கடந்த சில தினங்களாக செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் அதிகம் அடிப்படும் பெயர் நவாஸ் மோடி சிங்கானியா. இவர் ஜவுளி முதல் ரியல் எஸ்டேட் என பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபடும் ரேமண்ட் குழுமதத்தின் தலைவர் கௌதம் சிங்கானியாவின் மனைவி.
கடந்த திங்கட்கிழமையன்று கௌதம் சிங்கானியா தனது 53 வயதான மனைவியை பிரிந்து விட்டதாக அறிவித்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், கவுதம் சிங்கானியா நடத்திய தீபாவளி பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக தானேவில் உள்ள அவர்களது சொந்த வீட்டுக்கு சென்றபோது, காவலர்கள் அவரை உள்ளே விடாமல் கேட்டுக்கு வெளியே தடுத்து நிறுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

நவாஸ் மோடி சிங்கானியாவின் இளம் பருவம், படிப்பு, தொழில், காதல், திருமணம் உள்ளிட்ட தகவல்களை பார்ப்போம். மும்பையில் பிரபல வழக்கறிஞரான நாடார் மோடியின் மகள் நவாஸ் மோடி.
இவர் மும்பையில் உள்ள ஹியூஸ் ரோடு ஆக்டிவிட்டி பள்ளி மற்றும் கதீட்ரல் மற்றும் ஜான் கேனான் பள்ளிகளில் தனது பள்ளி படிப்பை நிறைவு செய்தார். பின்பு செயின்ட் சேவியர் கல்லூரியில் டிகிரி முடித்தார். அதன் பிறகு அரசு சட்டக் கல்லூரி மற்றும் கே.சி. சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார்.
படிப்பில் கெட்டிக்காரராக இருந்தாலும், நவாஸ் மோடி சிறுவயதிலேயை விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார், கல்லூரி காலத்தில் உடலை பிட்னஸாக வைத்திருப்பதில் ஆர்வமாக இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளராக (டிரைனர்) தேர்ச்சி பெற்றார்.
1992ல் மும்பையில் பாடி ஆர்ட் பிட்னஸ் என்ற உடற்பயிற்சி மையத்தை தொடங்கினார். அம்ருதா பட்னாவிஸ், அதுல், காயத்ரி ருயா, சஞ்சய் நரங், ஹர்ஷா போக்லே, லிசா ரே, டாக்டர் சுவாதி பிரமல், பூனம் சோனி உள்ளிட்ட மாடல்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நடிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் இவரது உடற்பயிற்சி மையத்தில் குவிந்தனர்.
இதனால் இவரது பிட்னஸ் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சி கண்டது. இதற்கு மத்தியில் ரேமண்ட் குழும தலைவர் கௌதம் சிங்கானியாவுடன் காதல் மலர்ந்தது. இருவரும் 8 ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்தனர். இறுதியில் ஒரு வழியாக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். 1999ல் கௌதம் சிங்கானியா நவாஸ் மோடியை கரம் பிடித்தார்.
இதனையடுத்து நவாஸ் மோடி, நவாஸ் மோடி சிங்கானியாவாக மாறினார். சிங்கானியா தம்பதியனருக்கு நிஹாரிகா மற்றும் நிசா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கௌதம் சிங்கானியா தனது மனைவி நவாஸ் மோடி சிங்கானியாவுடனான 32 வருட காதல் திருமண வாழ்க்கையை முறித்து கொண்டதாக வெளிப்படையாக அறிவித்தார். அதன் பிறகு நடந்த தீபாவளி பார்ட்டி சம்பவம் நாட்டுக்கே தெரியும்.
நவாஸ் மோடி சிங்கானியாவுக்கு இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்துக்கும் அதிகமான பாலோயர்ஸ் உள்ளனர். சமூக ஊடகங்களில் லைஃப் ஸ்டைல் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பதிவு செய்கிறார்.
அண்மையில் அவர் உடற்பயிற்சி, மனநலம் தொடர்பான 'Pause, Rewind: Natural Anti-Ageing Techniques' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்துக்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவியும், பிரபல தனியார் வங்கியின் உயர் பதவியில் இருப்பவருமான அம்ருதா பட்னாவிஸ் தனது முன்னுரையை எழுதியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications