தங்கம் என்பது பாதுகாப்பான முதலீடு என்பதே நம் நாட்டில் உள்ள பலரின் கருத்து. ஏனெனில் தேவைப்படும் நேரங்களில் அவற்றை வைத்து பணமாக மாற்றிக் கொள்ளலாம். இன்னும் கடினமான சூழ்நிலைகள் வந்தால் அவற்றை விற்று சமாளிக்கலாம் என்பதால் தான். பலரும் பணத்தை "மண்ணில் போடுவதும் பொன்னில் போடுவதும் ஒன்றுதான்" என்று கூறக் கேட்டிருப்போம். இந்த பழமொழியை தங்கம் விலை உண்மையில் நிரூபித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது 2024-ஆம் ஆண்டில் இருக்கிறோம். இன்றைய நிலவரப்படி 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 7700 ரூபாயாக உள்ளது. ஆனால் 24 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2000 ஆண்டில் தங்கம் விலை என்னவாக இருந்தது தெரியுமா?

2000 ஆம் ஆண்டில் தங்கம் விலை என்னவாக இருந்தது என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க. 2000 ஆண்டில் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ரூ.440-ஆக மட்டுமே இருந்துள்ளது. அப்படியானால் சவரனுக்கு 3,520 ரூபாய் மட்டுமே. ஆனால் இப்போது யோசித்துப் பாருங்கள். 1 கிராம் கூட 3,520 ரூபாய்க்கு வாங்க முடியாது. ஏனெனில் இன்றைய நிலவரப்படி 1 கிராம் 22 காரட் தங்கம் 7700-ஐ நெருங்கிவிட்டது.
விலையை பார்ப்பதற்கே ஆச்சரியமாக உள்ளது. எவ்வளவு பெரிய விலை வித்தியாசம். டைம் ட்ராவல் இருந்தால் 2000 ஆண்டிற்கு சென்று தேவைப்படும் தங்கத்தை வாங்கிக் கொண்டு வந்துவிடலாம் என்று கூட தோன்றுகிறது. 2000-ஆம் ஆண்டிலிருந்து 2024-ஆம் ஆண்டு வரை தங்கத்தின் விலை 1636.59 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
2000-ஆம் ஆண்டில் ஒருவர் ரூ.1 லட்ச ரூபாய்க்கு தங்கம் வாங்கி இருந்தால் தற்போது அதன் மதிப்பு என்னவாக இருக்கும் என்று பார்ப்போம். ஒரு நபர் 1 லட்ச ரூபாய்க்கு தங்கம் வாங்கி இருந்தால் அன்றைய மதிப்பான 3520 ரூபாயில் 28 சவரன் தங்கம் வாங்கி இருக்கலாம். இது தோராயமாக 98,560 ரூபாயாக இருக்கும்.
இன்றைய மதிப்பு: அன்று ரூ. 1 லட்ச ரூபாய்க்கு தங்கம் வாங்கியிருந்தால் 2024-ஆம் ஆண்டில் 28 சவரன் தங்கத்தின் மதிப்பு 17,10,464 ரூபாயாக உயர்ந்திருக்கும்.
இதை பார்க்கும் போதே தங்கம் விலையில் ஏற்பட்டிருக்கும் வித்தியாசம் தெரிந்திருக்கும். இந்நிலையில் பல நிபுணர்களும் 2030-ஆம் ஆண்டுக்குள் தங்கம் விலை மேலும் அதிகரித்து 1 லட்ச ரூபாயை எட்டும் என்று கூறுகின்றனர். நிபுணர்களின் கணிப்பு ஒத்துப் போகும் சூழல் தான் தற்போது நிலவுகிறது. கடந்த 6 நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.235 அதிகரித்துள்ளது.
தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் விலை குறைவாக இருந்தது என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இதே போல அடுத்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய தினம் விலை குறைவாக இருந்தது என்று கூறி பேசும் நிலை கூட ஏற்படலாம். ஏனெனில் பணம் வீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதே போல் தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்றம் இருக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications