1985ல் 100 ரூபாய்க்கு தங்கம் வாங்கியிருந்தால்.. இன்று அதன் நிலைமை என்ன தெரியுமா..?

எவ்வளவு தான் விலை உயர்ந்தாலும் தங்கம் மற்றும் வெள்ளி தான் தற்போது முக்கிய முதலீட்டு சொத்தாக சந்தையில் விளங்கி வருகிறது. ஆனால் இதில் எவ்வளவு முதலீடு செய்கிறோம் என்பதை தாண்டி, இதில் முதலீடு செய்த பணம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பது தான் முக்கியமான கேள்வி. வரலாற்று தரவுகளை பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கும் சில உண்மைகள் தெரிய வந்துள்ளது.

1985 ஆம் ஆண்டு உங்கள் தந்தையோ அல்லது தாத்தாவோ 100 ரூபாய்க்கு தங்கம் வாங்கியிருந்தால் இன்று அதன் நிலைமை எப்படி இருந்திருக்கும் தெரியுமா..? தங்கத்தின் நீண்டகால முதலீட்டு மதிப்பை ஆய்வு செய்து வைட்ஓக் கேப்பிடல் ஒரு முக்கியமான ரிப்போர்ட்-ஐ வெளியிட்டு உள்ளது.

1985ல் 100 ரூபாய்க்கு தங்கம் வாங்கியிருந்தால்.. இன்று அதன் நிலைமை என்ன தெரியுமா..?

கடந்த நான்கு தசாப்தங்களாக அதாவது 40 ஆண்டுகளாக தங்கம், முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் பணவீக்கத்துக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு சொத்தாக விளங்கியுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது. ஆனால் அதிகப்படியான லாபம் எதில் கிடைத்துள்ளது என்பது தான் முக்கியமான விஷயம்.

1985 முதல் 2025 வரை:
1985ல் ரூ.100 தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் மார்ச் 2025க்குள் அதன் மதிப்பு ரூ.6,518ஆக உயர்ந்திருக்கும். இதே காலக்கட்டத்தில் வங்கி வைப்பு நிதியில் 100 ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு ரூ.2,100ஆகவும், பணவீக்கத்திற்கு இணையாக கணக்கிட்டால் இதன் மதிப்பு ரூ.1,478 அளவில் மட்டுமே உயர்ந்திருக்கும்.

இதுவே 100 ரூபாய் தொகையை BSE சென்செக்ஸ் குறியீட்டு அடிப்படையில் முதலீடு செய்திருந்தால் ரூ.13,484ஆக உயர்ந்தாலும், அதன் ஏற்ற இறக்கம் மிக அதிகம் இதனால் குறித்த காலக்கட்டத்தில் பணத்தை இழந்திருக்க கூட வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான் தங்கம் நிலையான லாபத்தை கொடுத்து, பங்குச்சந்தை சரியும் போது பாதுகாப்பு அளித்துள்ளது.

1985ல் 100 ரூபாய்க்கு தங்கம் வாங்கியிருந்தால்.. இன்று அதன் நிலைமை என்ன தெரியுமா..?

பங்குச்சந்தை கொடுத்த வார்னிங்
நீங்கள் 1985ல் 100 ரூபாய் தொகையை சென்செக்ஸில் முதலீடு செய்தால் 1995ல் ரூ.2,374ஆகவும், 2005ல் ரூ.1,192ஆகவும், 2015ல் ரூ.277 என மிகவும் குறைவான அளவிலேயே உயர்ந்திருக்கும். ஆனால் தங்கம் இந்த காலகட்டங்களில் சென்செக்ஸை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.

இதுவே வங்கி வைப்பு நிதி கணக்கீட்டால் இக்காலக்கட்டத்தில் சிறப்பார வளர்ந்திருந்தாலும் ரூ.859 (1995ஆம் ஆண்டு), ரூ.400 (2005ஆம் ஆண்டு), ரூ.183 (2015ஆம் ஆண்டு) என்ற அளவிலேயே உள்ளது. பணவீக்கத்தை கணக்கிட்டால் இதன் மதிப்பு இன்னும் குறைவு - ரூ.656, ரூ.355, ரூ.161.

