வாழ்வில் மறக்க முடியாத ஒரு ஆண்டாக மாறிய 2020ல் பலரும் பல விதமான சவால்களை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் இந்தியாவில் டாப் 10 பணக்காரர்கள் பெரும் அளவிலான சொத்துக்களைச் சேர்த்து அசத்தியுள்ளனர் என்றால் மிகையில்லை.
2020ல் பங்குச்சந்தை வீழ்ச்சி, வர்த்தகச் சரிவு, உற்பத்தித் துறை பாதிப்பு, சேவைத் துறை பாதிப்பு என அனைத்து வர்த்தகத் துறைகளும் கடுமையான சரிவை எதிர்கொண்ட நிலையிலும் இந்தியப் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 2 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்திய பணக்காரர்கள்
ஹூரன் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 823 பில்லியன் டாலர். இது கிட்டத்தட்டப் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான், பூட்டான் ஆகிய 5 நாடுகளின் மொத்த ஜிடிபி அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
அசிம் பிரேம்ஜி
2020ல் விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி டாப் 10 பட்டியலில் இந்த வருடம் 2 இடங்களுக்குச் சரிந்துள்ளார். இதன் மூலம் 1,14,000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் விப்ரோ நிறுவனத்திற்குப் புதிய சிஇஓ நியமிக்கப்பட்ட பின்பு இந்நிறுவனப் பங்குகளின் மதிப்பு 70 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
கௌதம் அதானி
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைப் போல் 2020ல் பல துறைகளில் வர்த்தக விரிவாக்கம், புதிய வர்த்தகத்தை அறிமுகம் செய்த அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 48 சதவீதம் அதிகரித்து 1,40,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஷிவ் நாடார்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார், இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் இந்த வருடம் 2 இடங்களுக்கு முன்னேறி 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
2020ல் இவரது சொத்து மதிப்பு 34 சதவீதம் அதிகரித்து 1,41,700 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஹிந்துஜா பிரதர்ஸ்
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஹிந்துஜா பிரதர்ஸ் 1,43,700 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர். ஹிந்துஜா பிரதர்ஸ்-ன் சொத்து மதிப்பு 2020ல் 23 சதவீதம் சரிந்துள்ளது.
ஹிந்துஜா பிரதர்ஸ்-ன் ஹிந்துஜா குரூப்-ன் இன்டஸ்இந்த் வங்கி, கல்ப் ஆயில், GOCL கார்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சரிவால் ஹிந்துஜா பிரதர்ஸ்-ன் சொத்து மதிப்பு சரிந்துள்ளது.
முகேஷ் அம்பானி
2020ல் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 73 சதவீதம் அதிகரித்துச் சுமார் 6,58,400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின்பு ஒரு மணிநேரத்திற்குச் சுமார் 90 கோடி ரூபாய் அளவில் இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் பங்கு விற்பனை மூலம் ரிலையைன்ஸ இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ஏற்பட்ட உயர்வில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தாறுமாறாக உயர்ந்துள்ளது.
6 முதல் 10 வரையிலான இடங்கள்
சீரம் நிறுவனத்தின் நிறுவனர் சைரஸ் பூனவாலா 94,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 6வது இடத்தையும், அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரான ராதாகிஷன் தமனி முதல் முறையாக டாப் 10 பட்டியிலில் 87,200 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 7வது இடத்தையும், கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைவரான உதய் கோட்டாக் 87,000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 8வது இடத்தையும், சன் பார்மா நிறுவனத்தின் தலைவரான திலிப் சங்வி 84,000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 9வது இடத்தையும், சைர்ஸ் மற்றும் ஷாபூர்ஜி குடும்பம் 76,000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 10வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications