டெல்லி: இந்தியாவின் முதுகெலும்பாக வேளாண்மையும் விவசாயிகளும் தான் இருக்கிறார்கள். நாட்டில் வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காப்பீடு திட்டங்கள் மற்றும் பல்வேறு மானியங்கள் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன.
தன் தான்யா கிரிஷி யோஜனா: இந்த நிலையில் நாட்டில் வேளாண்மையில் பின்தங்கியிருக்கும் 100 மாவட்டங்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு தன் தான்யா கிரிஷி யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. 2025- 26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் மாவட்ட அளவில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக பிரதமர் தன் தான்யா கிரிஷி யோஜனா என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தார் .

24,000 கோடி மதிப்பு: இதற்கு தான் தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு தொடங்கி அடுத்த ஆறு ஆண்டு காலத்திற்கு பிரதமர் தன் தான்யா கிரிஷ் யோஜனா செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து 100 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் . இதன் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பலன் பெற இருக்கின்றனர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
100 வேளாண் மாவட்டங்கள்: நாட்டில் வேளாண்மையை ஆதாரமாகக் கொண்டிருந்தாலும் வேளாண்மையில் பின்தங்கி இருக்கக்கூடிய 100 மாவட்டங்களை கண்டறிந்து அங்கே வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான திட்டமே தன் தான்யா கிரிஷி யோஜனா. குறைந்த வேளாண் உற்பத்தி, பயிர் சாகுபடி, கடன் அனுகல் ஆகிய மூன்று குறியீடுகளின் படி நாடு முழுவதிலும் இருந்து 100 மாவட்டங்கள் அடையாளம் காணப்படும்.
வேளாண்மையை ஊக்குவிக்க திட்டம்: இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் வழங்கக்கூடிய வேளாண் துறை சம்பந்தப்பட்ட அனைத்து திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த மாவட்டங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் . முழுக்க முழுக்க விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மாவட்ட அளவில் திட்டங்கள் தீட்டப்பட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
வேளாண் நடைமுறைகளில் மாற்றம்: அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்தின் கீழ் தலா ஒரு மாவட்டத்தையாவது கொண்டிருக்கும். இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாவட்டத்தில் வேளாண் உற்பத்தி மேம்படுத்தப்படும். ஒரே பயிர்களை சார்ந்து இருக்காமல் பல தரப்பட்ட பயிர்களை சாகுபடி செய்வதற்கான விழிப்புணர்வு விவசாயிகளுக்கு வழங்கப்படும். நீடித்த நிலை தன்மை கொண்ட வேளாண் நடைமுறைகள் கொண்டு வரப்படும். அந்த குறிப்பிட்ட மாவட்டத்தில் சாகுபடிக்குப் பிறகு பொருட்களை முறையாக சேமித்து வைப்பதற்கு தேவையான வசதிகள் கொண்டு வரப்படும்.
கடன் வழங்க ஏற்பாடு: இது தவிர நீர் பாசன உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். அந்த மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால வேளாண் கடன்கள் வழங்கப்படும் .மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவிலான குழுக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது ,விவசாயிகளுக்கு பயிற்சி வழங்குவது மத்திய மாநில அரசுகள் வழங்கக்கூடிய நலத்திட்டங்களை சென்று சேர்ப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இந்த குழுக்கள் கண்காணிக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.
மண்ணின் தரத்தை மேம்படுத்துவது, இயற்கை வேளாண் நடைமுறைகளை ஊக்குவிப்பது, விவசாயத்தில் தன் நிறைவு ஆகிய இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மாதந்தோறும் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications