கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து இந்தியாவில் சாமானிய மக்களின் வருமானம் மற்றும் சம்பள அளவீடுகள் குறைந்தது மட்டும் அல்லாமல் உணவு பொருட்கள் முதல் கார் பைக் வரையில் அனைத்து பொருட்களின் விலையிலும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது.
இப்படிச் சாமானிய நடுத்தர மக்களின் வாழ்வு கடுமையாகப் பாதித்துள்ள வேளையில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
10 ஆண்டுகள் தொடர்ந்து முதலிடம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி கடந்த 10 ஆண்டுகளாக ஹூரன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளார். இந்த வருடம் மட்டும் டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தக விரிவாக்கம் மூலம் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்திருக்கும் நிலையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 23.8 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து மொத்த சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவீட்டை அடைந்துள்ளது.
அதானி பிரம்மாண்ட வளர்ச்சி
இதேபோல் அதானி குழுமத்தின் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களின் பங்கு விலை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள காரணத்தால் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ஒரே வருடத்தில் இரண்டு இடங்களை முன்னேறி 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதானி குழுமம்
அதானி குழுமத்தின் 4 நிறுவனத்தில் சுமார் 45,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை வெளிநாட்டு முதலீடு கணக்குகள் மூலம் முதலீடு செய்யப்பட்டுச் செபி இந்தக் கணக்குகளை ப்ரீஸ் செய்யப்பட்ட போது, அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தது. ஆனால் சரிவில் இருந்து வேகமாக மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சாமானிய மக்கள்
இந்தியாவில் ஓரே நேரத்தில் சாமானிய மக்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட வேளையில் பெரும் பணக்காரர்கள் அதிகளவிலான செல்வத்தைச் சேர்த்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் ஒரு நாள் வருமானம் என்ன தெரியுமா..?
ஒருநாள் வருமானம் என்ன..?
முகேஷ் அம்பானி - 163 கோடி ரூபாய்
கௌதம் அதானி - 1,002 கோடி ரூபாய்
ஷிவ் நாடார் - 260 கோடி ரூபாய்
எஸ்பி ஹிந்துஜா - 209 கோடி ரூபாய்
லட்சுமி மிட்டல் - 312 கோடி ரூபாய்
சைரல் எஸ் பூனவாலா - 190 கோடி ரூபாய்
ராதாகிஷன் தமனி - 184 கோடி ரூபாய்
வினோத் அதானி - 245 கோடி ரூபாய்
குமார் மங்களம் பிர்லா - 242 கோடி ரூபாய்
ஜே சவுதிரி - 153 கோடி ரூபாய்
உங்களுடைய ஒருநாள் வருமானம் என்ன..?


Click it and Unblock the Notifications