இந்தியா தனக்கு தேவையான தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் ஆகிய இரண்டு பொருட்களையுமே வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் ஆகிய இரண்டையும் இறக்குமதி செய்வதற்கு இந்தியா அமெரிக்க டாலரை தான் கொடுக்க வேண்டி இருக்கிறது.
தற்போது ஈரானி போர் நடைபெற்று வருகிறது இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரத்து நின்று போய்விட்டது. இதனால் மற்ற நாடுகளிடமிருந்து தான் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது. முன்பை விட தற்போது கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துவிட்டது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுவிட்டது. எனவே இதற்கு முன்பு இருந்ததை விட பல மடங்கு ரூபாயை செலவு செய்து அமெரிக்க டாலரை வாங்கி நாம் கச்சா எண்ணெய் வாங்கி பெட்ரோல், டீசலாக சுத்திகரித்து பயன்படுத்த வேண்டி இருக்கிறது.

அதே வேளையில் தங்கத்தின் விலை குறைந்திருப்பதால் ஏராளமான மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கம் வாங்குகிறார்கள். அந்த வகையில் நம் கைவசம் இருக்கக்கூடிய டாலர் அத்தியாவசிய பொருளான கச்சா எண்ணெய் வாங்குவதற்கு மட்டுமில்லாமல் தங்கம் வாங்குவதற்கும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. கைவசம் இருக்கக்கூடிய பணத்தை நாம் அத்தியாவசிய பொருளான கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தான் பயன்படுத்த வேண்டும் எனவே பொதுமக்கள் அடுத்த ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்தியா ஒரு ஆண்டுக்கு 800 டன் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. திடீரென இந்தியர்கள் தங்கம் வாங்குவதை நிறுத்திவிட்டால் உலக சந்தையில் தங்கத்தின் விலை பெருமளவு குறையும். ஏனெனில் உலக சந்தையில் 800 டன்களுக்கான தங்கத்தின் டிமாண்ட் என்பது குறைகிறது. எனவே உலக சந்தையில் வழக்கத்தை விட கூடுதலாக தங்கம் இருக்கும் அதாவது தங்கம் சர்பிளஸாக ஆக இருக்கும் இதனால் தங்கத்தின் விலை பெருமளவு குறையும்.
இந்தியர்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தினால் தங்கம் இறக்குமதி நின்று போகும், இதனால் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை சரி செய்யப்படும். நம் இந்திய ரூபாயின் மதிப்பை பாதுகாப்பதற்கும் உதவும். எனவே பொதுமக்கள் தங்கம் வாங்குவதை குறைப்பது தான் சிறந்த முடிவு. ஏனெனில் இந்தியா உலக அளவில் இரண்டாவது பெரிய தங்க இறக்குமதியாளர் ,இரண்டாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக உள்ளது.
நம் கைவசம் இருக்கக்கூடிய பெருமளவிலான அமெரிக்க டாலரை பாதி தங்கம் கொள்முதல் செய்வதற்கும் பாதி கச்சா எண்ணெய் வாங்குவதற்கும் பயன்படுத்துகிறோம் என வைத்துக்கொள்வோம். அப்படி பார்க்கும்போது அந்தப் பாதித்தொகை நமக்கு மிச்சமாகும். அதாவது ஓராண்டு காலத்திற்கு நாம் தங்கத்தை இறக்குமதி செய்யாமல் இருந்தால் வெளிநாட்டு கரன்சி கையிருப்பில் நம்மால் 60 இலிருந்து 70 பில்லியன் டாலர்கள் வரை சேமிக்க முடியும். இதனால் நம் கைவசம் டாலர் இருப்பு அதிகமாகும் இந்திய ரூபாயின் மதிப்பு வலுப்பெறும்.
டாலரைக் கொண்டு நாம் இன்னும் தேவையான கச்சா எண்ணெயை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள முடியும். ஆனால் தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்தும்போது இந்தியாவில் மிகப்பெரிய ஒரு தொழில் துறையே முடங்கி போகும். நகை மற்றும் நவரத்தினங்கள் துறை இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் இந்த துறையில் வேலை செய்கிறார்கள். நகை தயாரிப்பில் தொடங்கி நகை விற்பனை வரை ஒரு கோடி பேர் வேலை இழக்கும் சூழல் உண்டாகலாம்.


Click it and Unblock the Notifications

