இந்தியாவில் மே மாதம் வரையில் உணவு பணவீக்கம் குறைந்த ஒரே காரணத்திற்காக ரீடைல் பணவீக்கம் பெரிய அளவிலான சரிவு தடுக்கப்பட்டது. ஆனால் பருவமழையில் ஏற்பட்ட மாற்றம் இந்திய விவசாய உற்பத்தியை தலைகீழாக மாற்றியுள்ளது, கடந்த சில மாதங்களாக தக்காளி உட்பட பல காய்கறிகள் விலை தாறுமாறாக உயர்ந்தது.
இதை தொடர்ந்து அரிசி விலை மெல்ல மெல்ல உயர்ந்து, உற்பத்தியும் குறைந்து அரிசி விலை உயர்வை தடுக்க மத்திய அரசு வெளிநாட்டு ஏற்றுமதியை தடை செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டது. இதேபோன்ற நிலை சொல்லப்போனால் இதைவிட மோசமான நிலை தற்போது கோதுமைக்கு உருவாகியுள்ளது.

இந்தியாவில் கோதுமையின் விலை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகப்படியான தேவை காரணமாக, சப்ளை - டிமாண்ட் பிரச்சனை உருவாகி கோதுமை விலை தற்போது பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
அரிசியை அடுத்து கோதுமை இந்திய மக்களின் அடிப்படை உணவாக இருக்கும் வேளையில், இதன் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். விலைவாசி உயர்வு ஏற்கனவே உயர்ந்த பணவீக்கத்தை கூடுதலாக மோசமான நிலைக்கு தள்ளும் நிலைக்கு வந்துள்ளதால், ஆர்பிஐ தலையீடு முக்கியமான தேவையாக உள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா போன்ற முக்கியமான மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு அதிகப்படியான கவனத்தை செலுத்துகிறது.
நாட்டின் முக்கிய கோதுமை உற்பத்தி மாநிலங்களில் விவசாயிகளின் கோதுமை விநியோகம் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவு அரைக்கும் ஆலைகள் சந்தையில் போதுமான கோதுமையை பெற முடியாமல் திணறி வருகின்றன என டெல்லி வர்த்தகர் ஒருவர் ரெயூட்டர்ஸ் பத்திரிக்கையிடும் தெரிவித்துள்ளார்.
இந்தூரில் கோதுமை விலை செவ்வாய்கிழமை 1.5 சதவீதம் அதிகரித்து ஒரு மெட்ரிக் டன் கோதுமை 25,446 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது பிப்ரவரி 10ஆம் தேதிக்குப் பின் பதிவான அதிகபட்ச அளவாகும், மேலும் கடந்த நான்கு மாதங்களில் கோதுமை விலை கிட்டத்தட்ட 18 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் அடுத்த சில மாதங்கள் இந்தியாவில் முக்கியமான பண்டிகைக் காலம் என்பதால் மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய தட்டுப்பாடுகளைத் தவிர்க்க, அரசு தனது கிடங்குகளில் உள்ள கோதுமை இருப்பை அதிகளவில் வெளியிட வேண்டிய கட்டாயம் இருக்கும்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசின் கிடங்குகளில் 28.3 மில்லியன் மெட்ரிக் டன் கோதுமை உள்ளது. இது கடந்த வருடம் 26.6 மில்லியன் மெட்ரிக் டன் அளவில் இருந்து அதிகமாக இருந்தாலும் புதிய சந்தை வரத்து குறைந்துள்ளதால் கட்டாயம் கோதுமை தட்டுப்பாடு உருவாகும்.
இந்த நிலையில் மத்திய அரசு கோதுமை விலைகளை குறைக்க இறக்குமதி அவசியம். இறக்குமதி இல்லாமல் கோதுமை விநியோகத்தை நாடு முழுவதும் சீராக்க முடியாது. கடந்த வாரம், உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா, கோதுமை மீதான 40 சதவீத இறக்குமதி வரியை குறைக்க அல்லது ரத்து செய்யும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.

மேலும் ரஷ்யாவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டமோ அல்லது அரசுகள் மத்தியிலான ஒப்பந்தத்தில் ஈடுபடவோ திட்டம் இல்லை என்றும் அவர் கூறினார். இதனால் தற்போது இந்தியாவில் உருவாகியிருக்கும் கோதுமை தட்டுப்பாட்டை தீர்க்க மத்திய அரசு என்ன செய்யும் என்ற கேள்வி மக்களுக்கு முக்கியமானதாக உள்ளது.
சமீபத்திய மாதங்களில், டெல்லியில் கோதுமை விலை 12 சதவீதம் உயர்ந்து, ஒரு மெட்ரிக் டன் 25,174 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு மெட்ரிக் டன் எனில் 1000 ரூபாய், அப்படியானால் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications