உலகில் எப்போதும் பாதுகாப்பான ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது தங்கம். இது சாமானிய மக்களுக்கு மட்டுமல்ல அரசுகளும் கூட தங்கத்தை வாங்கி பாதுகாத்து வைக்கின்றன.
நாட்டில் ஒரு அசாதாரணமான பொருளாதார சூழல் ஏற்படும்போது உதவக் கூடும் என்ற நம்பிக்கையில் பல்வேறு நாடுகளும் தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கின்றன. அப்படி உலகிலேயே அதிகளவு தங்கத்தை வாங்கி வைத்துள்ள முதல் 10 நாடுகள் என்னென்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..

1. அமெரிக்கா: 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரத்தின் அடிப்படையில் உலகிலேயே அதிகளவு தங்கத்தை இருப்பு வைத்திருக்கக் கூடிய ஒரு நாடு என்றால் அது அமெரிக்கா தான் . அமெரிக்காவிடம் 8,133.46 டன்கள் தங்கம் இருப்பு உள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் அமெரிக்கா கடந்த மூன்று காலாண்டுகளாக தன்னுடைய தங்க இருப்பில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பது உலக தங்க கவுன்சில் வெளியிட்ட தரவுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
2. ஜெர்மனி: இந்த நாடு 3,352.31 டன்கள் தங்கத்தை வைத்திருக்கிறது. அமெரிக்காவை ஒப்பிடும்போது இது அளவில் குறைவாக இருக்கிறது. கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஜெர்மனியின் தங்க இருப்பு என்பது சற்றே குறைந்து இருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறுகிறது.
3. இத்தாலி: இந்த நாடு 2451.84 டன்கள் தங்கத்தை குவித்து வைத்துள்ளது. கடந்த மூன்று காலாண்டுகளாகவே இத்தாலியின் தங்க இருப்பு என்பது ஒரே அளவில் இருக்கிறது, ஏற்றமோ இறக்கமோ காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.
4. பிரான்ஸ்: இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருக்கும் நாடு பிரான்ஸ். இங்கு 2436.88 டன்கள் தங்கம் கையிருப்பாக உள்ளது. கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் போது இது சற்றே குறைவு என தங்க கவுன்சில் கூறுகிறது.
5. ரஷ்யா: பல்வேறு பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்க கூடிய ரஷ்யா பொருளாதார தடைகளுக்கு மத்தியில் சர்வதேச அளவில் தங்கம் இருப்பு வைத்திருக்கக்கூடிய நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது. ரஷ்யாவை பொறுத்தவரை 2,332.74 டன்கள் தங்கத்தை கையிருப்பாக கொண்டுள்ளது.
6. சீனா: அண்மைக்காலமாகவே சீனா அதிக அளவு தங்கத்தை வாங்கி குவித்து வைத்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சீன மத்திய வங்கி 5 டன்கள் தங்கத்தை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மொத்தமாக சீனாவிடம் 2262.45 டன்கள் தங்கம் இருக்கிறது.
7. ஸ்விட்சர்லாந்து: இந்த நாட்டில் 1040 டன்கள் தங்கம் கையிருப்பாக உள்ளது.
8. ஜப்பான்: இந்த நாட்டை பொறுத்தவரைக்கும் 845.97 டன்கள் தங்கத்தை கையிருப்பாக கொண்டுள்ளது.
9. இந்தியா: இந்த பட்டியலில் இந்தியா 9வது இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவில் 822.09 டன்கள் தங்கம் கையிருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 18.51 டன்கள் உயர்வு ஆகும்.
10. நெதர்லாந்து: இந்த பட்டியலில் பத்தாம் இடத்தில் இருப்பது நெதர்லாந்து . இங்கு 612.45 டன்கள் தங்கம் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications