ஒருவரின் நிதி நிலை எவ்வளவு வலுவானது என்பதை அறியக் கணக்கிடப்படுவது தான் சொத்து மதிப்பு (Net Worth). ஆனால் ரிலையன்ஸ் குரூப்-ன் தலைவர் அனில் அம்பானியும், பைஜுஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பைஜூ ரவீந்திரன் ஆகியோர் தங்களுடைய மொத்த சொத்து மதிப்பு ஜீரோ என அறிவித்துள்ளனர்.
"ஜீரோ சொத்து மதிப்பு" (Zero Net Worth) என்றால் உண்மையில் என்ன பொருள், இவர்களின் சொத்து மதிப்பு என்னவாக இருக்கும். நிதியுலகில் இந்த ஜீரோ நெட் வொர்த் என்பது எப்படிக் கணக்கிடப்படுகிறது.

Anil Ambani: 2020 ஆம் ஆண்டில், சுமார் 700 மில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்தாத வழக்கில் அனில் அம்பானி நீதிமன்றத்தில் ஆஜராகும் போது, நீதிமன்றம் அவருக்கு 100 மில்லியன் டாலர்களைச் செட்டில் செய்ய உத்தரவிட்டது. இதை அவரது சொத்துக்களை வைத்துச் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது அனில் அம்பானி, "எனது முதலீடுகளின் மதிப்புச் சரிந்துவிட்டது" "எனது கடன்களுக்காக என்னுடைய வங்கிக் கணக்குகள், சொத்துக்களை வங்கிகள் எடுத்துக்கொண்ட பிறகு எனது சொத்து மதிப்பு பூஜ்ஜியமானது எனக் கூறினார்.
Byju Raveendran: இந்திய எட்டெக் தறையின் மாபெரும் சாம்ராஜ்ஜியமாக இருந்த BYJU'S -ன் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் இந்திய பில்லியனர்கள் பட்டியலிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்டது மட்டும் அல்லாமல் இவரது சொத்து மதிப்பு 0 என அறிவிக்கப்பட்டது.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2024 ஆம் ஆண்டுப் பணக்காரர் பட்டியலில், பைஜூ ரவீந்திரன் சொத்து மதிப்பு ரூ.17,545 கோடி (2.1 பில்லியன் டாலர்) என்பதிலிருந்து பூஜ்ஜியமாகக் குறைந்தள்ளது எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பூஜ்ஜிய சொத்து மதிப்பு என்றால் என்ன?: ஒருவரின் சொத்துகள் (Assets) அவரது கடன்கள் (Liabilities) மதிப்புக்குச் சமமாக இருக்கும்போது அவரது சொத்து மதிப்புப் பூஜ்ஜியம் என்று கணக்கிடப்படுகிறது. இதன் எளிய பொருள் என்னவென்றால், அவருக்குப் புதிதாய் நிதி திரட்டும் ஆதாரம் எதுவும் இல்லை என்பது தான்.
சொத்து மதிப்பைக் கணக்கிடுவது எப்படி?: உங்கள் சொத்துகளின் மொத்த மதிப்பைக் கணக்கிட்டு, அதிலிருந்து உங்கள் கடன்களின் மொத்த மதிப்பைக் கழித்தால் உங்கள் சொத்து மதிப்பு கிடைக்கும்.
சொத்துகள் (Assets): வீடு, நிலம், வாகனங்கள், முதலீடுகள், சேமிப்புகள் போன்ற உங்கள் உடைமைகள் அனைத்தும் சொத்துகள் ஆகும்.
கடன்கள் (Liabilities): செலுத்த வேண்டிய கடன் தொகைகள், வட்டிக்கடன், வருமான வரி, குறுகிய காலக் கடன்கள், நிலுவை வைக்கப்பட்ட பத்திரங்கள், தள்ளி வைக்கப்பட்ட வரி, அடமானங்கள், நீண்ட காலக் கடன்கள், உபகரணங்களுக்கான கடன் ஆகியவை அனைத்தும் கடன்கள் ஆகும்.
சொத்து மதிப்பின் வகைகள்:
பாசிடிவ் சொத்து மதிப்பு (Positive Net Worth): உங்கள் சொத்துகள் உங்கள் கடன்களை விட அதிகமாக இருந்தால், உங்களிடம் அதிகப்படியான Financial Cushion இருக்கிறது என்று அர்த்தம். இது நிதி நிலை ஸ்திரத்தைக் குறிக்கிறது.
நெக்டிவ் சொத்து மதிப்பு (Negative Net Worth): உங்கள் கடன்கள் உங்கள் சொத்துகளை விட அதிகமாக இருந்தால், உங்களிடம் Financial Cushion இல்லை என்று பொருள்.
பூஜ்ஜிய சொத்து மதிப்பு (Zero Net Worth): இதில், உங்கள் சொத்துகள் மற்றும் கடன்கள் ஒரே மதிப்பில் இருக்கும். இந்தச் சூழ்நிலையில் அவசர நிதி தேவை இருந்தால் கூட நிதி ஆதாரத்தை திரட்ட முடியாது என்ற மோசமான நிலையைக் குறிக்கிறது.
பைஜூ ரவீந்திரன் ஜீரோ சொத்து மதிப்பு: பைஜூ ரவீந்திரன் சில மாதங்களுக்கு முன்பு நிறுவனத்தின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கத் தனது சொந்த வீட்டை, கேரளாவில் இருக்கும் தனது பெற்றோர்களின் வீடு மற்றும் பிற சொத்துகளை அடமானம் வைத்து கடன் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பைஜூஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 22.5 பில்லியன் டாலரில் இருந்த வெறும் 225 மில்லியன் டாலராகக் குறைந்துள்ள வேளையில், பைஜூஸ் நிறுவனத்தில் இருக்கும் இவருடைய பங்கு மதிப்பையும், இவருடைய சொந்த கடன்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது இவரின் சொத்து மதிப்பு ஜீரோ-வாக உள்ளது எனப் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications