பாலிவுட்டில் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் நடிப்பில் கோஸ்டாவோ என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி லட்சக்கணக்கான மக்களின் பார்வையை பெற்றுள்ளது. இந்த டிரைலர் வெளியானதில் இருந்து மக்கள் அனைவரும் கூகுளில் ஒரு நபர் குறித்து தான் அதிகம் தேடி வருகின்றனர் அவர்தான் கோஸ்டாவோ பெர்னாண்டஸ்.
கோவாவில் சுங்கத் துறை அதிகாரியாக இருந்து மிகப்பெரிய தங்க கடத்தலை தடுத்தவர் தான் கோஸ்டாவோ. அந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நவாசுதீன் சித்திக்கின் நடிப்பில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. மே 1ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

கோவா என்ற உடனே நம் அனைவரும் நினைவுக்கு வருவது அது ஒரு பார்ட்டிக்கான நகரம் என்பது தான். ஆனால் உண்மையில் அதற்கு முன்னர் கோவா தங்க கடத்தல் மையமாகத்தான் இருந்தது. கோடிக்கணக்கிலான மதிப்பிலான தங்கம் கோவாவில் இருந்து கடத்தப்பட்டு வந்தது. இதற்கு முக்கிய காரணம் அலீமோ சகோதரர்கள். அண்ணன் அரசியல் வாதி தம்பி தங்க கடத்தல்காரன் என அரசியல் பலத்தோடு இந்த கடத்தல்கள் அரங்கேறின.
இவர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக பணியில் சேர்ந்தவர்தான் கோஸ்டாவோ பெர்னாண்டஸ். 1979 ஆம் ஆண்டு இவர் கோவாவில் சுங்கத் துறை அதிகாரியாக வேலைக்கு சேர்ந்தார். 1991 ஆம் ஆண்டு இவருக்கு ஃபார்டடே கடற்கரையிலிருந்து பெரிய அளவில் தங்கம் கடத்தப்படுவதாக ஒரு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அன்றைய நாள் இரவு எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல் தனியாக கடற்கரையில் ரோந்து பணியில் சென்றார்.
அங்கே தங்க கடத்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுடன் சண்டை போட்டார் அப்போது அல்வார்னஸ் அலீமோ என்ற கோவாவில் சக்திவாய்ந்த அரசியல்வாதியாக இருந்தவரின் தம்பியும் இந்த தங்க கடத்தல் கும்பலுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அலீமோ கத்தியை கொண்டு கோஸ்டாவை தாக்கினார். கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி இருந்த கோஸ்டாவோ தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக பதில் தாக்குதல் நடத்தினார். இதில் அலீமோ இறந்தார்.
பின்னர் கோஸ்ட்டாவோ மீது கொலை குற்றச்சாட்டு போடப்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து தங்கக் கடத்தலுக்கு எதிரான தன்னுடைய ரோந்து பணியை தொடர்ந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொலை மிரட்டல்கள் கூட வந்தன, இருந்தாலும் தொடர்ந்து உறுதியுடன் போராடிய அவர் அலீமோ சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார்.
1996 ஆம் ஆண்டு வீரதீர செயலுக்கான குடியரசு தலைவர் பதக்கம் இவருக்கு வழங்கி பாராட்டப்பட்டது. இவருடைய இந்த வீர தீர செயல் தான் நவாசுதீன் சித்திக் நடிப்பில் கோஸ்டாவோ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. தற்போது மும்பையில் ஃபிட்னஸ் ட்ரெயினராக இருக்கும் கோஸ்ட்டாவோ என்னுடைய வேலையை செய்வதற்கு நான் எதற்கு பயப்பட வேண்டும், எப்பொழுது வேண்டுமானாலும் நமக்கு மரணம் ஏற்படலாம், நாட்டுக்காக இந்த உயிரை அர்ப்பணிப்பதில் தவறில்லையே எனக் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!



Click it and Unblock the Notifications