தங்க நகைகளுக்கும் இந்தியர்களுக்கும் இடையிலான இணைப்பை பிரிக்கவே முடியாது. தலைமுறை தலைமுறையாக இந்தியர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தான் நம்புகிறார்கள். இதனால் தான் இன்றும் எவ்வளவு விலை உயர்ந்தாலும் இந்தியாவில் தங்கத்திற்கான மவுசு என்பது குறையவே இல்லை.
இந்தியாவிற்கு தேவைப்படக்கூடிய பெருமளவிலான தங்கத்தை நாம் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம். இதனால் தான் சர்வதேச பொருளாதார சூழலில் ஏற்படக்கூடிய எந்த ஒரு தாக்கமும் இந்தியாவில் தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கம் பல மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு தங்க நகையாக மாறி நமக்கு விற்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்தாலும் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கு இடையிலும் தங்கம் விலையில் வேறுபாடு இருக்கிறது. அதாவது டெல்லியில் ஒரு விலை, மும்பையில் ஒரு விலை, சென்னையில் ஒரு விலை என மாநிலத்திற்கும் நகரங்களுக்கு இடையிலும் தங்கம் விலை மாறுகிறது. அந்த வகையில் இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில் குறைந்த விலையில் தங்கம் கிடைக்கிறது என்ற தகவலை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளா தான் இந்தியாவிலேயே குறைந்த தங்கம் விலை கொண்ட மாநிலமாக இருக்கிறது. ஏன் கேரளாவில் மட்டும் தங்கம் விலை குறைவாக இருக்கிறது என்பதை நாம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. கேரள மாநிலம் தங்கத்தின் சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. கேரள மக்கள் இயல்பாகவே அதிக தங்கம் வாங்கு கூடியவர்கள். தங்கம் நுகர்வு அதிகம் என்பதால் இங்கே தங்க நகை கடைகளும் அதிகம்.

கேரளாவில் உள்ள பல முன்னணி நகை கடைகள் சர்வதேச சந்தையில் இருந்து நேரடியாக தங்கத்தை இறக்குமதி செய்கின்றன. இதனால் இடைத்தரகர் கமிஷன் குறைகிறது. கேரளாவில் நகைக்கடைகளின் எண்ணிக்கை மிக அதிகம் எனவே வாடிக்கையாளர்களை ஈர்க்க கடைகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால் லாப வரம்புகளை குறைத்துக் கொள்கின்றன.
அது மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே அதிக தங்கம் இறக்குமதி நடக்கும் துறைமுகமாக கொச்சின் துறைமுகம் இருக்கிறது. எனவே துறைமுகத்தில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்து நகை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிக குறைவு. பொதுவாக தங்கம் விலை இறக்குமதி செலவு, போக்குவரத்து செலவு ஆகியவற்றை கொண்டு தான் முடிவு செய்யப்படுகிறது., இதனால் தான் கேரளாவில் தங்கம் விலை குறைவாக உள்ளது.
அப்படி என்றால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கேரளா சென்று தங்கம் வாங்கலாமா என்ற யோசனை தோன்றலாம். இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் தங்கத்தை வாங்கிக் கொண்டு செல்லலாம். இதற்கு சட்டப்படி எந்த ஒரு தடையும் இல்லை. ஒருவேளை நீங்கள் சோதனைக்கு ஆளாகும் போது தங்கம் வாங்கியதற்கான உண்மையான ரசீதை சமர்ப்பிக்க வேண்டியது இருக்கும், இல்லை என்றால் சிக்கல்.
அதே போல 2 லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கும்போது பான் கார்டு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் கட்டாயம். சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை 14,860 ரூபாய், இதுவே கொச்சினில் 14,790 ரூபாய் ஆகும். சென்னைக்கும் கொச்சினுக்கும் தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் வித்தியாசம் வருகிறது. ஒரு சவரன் என பார்த்தால் சவரனுக்கு 560 ரூபாய் வித்தியாசம் வருகிறது.
More From GoodReturns

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!



Click it and Unblock the Notifications