முகேஷ் அம்பானியின் தொழில் வளர்ச்சிக்கும், வணிக ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிக்க அவரின் வலது கரமாகவும் இருப்பவர் தான் மனோஜ் மோடி. அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.
யார் இவர்..? பெரிய அளவில் பிரபலமாகாத மனோஜ் மோடி ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் செய்வது என்ன..? மனோஜ் மோடி-க்கும் முகேஷ் அம்பானிக்கும் இருக்கும் தொடர்பு என்ன..?
யார் இந்த மனோஜ் மோடி!
மனோஜ் மோடி, முகேஷ் அம்பானி-யின் கல்லூரி காலத்து நண்பர் ஆவார். முகேஷ் அம்பானியும், மனோஜ் மோடியும் வேதியல் தொழில்நுட்பத் துறையில் படித்த காலத்திலிருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர்.
முகேஷ் அம்பானி & நீதா அம்பானியின் நெருங்கிய நண்பர்!
மனோஜ் மோடி முகேஷ் அம்பானிக்கும், அவரது மனைவி நீதா அம்பானிக்கும் பல காலங்களாக நெருங்கிய நண்பராக உள்ளார். மேலும் அம்பானி-யின் இரட்டைக் குழந்தைகளான ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானியுடன் நெருக்கமாகவும் பணியாற்றி வருகிறார்.
ரிலையன்ஸ் பயணம்!
ரிலையன்ஸ் நிறுவனத்தில் மறைந்த தலைவரும், முகேஷ் அம்பானியின் தந்தையுமான திருபாய் அம்பானி 1980களின் முற்பகுதியில் ரிலையன்ஸை வழிநடத்திய காலத்திலிருந்தே மனோஜ் மோடி ரிலையன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
ரிலையன்ஸ் ஜியோ-ஃபேஸ்புக் ஒப்பந்தம்!
உலகமே கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடியபோது, ஆகாஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் - ஃபேஸ்புக்குடன் ரூ.43,000 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அனைவரும் அறிவோம். இந்த ஒப்பந்தத்தை மனோஜ் மோடி முன்னெடுத்து நடத்தியதாகவும், இந்த ஒப்பந்தத்தை முடிப்பதில் ஆகாஷ் அம்பானி மற்றும் மனோஜ் மோடி மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.
லைம் லைட்டை விரும்பாத நபர்!
மனோஜ் மோடி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான முகேஷ் அம்பானியின் வலது கரமாக இந்திய வணிக வட்டாரங்களில் அறியப்பட்டவர். ரிலையன்ஸ் நிறுவனத்தால் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களுக்கு மூளையாக செயல்பட்டவரும் இவர் தான். மனோஜ் மோடி மிகவும் அடக்கமானவர், அதேசமயம் புத்திசாலியானவர், பேச்சில் வல்லவரும் கூட, இவர் முகேஷ் அம்பானிக்கு நிழலாக இருப்பதாக வணிக வட்டாரங்கள் கூறுகின்றன.
நோ பப்ளிசிட்டி
இவ்வளவு பெருமைகள் இருந்தாலும் மனோஜ் மோடி பப்ளிசிட்டி மற்றும் லைம் லைட்டில் இருந்து விலகி இருக்கவே விரும்பியுள்ளார். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் அவருக்கு வழங்கும் சம்பளம் மற்றும் அவரின் நிகர சொத்து மதிப்பு பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
முகேஷ் அம்பானி கிஃப்ட்!
முகேஷ் அம்பானி அவர்கள் மனோஜ் மோடிக்கு 2022 ஆம் ஆண்டில், மும்பையிலுள்ள நேபியன் சீ சாலையில் அமைந்துள்ள 1.7 லட்சம் சதுரடி பரப்பளவுள்ள, சுமார் 22 மாடி கட்டிடத்தை பரிசாக அளித்துள்ளார். Magicbricks.com வெளியிட்ட தரவின்படி, அந்த வீட்டின் மதிப்பு ரூ.1,500 கோடி என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications