செபி தலைவர் வெளியிட்ட எச்சரிக்கை.. சட்டென சரிந்த ஸ்மால் கேப் பங்குகள்..!

மும்பை: இந்திய பங்குச்சந்தை புதன்கிழமை வர்த்தகத்தில் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஷாக் கொடுத்தது. இதனால் லட்சக்கணக்கான பணத்தை இழந்து முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக ஸ்மால் கேப் எனப்படும் சிறு நிறுவன பங்குகள் தான் அதிக வீழ்ச்சியை கண்டன. இதற்கு செபி தலைவர் வெளியிட்ட ஒரு எச்சரிக்கை தான் காரணம்.

செபி தலைவர் வெளியிட்ட எச்சரிக்கை.. சட்டென சரிந்த ஸ்மால் கேப் பங்குகள்..!

மார்க்கெட் கேபிட்டல் எனப்படும் சந்தை மூலதனம் 5000 கோடி வரை இருக்கும் நிறுவனங்களின் பங்குகள் ஸ்மால் கேப் பங்குகள் என்றும், 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கோடி வரையிலான சந்தை மூலதனம் கொண்ட பங்குகள் மிட் கேப் நிறுவன பங்குகள் என அழைக்கப்படுகின்றன.

இந்திய பங்குச்சந்தையில் இந்த இரண்டு துறைகள் கடுமையாக வீழ்ந்துள்ளன. அதாவது பெரும்பாலானவர்கள் சிறு நிறுவன பங்குகள் விற்பனை செய்ததால் ஏற்பட்ட அழுத்தமே ஒட்டு மொத்த பங்குச்சந்தையிலும் எதிரொலித்திருக்கிறது. அதாவது மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஸ்மால் கேப் நிறுவனங்களில் 80% பங்குகள் சரிவில் முடிந்துள்ளன.

இந்திய பங்குச்சந்தையில் ஸ்மால் கேப் பங்குகள் அண்மை காலமாக நல்ல வளர்ச்சி கண்டன. ஸ்மால்கேப் பங்குகளின் அசாத்தியமான வளர்ச்சியால் கடந்த சில ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் அடைந்தனர். ஆனால், இந்த ஏற்றத்தால் ஸ்மால்கேப் பங்குகளின் விலை மதிப்போ எல்லைகளைத் தாண்டி உயர்ந்துவிட்டது. இதனால் பங்குகள் மதிப்பீடு என்பது அளவுக்கு அதிகமாக சென்றுவிட்டது. எனவே, ஸ்மால்கேப் பங்குகளில் எச்சரிக்கையாக இருக்கும்படி ஏற்கெனவே நிபுணர்கள் அறிவுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் இருக்கும் ரிஸ்க்கை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு செபி அறிவுறுத்தியிருந்தது. மேலும், ஸ்மால்கேப், மிட்கேப் முதலீட்டில் இருக்கும் ரிஸ்க் பற்றி முதலீட்டாளர்களுக்கு கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு செபி தலைவர் மாதபி பூரி புச் அறிவுறுத்தினார்.

இதனால் ஏற்கெனவே ஸ்மால்கேப் பங்குகள் இறக்கம் கண்டன. அட்டவணையில் இல்லாத அதிக மதிப்பீட்டால் ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகள் பிரிவில் பிரச்னை ஏற்பட கூடும் என கூறி இருந்தார். இது சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் விலை கையாளுதலை குறிக்கிறது என்றும் செபி சில விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

செபி தலைவரின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து இந்திய மியூச்சுவல் பண்டு அமைப்பு அனைத்து மியூச்சுவல் பண்டு பராமரிப்பாளர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியது. ஒவ்வொரு 15 நாட்களுக்குள் அழுத்த சோதனை செய்து அதன் முடிவுகளை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியது.

இதனால் மியூச்சுவல் பண்டு நடத்தும் அமைப்புகள், முதலீட்டு முறையை மாற்றி அமைக்க தொடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி ஸ்மால் கேப் நிறுவனங்களில் செய்யும் முதலீடு அதில் உள்ள ஆபத்துகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அண்மையில் செபி, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+