இந்தியாவின் மறைமுக வரி முறையில் ஒரு பெரிய மாற்றம் வரவிருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் வரி கட்டமைப்பை எளிதாக்கும் வகையில், புதிய இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி 2.0 செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், இதைவிட முக்கியமாக, ஜிஎஸ்டி 2.0-க்கு அடுத்தபடியாக வரவிருக்கும் ஜிஎஸ்டி 3.0 குறித்த திட்டங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா டுடே-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், நிர்மலா சீதாராமன், 2017-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி 1.0-ஐ, 'ஒரு நாடு, ஒரு வரி' என்ற கருத்தின் கீழ் நாட்டை ஒருங்கிணைத்த ஒரு முக்கிய நடவடிக்கையாக விவரித்தார். தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி 2.0 எளிமையின் மீது கவனம் செலுத்துகிறது என்றும், வருங்காலத்தில் வரவிருக்கும் ஜிஎஸ்டி 3.0 மேலும் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டி 2.0-இன் நோக்கம் என்ன?: புதிய ஜிஎஸ்டி 2.0, இரண்டு அடுக்குகளுடன் வரி கட்டமைப்பை நெறிப்படுத்துகிறது. இது வரி செலுத்துவோருக்கான சிக்கலைக் குறைத்து, இணக்கத்தை எளிதாக்குகிறது. இந்த மாற்றம், வரி செலுத்துவோரின் வாழ்க்கையை எளிதாக்குவது மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும் என்று அரசு நம்புகிறது.
பொதுமக்களுக்கான மாற்றங்கள்: அத்தியாவசியப் பொருட்களுக்கு மிகக் குறைந்த வரி விகிதமும், ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக வரி விகிதமும் விதிக்கப்படும். உதாரணமாக, உப்பு மற்றும் சர்க்கரை ஒரே விகிதத்தில் வரி விதிக்கப்படும். ஆனால், சர்க்கரை பானங்கள் மற்றும் அதிக சர்க்கரை பொருட்கள் வெவ்வேறு விகிதத்தில் வரி விதிக்கப்படும்.
கல்வித் துறைக்கான தெளிவு: வழக்கமான பள்ளிக் கல்விக்கு வரி விலக்கு தொடரும். ஆனால், வணிகப் பயிற்சி மையங்களுக்கு இந்த விலக்கு கிடைக்காது.
பயனை நுகர்வோருக்கு வழங்குதல்: குறைக்கப்பட்ட வரி விகிதங்களின் பலனை வணிகங்கள் நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என்று சீதாராமன் வலியுறுத்தினார். "செப்டம்பர் 22-க்கு பிறகு இது எங்களுக்கு ஒரு பெரிய விழிப்புணர்வுப் பணி. குறைக்கப்பட்ட விகிதங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும்," என்று அவர் கூறினார்.
ஜிஎஸ்டி 3.0-க்கான திட்டம் என்ன?: ஜி.எஸ்.டி 2.0 ஒரு பெரிய நிவாரணத்தைக் கொண்டுவரும் அதே வேளையில், அடுத்த கட்டமான ஜிஎஸ்டி 3.0 பற்றி நிதியமைச்சர் சூசகமாகத் தெரிவித்தார்.
நிலையான வரி முறை: ஜிஎஸ்டி 3.0 ஆனது, ஜிஎஸ்டி 2.0-இல் அடையப்பட்ட எளிமை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு மேம்படுத்தப்படுவதை உறுதி செய்யும்.
சிறு வணிகர்களுக்கு உதவ கவனம்: இது நிலைத்தன்மை, நியாயத்தன்மை மற்றும் மென்மையான அமலாக்கத்தின் மீது கவனம் செலுத்தும். வரி முறையில் குழப்பம் ஏற்படுத்தாமல் அல்லது சிறு வணிகர்களுக்கு சுமையை அதிகரிக்காமல் வரி விகிதங்களை சீராக வைத்திருப்பதே இதன் நோக்கமாக இருக்கும்.
இந்த சீர்திருத்தங்கள், வரி செலுத்துவோரின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், நுகர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும் என்று அரசு நம்புகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் பொருளாதாரத்தை மேலும் பட்டை தீட்டவே" என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். ஜிஎஸ்டி 3.0 குறித்த பேச்சுக்கள் இப்போதே தொடங்கியிருப்பதால், இந்தியாவின் வரி முறை மேலும் பல மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது என்பது தெளிவாகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications