டெல்லி:ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தனது பிள்ளைகள் குறித்து சில நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இப்போது ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி.. பெட்ரோல் சுத்திகரிப்பு முதல் ஜியோ வரை இவர் பல்வேறு தொழில்களை வெற்றிகரமாகச் செய்து வருகிறார்.
இவருக்கும் நீதாவுக்கும் கடந்த 1985இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இஷா மற்றும் ஆகாஷ் (32) மற்றும் ஆனந்த் (28) என மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளனர். முகேஷ் அம்பானிக்கு பிறகு யாருக்கு ரிலையன்ஸ் செல்லும் என்ற கேள்வி இருந்த நிலையில், அதற்கான பதில் சமீபத்தில் கிடைத்தது.

நீதா அம்பானி: அதாவது அம்பானி தனது பிள்ளைகள் மூன்று பேரையும் போர்டு உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளார். அவர்களுக்கு மெல்லப் பயிற்சி கொடுத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு சில நிறுவனங்களைக் கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது குடும்பம் குறித்து சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சிஎன்பிசி இன்டர்நேஷனல் டிவிக்கு நீதா அம்பானி அளித்த பேட்டியில், "நானும் முகேஷும் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். முகேஷ் எப்போதும் தனது காலத்தைத் தாண்டி வரும் காலம் குறித்து யோசிக்கும் நபர்.. இதனால் தான் சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதுதான் மிக முக்கியமான ஒன்று என என் குழந்தைகளிடம் எப்போதும் சொல்வேன்.
சிறந்த நண்பர்: எனது சிறந்த நண்பரும் எனது வாழ்க்கைத் துணையுமான முகேஷ் எனது வாழ்க்கையில் வந்ததை நான் பாக்கியமாகவே கருதுகிறேன். நாங்கள் எங்கள் குழந்தைகளையும் பேரக்குழந்தைகளையும் மிகவும் ரசித்து வளர்த்தோம். அதற்காக வயதாகிவிட்டது என அர்த்தம் இல்லை. நாங்கள் இளமையாக இருந்தபோது எதைச் செய்துமோ அதைத் தான் இப்போதும் செய்ய விரும்புகிறோம்.
அவ்வப்போது நாங்கள் தனியாக லாங் டிரைவ் செய்வோம். இந்திப் பாடல்களைக் கேட்டுக் கொண்டு ஜாலியாக செல்வோம். ஸ்ட்ரீட் ஃபுட்டை சாப்பிடுவோம்.. வீதியில் இட்லி தோசை உணவுகளைச் சாப்பிடுவோம். எங்களுக்குப் பிடித்த விஷயங்களை இப்போதும் விரும்பி செய்கிறோம். இதைத் தான் நாங்களும் எங்கள் குடும்பத்தினருக்குச் சொல்லித் தருகிறோம். குடும்பத்தை நேசிப்பது, பெரியவர்களை மதிப்பது ஆகியவை தான் முக்கியம் என்று குடும்பத்தினருக்குச் சொல்லித் தருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
பாகுபாடு இல்லை: தொடர்ந்து நீதா தனது மகள் இஷா அம்பானி குறித்துப் பேசுகையில், "எனது மகள் இஷா இப்போது சில்லறை வணிகத்தை நடத்தி வருகிறார். பெண்கள் தாங்கள் சமமானவர்கள் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகள் எப்போதும் ஆண் குழந்தைகளை விடக் குறைவானவர்கள் இல்லை. நான் எனது பிள்ளைகள் இஷா, ஆகாஷ், ஆனந்த் இடையே எந்தவொரு பாகுபாட்டையும் காட்டியதே இல்லை.
ஆகாஷ், இஷா, ஆனந்த் மற்றும் இளம் தலைமுறையினர் தான் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் இந்தியாவுக்கும் அடுத்த தலைமையாக இருக்கப் போகிறார்கள். அவர்கள் மூவரிடமும், நான் வெவ்வேறு குணங்கள் இருப்பதை நான் பார்க்கிறேன்.. என் இளைய மகனான ஆனந்த், உலகத்தைச் சிறந்த இடமாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்.. அவர் இரக்கமுள்ள இளைஞனாக இருக்கிறார்.
திட்டம் என்ன: ஜியோ மூலம் டிஜிட்டல் புரட்சியை ஆகாஷ் முன்னெடுத்து வருகிறார். இஷா ரிலையன்ஸ் அறக்கட்டளையில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், அவர் எங்களின் சில்லறை வர்த்தகத்தை முன்னெடுத்து நடத்துகிறார்.. இவர்கள் மூவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் பல விஷயங்களைத் தனித்துவமாக உள்ளனர்.

இங்கே அனைவரிடமும் குறைகள் இருக்கிறது. தவறு செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஆனால், அந்த தவறில் இருந்து நீங்கள் என்ன கற்றுக் கொள்கிறீர்கள் என்பது தான் இங்கே விஷயம்.. அப்போது தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. வெற்றிக்கு பிறகும் கூட பணிவாக இருங்கள், இரக்கத்துடன் இருங்கள். மக்களை மரியாதையுடன் நடத்துங்கள்" என்று அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications