கோடக் மகேந்திரா பேங்க் சமீபத்தில் சேமிப்புக் கணக்கிற்கான வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து அறிவித்தது. இது ரூ.5 லட்சத்துக்கும் குறைவான பேலன்ஸ்க்கான வட்டி விகிதமாகும். இந்த வட்டி விகிதங்கள் வெவ்வேறு வங்கிகளை பொறுத்து மாறுபடும். பிற வங்கிகளின் வட்டி விகிதங்களையும் பற்றி தெரிந்து கொண்டு புதுப்பித்த நிலையில் இருப்பது அவசியம். இந்தியாவின் முன்னணி வங்கிகளில் தற்போது சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ரூ.50 லட்சத்துக்கும் குறைவான பேலன்ஸ் இருக்கும் சேமிப்புக் கணக்குகளுக்கு, வட்டி விகிதம் 3 சதவீதம். 50 லட்சத்திற்கு மேல் பேலன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு 3.50 சதவீத வட்டி கிடைக்கும். சரி இப்போது வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை பார்ப்போம்.

HDFC பேங்க்: ரூ.50 லட்சத்திற்கும் குறைவான பேலன்ஸ் இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு 3 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான பேலன்ஸ் இருக்கும் கணக்குகளுக்கு 3.50 சதவீத வட்டு விகிதம் வழங்கப்படுகிறது. இந்த கட்டணங்கள் ஏப்ரல் 6, 2022-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.10 கோடி வரை பேலன்ஸ் இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு 2.70% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ரூ.10 கோடிக்கும் அதிகமாக பேலன்ஸ் இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு 3 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் அக்டோபர் 15, 2022-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளன.
ICICI பேங்க்: ரூ.50 லட்சத்திற்கும் குறைவான பேலன்ஸ் இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு 3 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான பேலன்ஸ் இருக்கும் கணக்குகளுக்கு 3.50 சதவீத வட்டு விகிதம் வழங்கப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க்: ரூ.10 லட்சத்துக்கும் குறைவான பேலன்ஸ் இருக்கும் கணக்குகளுக்கு 2.70% வட்டி விகிதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.100 கோடிக்கும் குறைவான பேலன்ஸ் இருக்கும் சேவிங்ஸ் அக்கவுண்டுகளுக்கு 2.75 சதவீதமும், 100 கோடி மற்றும் அதற்கு மேல் பேலன்ஸ் இருக்கும் சேவிங்ஸ் அக்கவுண்டுகளுக்கு 3 சதவீத வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. இவை ஜனவரி 1, 2023-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளன.
யூனியன் பேங்க்: ரூ.50 லட்சம் வரையிலான பேலன்ஸ் இருக்கும் சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு 2.75 சதவீதமும், ரூ.50 லட்சம் முதல் ரூ.100 கோடி வரையிலான பேலன்ஸ் கொண்ட சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு 2.90%, ரூ.2000 கோடிக்கும் மேல் பேலன்ஸ் இருக்கும் கணக்குகளுக்கு 4.20% வட்டி வழங்கப்படுகிறது.
ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க்: ரூ.5 லட்சம் முதல் ரூ.100 கோடி வரையிலான பேலன்ஸ் இருக்கும் சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு 7.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. லோயர் பேலன்ஸ்கள் 3 சதவீதமும், ரூ.200 கோடிக்கு மேல் பேலன்ஸ் கொண்ட கணக்குகளுக்கு 3.50 சதவீதமும் வட்டி கிடைக்கும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications