இன்னைக்கு தங்கம் வாங்க கடைக்கு போற பிளான் இருக்கா? அப்போ ஒரு நிமிஷம் இத படிச்சிட்டு போங்க. ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்கு. ஒரு நாள் விலை குறைந்தால், மறு நாள் விலை அதிகரிக்கிறது. நேற்று தங்கம் விலை கொஞ்சம் குறைந்த நிலையில், இன்று (ஏப்ரல் 10) மறுபடியும் எகிறி சாமானியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சென்னையில் ஒரு சவரன் தங்கம் 1,000 ரூபாய் வரை உயர்ந்து இல்லத்தரசிகளை திணற வைத்துள்ளது. கோவை மற்றும் மதுரையில் இன்றைய 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் விலை எவ்வளவு? இந்த விலை உயர்வு இன்னும் தொடருமா? கடைக்குப் போகும் முன் இன்றைய லேட்டஸ்ட் ரேட் கார்டையும் பார்த்துட்டு போங்க.
சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் விலையானது கிராமுக்கு 125 ரூபாய் அதிகரித்து, 14,125 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு (8 கிராமுக்கு) 1000 ரூபாய் அதிகரித்து, 1,13,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் மட்டுமல்ல, கோயம்புத்தூர், மதுரை என அனைத்து பெரு நகரங்களிலும் இதை விலை தான் காணப்படுகிறது. 18 கேரட் தங்கம் விலையானது கிராமுக்கு 125 ரூபாய் அதிகரித்து, 11,775 ரூபாயாகவும், சவரனுக்கு 1000 ரூபாய் அதிகரித்து, 94,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே பெங்களூரில் 22 கேரட் தங்கம் விலையானது கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்துள்ளது. எனினும் கிராம் விலை சென்னை காட்டிலும் விலை சற்று குறைவாக 14,025 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையை விட பெங்களூரில் கிராமுக்கு 100 ரூபாய் குறைவாகும். இங்கு சவரனுக்கு 1,12,200 ரூபாயாகும். வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 260 ரூபாயாகவும், கிலோவுக்கு 5,000 ரூபாய் உயர்ந்து, 2,60,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதே சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 265 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே கிலோவுக்கு 5,000 ரூபாய் உயர்ந்து, 2,65,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரண தங்கம் விலையானது அதிகரித்து காணப்பட்டாலும், எம்சிஎக்ஸ் தங்கம் விலையானது புராபிட் புக்கிங் காரணமாக சற்று குறைந்து காணப்படுகிறது. இது வலுவடைந்து வரும் டாலர் மதிப்பு. கச்சா எண்ணெய் விலையேற்றம் மத்தியில் காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கத்தை பொறுத்த வரையில் ஜூன் பியூச்சர் தங்கமானது 10 கிராமுக்கு 0.60% குறைந்து, 1,52,561 ரூபாயாக காணப்படுகிறது. இதே வெள்ளி விலையானது 0.70% குறைந்து, 2,42,067 ரூபாயாகவும் காணப்படுகிறது.
அமெரிக்க டாலர் மதிப்பானது 0.10% அதிகரித்து, 98.93 ஆக ஏற்றம் கண்டுள்ள நிலையில், வட்டியில்லா முதலீடானது குறைந்துள்ளது. இருப்பினும் பிசிகல் தங்கத்தை பொறுத்த வரையில் தேவை, பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுவதால் தொடர்ந்து விலை அதிகரித்து காணப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications