இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும், வெற்றிகரமான தொழிலதிபவராகவும் இருப்பவர் முகேஷ் அம்பானி. ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி இவருடைய நிகர மதிப்பு 91.1 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் செல்வம் அவருடைய வெற்றிகரமான வணிக முயற்சிகளில் இருந்து வருகிறது. தற்போது முகேஷ் அம்பானி 120 பில்லியன் டாலர் வருவாய் வழங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்து வருகிறார்.
முகேஷ் அம்பானிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி, அனந்த் அம்பானி. இந்தப் பதிவில் முகேஷ் அம்பானியின் 3 குழந்தைகளில் யார் பணக்காரர் என்பதைப் பார்ப்போம்.

ஆகாஷ் அம்பானி: இஷா அம்பானியின் இரட்டை சகோதரரான ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட்டின் தலைவராக உள்ளார் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட்டின் இயக்குனராக இருந்து வருகிறார். பல்வேறு ஊடக அறிக்கைகளின் படி ஆகாஷ் அம்பானி ஆண்டுக்கு ரூ. 5.6 கோடி சம்பளம் பெறுகிறார். மேலும் அவருடைய நிகர மதிப்பு 40.1 பில்லியன் டாலர்களாகும். இது தோராயமாக இந்திய மதிப்புக்கு ரூ. 332,830 கொடியாகும்.
இஷா அம்பானி: ஆகாஷ் அம்பானியின் இரட்டை சகோதரியான இவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநராக உள்ளார். மேலும் ரிலையன்ஸ் ரீடெய்ல், ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மற்றும் திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆகியவற்றின் தலைமைக் குழுவிலும் இருந்து வருகிறார். இஷா அம்பானி தீரா பியூட்டியின் நிர்வாக இயக்குனராகவும் இணை நிறுவனராகவும் உள்ளார். இஷா அம்பானி இதன் மூலம் ஆண்டு வருமானமாக தோராயமாக ரூ.4.2 கோடி பெறுகிறார். ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 31-வது இடத்தில் இடத்தில் இருக்கிறார். இவருடைய நிகர மதிப்பு ரூ. 800 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அனந்த் அம்பானி: முகேஷ் அம்பானியின் 3 குழந்தைகளில் இளைய மகனான அனந்த் அம்பானிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை சமூக ஊடக தளங்களின் வழியாக பார்த்திருப்போம். இவர் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் தொலைத்தொடர்பு துறைகளை கவனிக்கவில்லை. மேலும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் ஆகியவற்றில் இயக்குனர் பதவிகளில் இருந்து வருகிறார். அனந்த் ஆண்டு வருமானமாக ரூ.4.8 கோடி பெறுகிறார். இவருடைய நிகர மதிப்பு தோராயமாக 40 பில்லியன் டாலர்களாகும். இது தோராயமாக இந்திய மதிப்புக்கு ரூ. 332,000 கொடியாகும்.


Click it and Unblock the Notifications