சென்னை: சமீப காலமாக ஆன்லைன் மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறியும், கூடுதல் பணம் சம்பாதிக்க முடியும் என்று கூறியும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆன்லைன் அந்நியர்களால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்த மோசடியின் அடுத்த கட்டமாக தற்போது வாட்ஸ்அப் குரூப் ஸ்கேம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மோசடி செய்பவர்கள் பங்குச்சந்தை முதலீட்டு திட்டங்களின் மூலம் அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்ற மோசடி சம்பவங்களில் இருந்து விடுபட நீங்கள் என்ன செய்ய வேண்டும்.. மேலும் மோசடிக்காரர்கள் உங்களிடம் எப்படி உரையாடலை துவங்குவார்கள் என்பது போன்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
வாட்ஸ்அப் குரூப் மோசடி பற்றிய சமீபத்திய அறிக்கையில், இந்தியாவின் புனேவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் ரூ. 2.45 கோடி ரூபாயை இழந்துள்ளனர். இதுபோன்ற வாட்ஸ்அப் ஸ்கேம்கள் எப்படி நடக்கிறது.. எங்கிருந்து மோசடிக்காரர்கள் உரையாடலைத் தொடங்குகின்றனர்.. என்பதைப் பார்ப்போம்.

வாட்ஸ்அப் குரூப் மோசடி எப்படி தொடங்குகிறது?: முதலில் குறிப்பிட்ட நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றைப் பயன்படுத்தி மோசடி கும்பல் தொடர்பு கொள்கின்றனர். இங்கு தான் மோசடியின் முதல் கட்டம் தொடங்குகிறது. அதன் பிறகு மோசடி செய்பவர்கள் ஒரு உரையாடலைத் தொடங்க முயற்சி செய்கின்றனர். பின்னர், அப்பாவி மக்களுக்குப் பணம் சம்பாதிப்பதற்கான யோசனைகளை வழங்குவது போல நடிக்கின்றனர்.
அதன் பிறகு சில நாட்களில் நல்ல உறவை உருவாக்க முயற்சி செய்வது போல காட்டிக் கொண்டு, அவர்களைப் பிற வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கின்றனர். அங்கு ஆன்லைன் பங்கு வர்த்தகம் மூலம் லாபம் பெற்றதாக பலரும் தங்களுடைய கருத்தை தெரிவிப்பது போலவே குரூப்புகளின் மெசேஜ்கள் இருக்கிறது. இதனைப் பார்க்கும் ஒரு நபர் தனக்கும் இது போன்ற லாபம் கிடைக்க வேண்டும் என்று எண்ணி ஆள் பெயர் தெரியாத நபர்களின் மூலம் அதிக அளவிலான தொகையை முதலீடு செய்கின்றனர்.
மேலும், மோசடி செய்பவர்கள் பங்குச்சந்தை முதலீடுகள் பற்றிய விரிவான உதவி குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்வது போல காட்டிக் கொள்கின்றனர். சட்டபூர்வமான நிறுவனத்தை நடத்துவது போல ஆசை வார்த்தை காட்டி பிறகு மக்களை ஏமாற்றுகின்றனர்.
படிப்படியாக மோசடி கும்பல் நிறைய ஆலோசனைகளை வழங்கி பங்கு வர்த்தக முதலீட்டில் ஈடுபடுமாறு கூறுகின்றனர். அதனை நம்பி முதலீடு செய்யும் மக்களுக்கு முதலில் அவர்கள் அதிக லாபத்தை பெற்றது போல காண்பிக்கும் சாஃப்ட்வேர் மற்றும் ஆப்களைப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக, மோசடி கும்பல் பயன்படுத்தும் முக்கியமான யுக்திகளில் இதுவும் ஒன்று. உங்களின் டிஸ்ப்ளேவில் காண்பிக்கப்படும் எந்த ஒரு லாபமும் உங்களுடையது அல்ல. அவர்கள் உங்களை ஏமாற்ற பயன்படுத்தும் ஒரு பெரிய ட்ரிக் தான் இது.
டிஸ்ப்ளேவில் காண்பிக்கப்படும் போலியான வருமானத்தை பார்த்து தங்களின் வருமானத்தை இன்னும் அதிகரிக்க அதிக அளவிலான தொகையை, என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து மக்களும் முதலீடு செய்கின்றனர். இன்னும் சில கும்பல் பாதிக்கப்பட்ட நபர் ஏன் தங்களுடைய பணத்தை எடுக்க முடியவில்லை என்று கேள்வி கேட்கும் பட்சத்தில்.. SEBI போன்ற ஒழுங்குமுறை ஆணையம் அவர்களுடைய அக்கவுண்ட்டை லாக் செய்து வைத்துள்ளது என்று பொய்யாகக் கூறுகின்றனர்.
சரி இது போன்ற மோசடிகளைத் தடுக்கும் சில டிப்ஸ்களைப் பற்றிப் பார்ப்போம்.
1. முதலாவதாக இன்டர்நெட்டில் உள்ள யாரையும் எளிதில் நம்பாதீர்கள். யாராவது புதிய வாய்ப்புகளைத் தருவதாக உறுதி அளித்து உங்களை ஏதேனும் குரூப்பில் சேர்த்தால்.. குறிப்பாக தெரியாத நபர்கள் கொண்ட குரூப்பில் உங்களை சேர்த்தால் அதைப் பற்றி ஆராயுங்கள். சந்தேகத்திற்கிடமான பெயர்களை கொண்ட குழு உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம்.
2. இரண்டாவதாக உங்களுக்கு தெரிந்த ஒருவர் உங்களை ஒரு குழுவிற்கு அழைத்தால் அவர்கள் உங்களை ஏன் அதில் சேர்க்கின்றனர் என்பதையும் அந்த குழு சட்ட பூர்வமானதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏதாவது தவறாக உணர்ந்தால் கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கூடுதலாக நம்பத்தகாத ரிவார்டுகள், முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்களை நம்பி ஏமாற வேண்டாம். அவசர உணர்வை உருவாக்கும் எந்த ஒரு செயல்களிலும் ஈடுபடுவதற்கு முன்பு எச்சரிக்கை அவசியம்.
3. மற்றொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால் ஆள் பெயர் தெரியாத நபர்கள் உங்களை ஏதேனும் செயலியையோ அல்லது லிங்கையோ கிளிக் செய்யும்படி கூறினால், அவற்றை நம்ப வேண்டாம். அதை வைத்து உங்கள் தரவுகள் திருடப்படலாம். மேலும் வாட்ஸ்அப் குழுக்களில் உங்களுடைய முகவரி தொலைபேசி மற்றும் வங்கி விபரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை தெரியாதவர்களுடன் ஒருபோதும் பகிர வேண்டாம். இதை வைத்து அடையாளத் திருட்டிலும் மோசடிக்காரர்கள் ஈடுபடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும். இனிவரும் காலங்களில் எச்சரிக்கையுடன் இருப்பதே இது போன்ற பண மோசடி சம்பவங்கள் நடக்காமல் குறைப்பதற்கான தீர்வாக இருக்கும்.
More From GoodReturns

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications