கடந்த செப்டம்பர் 2020 மாதத்துக்கான மொத்த விலைப் பணவீக்கம் (Wholesale Price Index) இன்று (14 அக்டோபர் 2020, புதன்கிழமை) மதியம் வெளியானது.
அனைத்து பொருட்களுக்குமான மொத்த விலைப் பணவீக்கம் செப்டம்பர் 2020 காலத்துக்கு 1.32 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2020 மாதத்தில் 0.16 சதவிகிதமாகவும், ஜூலை 2020-ல் -0.25 சதவிகிதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதன்மை பொருட்களுக்கான (Primary Articles) மொத்த விலைப் பணவீக்கம் கடந்த செப்டம்பர் 2020-ல் 5.10 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. அதற்கு முந்தைய மாதமான ஆகஸ்ட் 2020-ல் முதன்மைப் பொருட்களுக்கான மொத்த விலைப் பணவீக்கம் 1.60 சதவிகிதமாக இருந்தது. ஜூலை 2020 மாதத்தில் 1.61 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கான மொத்த விலைப் பணவீக்கம், கடந்த செப்டம்பர் 2020 மாதத்தில் -9.54 சதவிகிதமாகச் சரிவைக் கண்டு இருக்கிறது. ஆகஸ்ட் 2020 மாதத்தில் -9.68 சதவிகிதமாகவும், ஜூலை 2020-ல் -9.84 சதவிகிதமாகவும் பதிவாகி இருக்கிறது.
உற்பத்திப் பொருட்களுக்கான (Manufactured Products) மொத்த விலைப் பணவீக்கம் கடந்த செப்டம்பர் 2020 மாதத்தில் 1.61 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. ஆகஸ்ட் 2020 மாதத்தில் 1.27 சதவிகிதமாக இருந்தது. ஜூலை 2020-ல் 0.59 சதவிகிதமாக பதிவாகி இருக்கிறது.
உணவுக் குறியீட்டின் (Food Index) மொத்த விலைப் பணவீக்கம் கடந்த செப்டம்பர் 2020 மாதத்தில் 6.92 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. ஆகஸ்ட் 2020 மாதத்தில் 4.07 சதவிகிதமாக இருந்தது. ஜூலை 2020-ல் 4.67 சதவிகிதமாக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 2020 மாதத்தில் அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைக் குறியீடு (Wholesale Price Index) விவரங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம்
- தானியங்கள் -3.91 %
- அரிசி 1.54 %
- கோதுமை -5.24 %
- பருப்பு வகைகள் 12.53 %
- காய்கறிகள் 36.54 %
- உருளைக் கிழங்கு 107.63 %
- வெங்காயம் -31.64 %
- பழங்கள் -3.89 %
- பால் 5.56 %
- முட்டை, இறைச்சி & மீன் 4.15 %
- எண்ணெய் வித்துக்கள் 0.65 %
- பெட்ரோல் -12.28 %
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications