சாமானிய மக்கள் ஒரு கிராம் தங்கம் வாங்க யோசித்து கொண்டிருக்கும் வேளையில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் கடந்த 23 மாதங்களாக டன் கணக்கில் தங்கத்தை வாரிக்குவித்து வருகின்றன. அமெரிக்க டாலர் எப்போது வேண்டுமானாலும் சரியலாம் என்ற அச்சமும், உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றமுமே இந்த தங்கம் வேட்டைக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள சீனா, துருக்கி மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தங்களது கையிருப்பில் தங்கத்தின் அளவை அதிரடியாக உயர்த்தி வருகின்றன. அமெரிக்காவையே ஓரங்கட்டும் அளவுக்கு தங்கம் வாங்குவதில் தீவிரம் காட்டும் அந்த டாப் நாடுகள் எவை? மத்திய வங்கிகளின் இந்தத் திடீர் தங்கத் தாகம் சர்வதேச சந்தையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? தங்கம் விலை இன்னும் உயருமா அல்லது குறையுமா? வாருங்கள் பார்க்கலாம்.

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவது குறித்து தி கோபெய்சி லெட்டர் ஆய்வறிக்கையானது முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்திலும், உலகளாவிய மத்திய வங்கிகள் தங்களது தங்க கையிருப்பை தொடர்ந்து அதிகரித்துள்ளன. இதன் மூலம் தொடர்ந்து 23 மாதங்களாக தங்க வேட்டையானது தொடர்ந்து கொண்டுள்ளதை புரிந்து கொள்ள முடியும். பிப்ரவரி மாதத்தில் மட்டும் மத்திய வங்கிகள் 19 டன்னுக்கும் மேலான தங்கத்தை வாங்கிக் குவித்துள்ளன. ஜனவரி மாதத்தில் வாங்கப்பட்ட 6 டன் தங்கத்தையும் சேர்த்து 2026ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 25 டன் தங்கம் கையிருப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
போலந்தானது கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகப்படியான தங்கத்தை வாங்கிய நாடாக உருவெடுத்துள்ளது. அந்நாட்டின் தேசிய வங்கியானது 20 டன்னுக்கும் மேலாக தங்கத்தை வாங்கிக் குவித்துள்ளது. அதன் மூலம் அந்த நாட்டின் மொத்த கையிருப்பு 570 டன்னாகவும் உயர்ந்துள்ளது. இது அந்த நாட்டின் மொத்த அன்னிய செலவாணி கையிருப்பில் 31% ஆகும்.
அதைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் நாட்டு மத்திய வங்கியானது 8 டன்னுக்கும் மேலாக தங்கத்தை வேட்டையாடி உள்ளது. இதன் மூலம் அதன் மொத்த தங்க இருக்கு 407 டன்னாகவும் அதிகரித்துள்ளது. இது அதன் அன்னிய செலவாணி கையிருப்பில் 88% ஆகும்.
சீனாவும் தொடர்ந்து 16 மாதங்களாக தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் 1 டன்னும் மேலான தங்கத்தை வாங்கியுள்ளது. இருப்பினும் அதன் மொத்த இருப்பு 2,308 டன்னாகவும் உயர்ந்துள்ளது. அதன் அன்னிய செலவாணி கையிருப்பில் 10% ஆகும்.
இருப்பினும் இந்த காலகட்டத்தில் சில நாட்டின் மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பை குறைத்தும் உள்ளன. துருக்கி, ரஷ்யா போன்ற நாடுகள் 8 டன் மற்றும் 6 டன் அளவுக்கு குறைத்துள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் துருக்கி 120 டன் தங்கத்தை விற்பனை செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தையில் அதிகப்படியான ஏற்ற இறக்கம் நிலவி வரும் சூழலில், தொடர்ந்து மத்திய வங்கிகளின் கொள்முதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையை தொடர்ந்து உச்சத்தில் வைத்திருக்கவே உதவலாம். மேலும் தொடர்ந்து அரசியல் பதற்றங்கள் மத்தியில் பாதுகாப்பு புகலிடமாகவும் செயல்படும் என்பதால், முதலீட்டாளர்களும் தங்கத்தில் முதலீட்டை தொடரும். பிசிகல் தங்கத்திற்கான தேவையும் தொடரும் என்பதால், விலை நிச்சயம் பெரிய அளவில் சரிய வாய்ப்பில்லை என்ற நிலையே காணப்படுகிறது.
மொத்தத்தில் இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது டாலருக்கு மாற்றாக ஒரு பாதுகாப்பான முதலீட்டை உருவாக்கவே உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தை வாரிக் குவிக்கின்றன. ஆக பிசிகல் தங்கத்தின் தேவையானது குறைந்தாலும் கூட, விலை பெரிதாக குறைய வாய்ப்பில்லை எனலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications

