உள்ளது. இந்த நிறுவனங்களின் ஒப்புதலுக்குத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் மும்பை-பெஞ்ச் கடந்த மார்ச் 17ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது.
மேலும், வணிக ஆவணங்களை ஹெச்டிஎப்சி என்பதில் இருந்து ஹெச்டிஎப்சி பேங்க் என மாற்றும் பதிவு தேதியாக ஜூலை 7ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடன் பத்திரங்களும் மாற்றப்படும். இந்த இணைப்பிற்குப் பிறகு உலகின் 4ஆவது மிகப் பெரிய வங்கியாக ஹெச்டிஎப்சி பேங்க் உருவெடுக்கும்.
ரெக்கார்ட் டேட்: எச்டிஎஃப்சி வங்கியின் இயக்குநர்கள் குழுவுடன் கலந்தாலோசித்ததில், எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகளை "வெளியிடப்படும் மற்றும் ஒதுக்கப்படும்" எச்டிஎஃப்சியின் பங்குதாரர்களைத் தீர்மானிக்க ஜூலை 13 ஆம் தேதியை "பதிவு தேதி" என்று தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. ஹெச்டிஎப்சி வங்கியின் பெயரில் கார்ப்பரேஷனின் வாரண்டுகளைத் தொடர ஜூலை 13 ரெக்கார்ட் டேட்டாக நிர்ணயம் செய்துள்ளனர்.
மேலும், வணிக ஆவணங்களை ஹெச்டிஎப்சி என்பதில் இருந்து ஹெச்டிஎப்சி பேங்க் என மாற்றும் பதிவு தேதியாக ஜூலை 7ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடன் பத்திரங்களும் மாற்றப்படும். இந்த இணைப்பிற்குப் பிறகு உலகின் 4ஆவது மிகப் பெரிய வங்கியாக ஹெச்டிஎப்சி பேங்க் உருவெடுக்கும்.
என்ன சொல்கிறார்: இது குறித்து ஹெச்டிஎப்சி பேங்க் சிஇஓ சஷிதர் ஜகதீஷன் கூறுகையில், "இது எங்கள் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய நிகழ்வாகும். இனி மேலும் சிறப்பான ஒரு ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் கொடுக்க முடியும். இது உண்மையிலேயே மகிழ்ச்சியான ஒரு தருணம். ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் திறமையான குழுவை எங்களுடன் இணைப்பதில் உண்மையிலேயே மகிழ்ச்சி" என்று அவர் தெரிவித்தார்.
இந்த இரு நிறுவனங்களையும் ஒன்றிணைப்பது தொடர்பான அறிவிப்பு கடந்தாண்டு ஏப்ரல் 4ஆம் தேதி முதலில் வெளியானது. அதைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இப்போது தான் இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன. ஹெடிஎப்சி வங்கியின் 41% வங்கிகள் இப்போது ஹெச்டிஎப்சி வசம் செல்கிறது. அதன் அடிப்படையில் பங்குகளும் வழங்கப்படுகிறது.
உங்கள் சேமிப்பு என்ன ஆகும்: ஹெடிஎப்சி (HDFC LTD) நிறுவனத்தில் நீங்கள் பிக்ஸ்ட் டெபாசிட் செய்து வைத்திருந்தால், அந்த பிக்ச்ட் டெபாசிட் காலம் முடியும் வரை அதே வட்டி விகிதத்தில் வட்டி தரப்படும். அதேநேரம் மெட்சுரிட்டி அடையும் போது, உங்களுக்கு இரண்டு ஆப்ஷன் வழங்கப்படும். ஒன்று பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
அல்லது டெபாசிட்டை ஹெச்டிஎப்சி வங்கிக்கு மாற்றிக் கொள்ளலாம். டெபாசிட்டை ஹெடிஎப்சி வங்கிக்கு மாற்றினால், அதன் வட்டி விகிதம் குறையும். ஏனென்றால் NBFC எனப்படும் ஒரு வங்கி சாராத நிதி நிறுவனம் அளிக்கும் வட்டியை விட வங்கி அளிக்கும் வட்டி எப்போதும் குறைவாகவே இருக்கும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications