டன் கணக்கில் தங்கம்..! இந்த பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தில் முதலீடு செய்வது என்பது, தனி நபர்கள் மற்றும் வியாபார நிறுவனங்களைத் தாண்டி, ஒரு நாட்டுக்கும் அவசியமாகிறது.

 

பொதுவாக ஒரு நாட்டின் சார்பாக, அந்த நாட்டின் அரசாங்கம் அல்லது அந்த நாட்டின் மத்திய வங்கிகள் தங்கத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையினை முதலீடு செய்து வைத்துக் கொள்வார்கள்.

ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் தங்கள் நாட்டின் பணத்தைக் கொடுக்க முடியாது. டாலரில் தான் ஏற்றுமதி செய்த பொருளுக்கு பணத்தை வாங்கவோ, இறக்குமதி செய்த பொருளுக்கான பணத்தை செலுத்தவோ முடியும்.

டாலர்

டாலர்

ஆக டாலரை வாங்க தங்கள் நாட்டின் கரன்ஸிக்கு நிகரான மதிப்பு நன்றாக இருந்தால் பிரச்னை இல்லை. அதுவே டாலருக்கு நிகரான கரன்ஸி மதிப்பு அடிக்கடி குறைவதாக இருந்தால் பிரச்னை தான். இப்படி டாலருக்கு நிகரான கரன்ஸி மதிப்பு பிரச்னையை சமாளிக்க, தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்வார்கள். அப்படி மலை மலையாக தங்கத்தில் முதலீடு செய்து வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். இந்த தரவுகள் ஸ்டாடிஸ்டா அறிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது. ஜூன் 2019 நிலவரப்படி தொகுக்கப்பட்டதாம்.

கடைசி 3 இடங்கள்

கடைசி 3 இடங்கள்

10-வது இடத்தில் நெதர்லாந்து நாடு 612.46 டன் தங்கம் வைத்திருக்கிறார்கள்.
9-வது இடத்தைப் இந்த முறை இந்தியா தட்டிப் பறித்து இருக்கிறது. இந்தியாவிடம் 618.17 டன் தங்கம் கைவசம் இருக்கிறதாம்.
8-வது இடத்தை அறிவியல் தேசமான ஜப்பான் பிடித்திருக்கிறது. ஜப்பானிடம் 765.22 டன் தங்கம் இருக்கிறது.

ஸ்விட்சர்லாந்து, சீனா
 

ஸ்விட்சர்லாந்து, சீனா

7-வது இடத்தில் சாக்லேட் மற்றும் கறுப்புப் பண வங்கிகள் தேசமான சுவிட்சர்லாந்து இருக்கிறது. இந்த நாட்டிடம் 1,040.01 டன் தங்கம் குவிந்துகிடக்கிறது.
6-வது இடத்தில் இருப்பது, நம் கம்யூனிஸ கேப்பிட்டலிச அண்டை நாடான சீனா. நம் சீன அரசிடம் 1,916.29 டன் தங்கம் குவிந்து கிடக்கிறதாம்.

ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி

ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி

5-வது இடத்தில் நம் நீண்ட கால நட்பு நாடான ரஷ்யா இருக்கிறது. ரஷ்யாவிடம் 2,207.01 டன் தங்கம் இருக்கிறதாம்
4-வது இடத்தில் உணவு தேசமான பிரான்ஸ், 2,436.06 டன் தங்கம் வைத்திருக்கிறார்கள்.
3-வது இடத்தில் பாஸ்தா தேசமான இத்தாலி, 2,451.85 டன் தங்கத்தில் முதலீடு செய்து வைத்திருக்கிறார்களாம்.

ஜெர்மனி

ஜெர்மனி

2-வது இடத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வலுவான நாடாக இருக்கும் ஜெர்மனி இடம் பிடித்து இருக்கிறது. பிரெக்ஸிட்டுக்குப் பின் ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இவர்களிடம் மட்டும் 3,367.95 டன் தங்கம் வைத்திருக்கிறார்களாம்.

அமெரிக்கா

அமெரிக்கா

முதலிடத்தில் வழக்கம் போல கொலம்பஸ் கண்டு பிடித்த அமெரிக்கா யாரும் தொட முடியாத உயரத்தில் அமர்ந்து இருக்கிறது. மற்ற நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைக்கத் தெரிந்த இவர்களுக்கு தங்கள் பொருளாதாரத்தைப் பார்த்துக் கொள்ளத் தெரியாதா என்ன..? அதான் சும்மா போனால் போகட்டுமே என 8,133.53 டன் தங்கத்தை வாங்கிக் குவித்து வைத்திருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gold தங்கம்
English summary

which country is holding highest gold reserve

All the countries are holding some amount of gold reserve to manage its economy. So which country is holding the highest amount of gold. How much india is holding.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X