ஸ்மிஷிங் என்ற புதிய மோசடியைப் பற்றி பொதுமக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஒரு சைபர் அட்டாக் போன்றது. இதில் சைபர் அட்டாக் செய்பவர்கள், டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவார்கள். அதில் சுவாரஸ்யமான சில தகவல்களை அனுப்புவார்கள். இதை நம்பி அந்த மெசேஜை ஓபன் செய்தால் நீங்கள் ஆபத்தில் மாட்டிக் கொள்வீர்கள்.
நீங்கள் நம்பக்கூடிய சோர்ஸ்களில் இருந்து வருவது போலவே இந்த மெசேஜ்கள் இருக்கும். அதில் ஏமாந்தவர்களிடம் இருந்து அவர்களது தனிப்பட்ட விவரங்களை சேகரித்து பல்வேறு மோசடிகளை சைபர் அட்டாக்கர்கள் செய்வார்கள்.

இதுபற்றி இந்திய சைபர் ஏஜென்சி டிவிட்டரில், யூசர்களின் தனிப்பட்ட விவரங்களை அபகரிப்பதற்காக இதுபோன்ற டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்புகின்றனர். அந்தத் தகவல்களை வைத்து நிதி மோசடிகளை செய்கின்றனர் எனத் தெரிவித்துள்ளது. மேலும் மோசடியான மால்வேர்கள் இந்த லிங்க்குகளில் மறைந்து இருக்கும். இது தெரியாமல் லிங்க்கை ஓபன் செய்தால் மாட்டிக் கொள்வோம் என்றும் கூறியுள்ளது.
தி இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் டீம் இது பற்றி விடுத்துள்ள எச்சரிக்கையில், பெரும்பாலும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அனுப்பப்படும் குறுஞ்செய்திகளைப் போலவே இவை இருக்கும். எனவே இந்த முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் லிங்க்குகளை ஓபன் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளது.
இந்த புதிய மோசடியில் இருந்த தப்புவதற்கான வழிமுறைகள்:
- இந்த மோசடியில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் இதுபோன்ற நம்பத்தகாத மெசேஜ்களை ஓபன் செய்ய வேண்டாம். அந்த லிங்க்குகளை கிளிக் செய்யக் கூடாது.
- மெசேஜ்களில் குறிப்பிட்டுள்ள நிறுவனங்கள் பற்றி நேரடியாகத் தொடர்பு கொண்டு உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
- எஸ்எம்எஸ்/சமூக ஊடக விளக்கப்படங்கள் அல்லது போஸ்ட்டுகளில் உள்ள சந்தேகத்துக்கிடமான இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம்.
- சுருக்கப்பட்ட URLகளை சரிபார்க்க ஆன்லைன் ஆதாரங்களைப் பயன்படுத்தவும்.
- கிளிக் செய்வதற்கு முன் எப்போதும் இணைப்பைச் சரிபார்க்கவும்.
- புதுப்பிக்கப்பட்ட வைரஸ் தடுப்பு மற்றும் மால்வேர் கருவிகளைப் பயன்படுத்தவும்.
- வங்கி அல்லது நிறுவனத்தில் இருந்து ஏதேனும் சந்தேகத்துக்குரிய செய்தியைப் பெற்றால், உடனடியாக வங்கி அல்லது நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்.
- தனிப்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு தனி மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தவும்.
- மின்னஞ்சல்கள் மற்றும் வங்கி கணக்குகளுக்கு பல காரணி அங்கீகாரத்தை (MFA) செயல்படுத்தவும்.
- உங்கள் செட்டிங்க்ஸ் மற்றும் மென்பொருளை சமீபத்திய இணைப்புகளுடன் புதுப்பிக்கவும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications