வீட்டுக் கடன் வாங்க போறீங்களா?.... முதல்ல இந்த விஷயத்தை செய்யுங்க..

ரியல் எஸ்டேட் என்பது பங்கு அல்லது தங்கம் போன்ற ஒரு சொத்து வகைதான். எனவே வீட்டுக் கடன் தாமதமாக வாங்கினால் நாம் நஷ்டப்படுவோமோ என்ற பயம் ஒருவருக்கு தேவையில்லாதது. பெரும்பாலான மக்கள் ரியல் எஸ்டேட் பற்றி உணர்ச்சிவசப்படுகிறார்கள். ஆனால் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் நிதி சுதந்திரம் பற்றி அவர்கள் சீரியசாக சிந்திப்பதில்லை. இதனால், சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு ஆசையை நிறைவேற்றுவதற்காக வீட்டு கடன் வாங்குகின்றனர். பின்னர் வேலை பார்க்கும் காலத்தில் வீட்டுக் கடனுக்கான தனது சம்பளத்தில் பெரும் பகுதியை கொடுத்து விட்டு, கடைசி காலத்தில் செலவுக்கு என்ன செய்வது என்று விழிபதுங்கி நிற்கின்றனர். ஒருவர் தனது தொழில் வாழ்க்கையின் காலத்தில் சரியான நேரத்தில் வீட்டுக் கடனை வாங்கினாலே இது கடினமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒருவர் எப்போது கடன் வாங்கினால் சரியாக இருக்கும் என்பதை பார்ப்போம்.

ஒரு நபர் ஒரே நிறுவனத்திலோ அல்லது வெவ்வேறு நிறுவனங்களிலோ ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கும் தொடர்ந்து அதிக வருமானம் ஈட்ட பாடுபட முடியும் என்று வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டவர்கள் இளம் வயதிலேயே வீட்டுக் கடனை வாங்குவது நல்லது. அதாவது வேலைவாய்ப்பின் சில ஆண்டுகளை கல்வி கடன்களிலிருந்து விடுபடப் பயன்படுத்துங்கள். அடுத்து குடும்ப நிலைமையை உறுதிப்படுத்துங்கள், உடனடி தேவையை பூர்த்தி செய்யுங்கள், ஒரு வலுவான அவசரகால நிதியை உருவாக்குங்கள். குழந்தைகளின் எதிர்காலம் போன்ற நீண்ட கால இலக்குகளுக்காக முதலீடு செய்ய தொடங்குங்கள். ஓய்வூதிய நிதியை உருவாக்கிய பின்னர் 20களின் பிற்பகுதியிலோ அல்லது 30களின் பிற்பகுதியிலோ வீட்டுக் கடனை வாங்கி திரும்ப செலுத்த ஆரம்பியுங்கள்.

வீட்டுக் கடன் வாங்க போறீங்களா?....  முதல்ல இந்த விஷயத்தை செய்யுங்க..

ஒரு நபரின் சம்பளம் மற்றும் சூழ்நிலைகளை பொறுத்து, நமது வருடாந்திர செலவுகளுக்கு சமமான ஐந்து மடங்கு ஓய்வூதிய நிதியை உருவாக்க 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம். அந்த கட்டத்தில் வீட்டுக் கடனை தவணையை செலுத்த தொடங்குவது சரியான பரிந்துரையாக இருக்காது. ஏனெனில் அவர்கள் நிரந்தர வேலையில் இல்லையென்றால், அதில் ஆர்வமாக இல்லாவிட்டால் அது தனிநபருக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் உங்கள் கேரியரின் ஆரம்பத்திலேயே இஎம்ஐ செலுத்த தொடங்குவது, குறைந்த முதலீடுகளுக்கு வழிவகுக்கும்.

நீங்கள் கைக்கு வரும் சம்பளம் ரூ.1 லட்சம் என்று வைத்துக் கொண்டால், ரூ.10,000 தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு செல்கிறது. மேலும் அதே அளவு உங்கள் உரிமையாளரும் பங்களிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் மாதந்திர செலவு ரூ.45,000. இங்கே செலவுகள் என்பது ஓய்வு பெறும் வரை நீடிக்கும் செலவுகளை மட்டுமே குறிக்கிறது. எனவே பள்ளி கட்டணம் மற்றும் இஎம்ஐ போன்றவற்றை விலக்க வேண்டும். உங்கள் கைக்கு வரும் சம்பளத்திலிருந்து சுமார் ரூ.20,000 முதல் 25,000 வரை உங்கள் ஓய்வுக்காலத்துக்காக முதலீடு செய்ய வேண்டும். இதனால் நீங்கள் செய்யும் முதலீடு செலவுகளுக்கு சமமாகிறது.

அதேசமயம், நீங்கள் உங்கள் கைக்கு வரும் சம்பளத்தில் ரூ.40,000 அல்லது 40 சதவீத அளவு தொகையை வீட்டுக் கடனாக செலுத்த தொடங்கினால், கட்டாய விலக்குகளை தவிர, ஓய்வூதியத்திற்காக ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். இதனால் உங்கள் வீட்டுக் கடன், உங்கள் கைக்கு வரும் சம்பளத்தில் முதலீட்டுக்கான பங்களிப்பை 20-25 சதவீத்திலிருந்து 10-15 சதவீதமாக குறைக்கும். எனவே உங்கள் கைக்கு கிடைக்கும் சம்பளத்தில் மாதாந்திர செலவுகள் மற்றும் இஎம்ஐக்களை முறையே தலா 40 சதவீதத்துக்கு கட்டுப்படுத்தி, மீதமுள்ளதை முதலீடு செய்ய முடிந்தால், கடனை திரும்பி செலுத்துவதில் இழந்த நேரத்தையும் பணத்தையும் சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு அதிக முதலீட்டில் (பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் காரணமாக) விரைவாக மீட்டெடுக்க முடியும். உங்கள் கைக்கு கிடைக்கும் சம்பளத்தில் இஎம்ஐ உங்கள் முதலீட்டை 10 சதவீதத்துக்கும் குறைவாக குறைத்தால், உங்கள் வருமானம் அதிகமாகும் வரை காத்திருப்பது நல்லது.

Story Written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+