தங்கம் பல தசாப்தங்களில் நிலையான வருமானம் கொடுத்து முதலீட்டாளர்களை பல முக்கியமான கட்டத்தில் காப்பாற்றியுள்ளது என வைட்ஓக் கேப்பிடல் ஆய்வறிக்கை கூறுகிறது. 1985 தொடங்கிய தசாப்தத்தில் தங்கம் மீதான முதலீட்டுக்கு 11 சதவீதம் லாப வளர்ச்சி, 2005 தொடங்கிய தசாப்தத்தில் 14.3 சதவீதம் லாப வளர்ச்சி, 2015 தொடங்கிய தசாப்தத்தில் 12.9 சதவீதம் என CAGR அடிப்படையில் லாபத்தை தந்துள்ளது. மேலும் 10 ஆண்டு ரோலிங் வருமானத்தில் சராசரி 10.2 சதவீதம். இது வங்கி வைப்பு (8.1 சதவீதம்), இது இந்தியாவின் 7.2 சதவீதம் பணவீக்கத்தை விட அதிகம். இது தங்கத்தின் நீண்டகால வலிமையை முதலீட்டாளர்களுக்கும், மக்களுக்கும் உணர்த்துகிறது.

1985ல் 100 ரூபாய்க்கு தங்கம் வாங்கியிருந்தால்.. இன்று அதன் நிலைமை என்ன தெரியுமா..?

பங்குச் சந்தை நிலைமை என்ன..?
சென்செக்ஸ் சில ஆண்டுகளில் பெரிய லாபம் தந்தாலும் (2014, 2015 நிதியாண்டுகளில்), சில ஆண்டுகளில் பெரிய இழப்பும் ஏற்பட்டது. உதாரணமாக 2012ஆம் நிதியாண்டில் -9.2 சதவீதம், 2017ஆம் நிதியாண்டில் -18.5 சதவீதம், 2020ஆம் நிதியாண்டில் -22.9 சதவீதம் மோசமான பாதிப்பை கொடுத்துள்ளது. இதே ஆண்டுகளில் தங்கம் நல்ல வருமானம் தந்ததுள்ளது, 2012ஆம் நிதியாண்டில் 32.9 சதவீதம், 2020ஆம் நிதியாண்டில் 29.7 சதவீதம் அளவில் லாபத்தை கொடுத்துள்ளது.

2011 முதல் 2026ஆம் நிதியாண்டு வரையிலான காலக்கட்டத்தில் தங்கம் 13.9 சதவீத CAGR வருமானத்தை தந்துள்ளது. இது S&P 500க்கு அடுத்து இரண்டாவது இடம். இது தங்கத்தை பங்குச்சந்தை சரிவுக்கு எதிரான பாதுகாப்பு சொத்தாக்க புள்ளிவிபரங்கள் மூலம் உறுதி செய்துள்ளது.

தங்கம் நீண்டகால முதலீட்டுக்கு சிறந்த தேர்வு. இது பணவீக்கம், சந்தை சரிவுக்கு எதிராக பாதுகாப்பு தருகிறது. "இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு" என்பது போல் ரிஸ்க் எடுத்து குறுகிய காலத்தில் லாபத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு பங்குச்சந்தை சிறந்த முதலீட்டு தேர்வாக இருக்கும். இதேபோல் ரிஸ்க் இல்லாத நீண்ட கால முதலீட்டையும், நிலையான லாபத்தை (குறைவான வளர்ச்சி) விருப்புவோருக்கு தங்கம் சிறந்தது.

ஆனால் உண்மையில் ஒரு போர்ட்போலியோ எப்போதும் கலவையாக இருப்பதே சிறந்தாக இருக்கும். உங்க முதலீட்டை எப்போது பன்முகப்படுத்தி கலவையாக வைக்க வேண்டும். இதில் தங்கமும் இருக்க வேண்டும், பங்குச்சந்தை முதலீடும் இருக்க வேண்டும், பத்திர முதலீடுகளும் இருக்க வேண்டும்.. இத்தகைய கலவையான முதலீடு வருடம் முழுவதும், நீண்ட கால அடிப்படையில் நிலையான லாபத்தை பெற உதவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+