இந்தியாவில் தங்கம் தான் பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது. உலகில் உள்ள எந்த நாட்டினரும், நம் இந்தியர்கள் போல் தங்கம் வாங்க மாட்டார்கள். மேலும், அவர்கள் ஆர்வமும் காட்ட மாட்டார்கள். நம் இந்தியாவை பொறுத்தவரை, தங்கத்தை 3 வகைகளாக பிரித்து பார்க்கிறோம். அதாவது, சிலர் நகைகளாக வாங்கி அணிந்து கொள்வார்கள், இன்னும் சிலர் வீட்டில் நகைகளை வாங்கிக் குவித்துக் கொள்வார்கள். மேலும், சமூகத்தில் மதிப்பை உயர்த்தி காட்டுவதாக நினைப்பார்கள். மூன்றாவதாக தங்கத்தை வாங்கி சில ஆண்டுகள் ஆனதும், விலையை பொறுத்து விற்பனை செய்வார்கள். இப்போது தான் நம் நாட்டில், மற்ற பொருட்களை அடமானம் வைப்பதை தங்கத்தை அடமானம் வைத்து பணம் பெறுவது மிகவும் சுலபமாகி விட்டது. அதனால் தான், தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் கருத்து: இந்தியாவில் பெரும்பாலும் தங்கம் பெரிதும் விரும்பப்படும் நிலையில், பொதுமக்களுக்கு தங்கத்தின் மீது எந்த அளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது குறித்து கோவை மாவட்டத்தில் உள்ள சில பொதுமக்களிடம் குட் ரிட்டர்ன்ஸ் சார்பாக கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் என்ன என்பதை பார்க்கலாம்

குறிப்பாக, தமிழ்நாட்டில் கிராம மக்கள் தங்கத்தை ஒரு பெரிய சொத்தாக பார்க்கின்றனர். வீடு, நிலம் போன்ற சொத்துக்களை காட்டிலும் தங்கமே எங்களுக்கு பெரும் சொத்து என்கின்றனர். வாழையடி வாழையாக தங்கத்தை சேர்ந்து வைத்து தங்களது எதிர்கால சங்கதியினருக்கு விட்டு செல்வதற்காக வைத்திருப்பதாகவும், தங்கத்தை பெரும்பாலும் வாங்கி குவித்து கொண்டே இருப்பது தவிர அவ்வளவு எளிதில் விற்றுவிட மாட்டோம் என்கின்றனர். அவசர தேவைகளுக்கு ஏதேனும் பணம் தேவைப்பட்டால் கூட அதை அடகு வைத்து பின்னர் மீட்டெடுப்பதிலே ஆர்வம் இருப்பதாக கூறுகின்றனர். தங்கத்தை ஆபரணங்களாவும், காயின்களாகவும் வாங்கவே அதிக ஆர்வம் இருப்பதாக கூறுகின்றனர்.
அதேபோல், இளம் பெண்கள், படித்த இளைஞர்கள், முதலீட்டின் மீது ஆர்வம் உள்ளவர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து அதன் மூலம் லாபம் சம்பாதிப்பதாக கூறுகின்றனர். தற்போதைய நிலையில், தங்கம் விலை அதிகரித்து வருவதால் தங்களுக்கும் லாபம் அதிகரித்து வருவதாகவும் அனைவரும் இதில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
தங்கத்தை சேமிக்க வழிகள்: இந்தியாவில் தங்கத்தை சேமிக்க பல வழிகள் இருக்கின்றன. ஆபரணம், நாணயம், தங்கக் கட்டிகள், Gold ETF, கோல்ட் Funds, டிஜிட்டல் தங்கம், தங்கப்பத்திரங்கள் ஆகியவற்றின் மூலம் சேமித்துக் கொள்ளலாம். ஆனால், தங்கத்தை பொறுத்தவரை நகைகளாக வாங்கி சேமிப்பதா..? அல்லது டிஜிட்டல் முறையில் சேமிப்பதா..? என்ற குழப்பம் இருக்கும். எனவே, இதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தங்கத்தில் முதலீடு: தங்கத்தில் முதலீடு செய்ற ஐடியா வந்ததுமே முதல்ல பலர் செய்றது தங்க நகையை கடைக்கு போயிட்டு வாங்குறது தான். சிலர் தங்க கட்டிகளாகவும், நாணயங்களாகவும் வாங்குவாங்க. ஆனா, இப்படி வாங்குறதுல ரிஸ்க் ரொம்பவே அதிகம் இருக்கு. நகையை வாங்குறது முக்கியமில்ல. அதை பாதுகாப்பா வெச்சிக்கணும். இப்போ நம்ம நாட்டுல எங்க பார்த்தாலும் நகை திருட்டு சம்பவங்கள் தான் அதிகமா இருக்கு. இதனால தங்கம் வாங்க இப்போ நிறைய பேரு பயப்படுறாங்க. நம்ம சின்ன வயசு பிள்ளைங்களுக்கு நகைப்போட்டு பார்க்கணும்ங்குறது நல்ல விஷயம் தான். ஆனா, இதையே முதலீடாக செஞ்சிட்டு இருக்கக் கூடாது. கல்யாண வயசு வரும்போது, உங்க பிள்ளைங்க வேற நகை கேட்பாங்க. வேற டிசைன் வேணும்னு கேப்பாங்க. திரும்பவும் அந்த நகையை அழிச்சு, புதுசா பண்ற மாதிரி இருக்கும். இதனால உங்களுக்குத்தான் செலவு அதிகமாகும்.
அதேமாதிரி இப்போ நிறைய பேரு நகைக்கடை இல்லைனா ஒரு நிறுவனத்துல நகைச்சீட்டு போடுறாங்க. ஆனா, இதுலயும் ஆபத்து இருக்கு. நகையை மோசடி பண்ணிட்டாங்கன்னு டெய்லியும் செய்தி வருது. ஆனாலும் நிறைய பேரு இதை நம்பி நகைச்சீட்டு போட்டு ஏமாந்து போறாங்க. பெரும்பாலான நகைக்கடைகள் நியாயமாக இருந்தாலும், ஒரு சில மோசடி கும்பல் கிட்ட மக்கள் சிக்கி பணத்தையும் இழக்குறாங்க. மேலும், இந்த கும்பல் உங்ககிட்ட பணத்தை வாங்கிட்டு, அவர்களின் சொந்த தொழிலுக்கு முதலீடு பண்ணி பணம் சம்பாதிக்குறாங்க. இப்படி தங்க நகைகளை வாங்கினாலும் பிரச்சனை, சீட்டு போட்டலும் பிரச்சனை என்றால் இதுக்கு வேற என்ன வழி இருக்குனு கேக்குறீங்களா..? அதுக்கு ஒரு சிறந்த வழி இருக்கு.
டிஜிட்டல் தங்க முதலீடு: இந்த முதலீட்டுல நிறைய விஷயம் இருக்கு. Gold ETFs (Exchange Traded Funds), Sovereign Gold Bonds (SGB), Digital Gold (Paytm, PhonePe, Groww, etc.) போன்ற வழிகளில் கூட நீங்க தங்கத்தை முதலீடு பண்ணலாம். இது எப்பவும் பாதுகாப்பா இருக்கும். யாராவது கொள்ளையடிச்சிட்டு போய்ருவாங்களோனுக்கு பயம் இருக்காது. எப்போ வேண்டுமென்றாலும் விற்பனை செய்யலாம். நீங்க நகைக்கடைக்கு போயிட்டு தங்கத்தை நகையாவோ இல்ல காசாகவோ வாங்குனா, அதை திரும்ப கடைக்கு போயிட்டு தான் விற்கணும். அப்போ, நீங்க வாங்கிய விலையை விட கம்மியா தான் வாங்குவாங்க. ஏன்னா.. அதுல ஜிஎஸ்டி போன்ற விஷயங்களெல்லாம் இருக்கும்.
ஆனா, டிஜிட்டல் தங்க முதலீட்டுல அந்த பிரச்சனையே இருக்காது. நீங்க தங்கத்தை ஆன்லைன்ல கூட விற்பனை செஞ்சுக்கலாம். நீங்கள் இதுல வாங்குற ஒவ்வொரு கிராம் தங்கமும் நம்பகமான நிறுவனங்களால் பாதுகாப்பாக இருக்கும். மேலும், இதில் 10 ரூபாய் வரை கூட முதலீடு பண்ணலாம். அதுவும் தங்கப்பத்திரத்துல முதலீடு செய்தால் 2.5% வட்டியும் கிடைக்கும். உங்க முதலீட்டை பாதுகாப்பாகவும், கம்மியான செலவுலையும் வெச்சிருக்க நினைச்சீங்கன்னா, உங்களுக்கு டிஜிட்டல் தங்க முதலீடு தான் சிறந்த தேர்வா இருக்கும்.
தங்கத்தை நகையாகவோ அல்லது குடும்ப குலதெய்வமாகவோ பார்ப்பவர்களுக்கு, பிசிகல் தங்கம் ஒரு சிறந்த தேர்வாகும். இது திருமணங்கள் அல்லது பாரம்பரிய நிகழ்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். முதலீட்டு நோக்கங்களுக்காக மட்டுமே தங்கம் வாங்க விரும்புவோர் மற்றும் பாதுகாப்பு மற்றும் பணப்புழக்கத்தை விரும்புவோர் தங்க ETF-ஐத் தேர்வு செய்யலாம். இது டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாப்பானது மற்றும் தேவைப்படும்போது எளிதாக விற்க முடியும்.
More From GoodReturns

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!



Click it and Unblock the Notifications