உலகம் முழுவதும் மதிப்பு மிக்க ஒரு உலோகமாக தங்கம் தொடர்ந்து தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொண்டு இருக்கிறது. பாதுகாப்பான முதலீடு , அந்தஸ்தை தரக்கூடிய ஒரு முதலீடு என தங்கத்தின் மதிப்பை நாம் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
தங்கம்: சாமானிய மக்களை பொருத்தவரை தங்கம் என்பது ஒரு அவசரத் காலத்திற்கு உடனடியாக அடகு வைத்து பணமாக மாற்றக்கூடிய ஒரு சேமிப்பு . எனவே தான் சாமானிய மக்கள் தங்களிடம் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்தாலே உடனடியாக அதை கொண்டு தங்க நகையாக வாங்கி வைத்து விடுவார்கள் . தங்கத்தை நாம் பல்வேறு விஷயங்களுக்காக பயன்படுத்துகிறோம். அந்த வகையில் இந்தியாவில் மிகப்பெரிய தங்கச்சந்தை ஒன்று இருக்கிறது.

ஜாவேரி பஜார்: இந்த தங்க சந்தையில் தான் நாடு முழுவதும் தங்கத்தையும் தங்க நகையையும் சப்ளை செய்கிறது. இந்தியாவின் நிதி தலைநகரமான மும்பையில் அமைந்திருக்கிறது ஜாவேரி பஜா.ர் இந்தியாவின் மிகப்பெரிய தங்க நகைக்கான சந்தை. ஆசியாவிலேயே பெரிய தங்கச்சந்தை என்ற பெருமையும் இதற்கு உண்டு. 120 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தங்கச்சந்தை செயல்பட்டு வருகிறது.
எப்போது தொடக்கம்: 1864 ஆம் ஆண்டு ஜாவேரி என்ற வர்த்தகரால் நிறுவப்பட்டது தான் இந்த பஜார். இதனால் தான் இது ஜாவேரி பஜார் என அழைக்கப்படுகிறது . இங்கே தங்கத்தையும் தங்க நகைகளையும் மொத்த விலைக்கு வாங்க முடியும். இங்கிருந்து தான் நாட்டின் மூலை முடுக்கெங்கும் தேவைப்படும் தங்க நகை சப்ளை செய்யப்படுகிறது. பல வகையான தங்க நகைகள் , விதவிதமான டிசைன்கள் ,தரமான தங்க நகைகளை நகை கடை உரிமையாளர்கள் இங்கிருந்து தான் வாங்குகின்றனர் .
மொத்த விலை: தங்கம் மட்டுமில்லாமல் வைரத்திற்கான மொத்தவிலை சந்தையாகவும் ஜாவேரி பஜார் இருக்கிறது. பல மாநிலங்களை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்கள் மொத்த விலையில் தங்க நகையை வாங்கி தங்கள் கடைகளில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
தங்க தலைநகரம்: ஜாவேரி பஜார் இந்தியாவின் பெரிய தங்கச் சந்தையாக இருந்தாலும் இந்தியாவின் தங்க தலைநகரமாக கேரள மாநிலம் திருச்சூர் தான் தொடர்ந்து நீடித்து வருகிறது. தங்க வர்த்தகம் மற்றும் தங்க நகை உற்பத்திதியின் மையமாக முக்கியமான ஒரு இடத்தை திரிச்சூர் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. திரிச்சூரில் பல்வேறு தங்க நகைக்கான உற்பத்தி ஆலைகளும், பாரம்பரியமான நகை உற்பத்தி மற்றும் வடிவமைப்பு கலைஞர்களும் இருக்கிறார்கள்.
வேறு எங்கு சந்தை: தென்னிந்தியாவிற்கு முக்கியமான ஒரு தங்க விநியோக மையமாக திரிச்சூர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது . இதனை அடுத்து மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவான் பகுதி, மத்திய பிரதேச மாநிலம் ரேட்லாம், டெல்லியின் சராஃபா பஜார் ஆகியவை இந்தியாவில் தங்க நகைகளுக்கான சந்தைகளாக செயல்படுகின்றன.
More From GoodReturns

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?



Click it and Unblock the Notifications