அமர ராஜா, எக்சைட் பேட்டரி நிறுவனங்களில் முதலீடு செய்யலாமா? – பங்குச்சந்தை நிபுணர் பதில் என்ன..?

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பும் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரை பேட்டரி தான் அதன் முக்கிய பாகம். எனவே பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களில் முதலீடு செய்யலாமா என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கு Inditrade Capital, நிறுவனத்தின் சுதிப் பந்தியோபாத்யாய் அளித்துள்ள விளக்கத்தை விரிவாக காணலாம்.

சுதிப்பை பொறுத்தவரை பேட்டரி நிறுவனங்களை சார்ந்த பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்கிறார். பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் அந்த பங்குகள் நல்ல லாபம் தரும் என்ற பார்வையை அவர் முன்வைத்துள்ளார்.

அமர ராஜா, எக்சைட் பேட்டரி நிறுவனங்களில் முதலீடு செய்யலாமா? – பங்குச்சந்தை நிபுணர் பதில் என்ன..?

பாரம்பரிய வாகனங்களில் பேட்டரி என்பது ஒரு பாகம் ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரை பேட்டரிகள் தான் முக்கியமான பாகம். எனவே தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடும் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இந்த வாய்ப்பை முதலீட்டாளர்கள் பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இனி வரும் நாட்களில் பேட்டரிகளுக்கான தேவை இந்தியாவில் அதிகரிக்கும் இதன் காரணமாக பேட்டரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளில் பாசிட்டிவாக இருக்கும் என கூறுகிறார். இந்த துறை சார்ந்த பங்குகளை நிச்சயம் வாங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக அமர ராஜா (amara raja ) மற்றும் எக்சைட் (exide) ஆகிய இரண்டு நிறுவனங்களை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அமரராஜா பேட்டரி நிறுவனம் ஸ்லோவாக்கியா நிறுவனத்துடன் இணைந்து பேட்டரி தொழில்நுட்பம் சார்ந்த புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருப்பதால் அந்த நிறுவனத்தின் பங்கு கணிசமான வளர்ச்சியை கண்டு வருகிறது , முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

அமர ராஜா பேட்டரி நிறுவனத்தை பொறுத்தவரை ஆந்திராவை சேர்ந்த நிறுவனம் மற்றும் பேட்டரி உற்பத்தியில் ஈடுபட்டிருப்பது ஆக இரண்டு காரணிகளால் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கணிசமாக உயர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதன் ஒரு பங்கின் மதிப்பு 35% வரை அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் 161% உயர்ந்துள்ளது. ஜூன் 26 ஆம் தேதி பங்குச் சந்தையில் அமரராஜா எனர்ஜி நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 1669 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது, இந்த நிறுவனத்தின் வருவாய் 2023 ஆம் ஆண்டில் 10,480 கோடி ரூபாயாகவும் லாபம் 695 கோடி ரூபாயாகவும் உள்ளது. இந்த நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 24 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். உள்நாட்டு நிறுவனங்கள் 10 சதவீத பங்கினை வைத்துள்ளன.

அதேபோல எக்சைட் நிறுவனத்தின் மதிப்பும் கடந்த ஓராண்டில் 141% என உயர்வு கண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது ஜூன் 26 ஆம் தேதி பங்குச்சந்தையில் 568 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் பங்குகளில் 13 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கின்றனர். உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 5.34% பங்குகளை வைத்துள்ளன. இத்துறை பங்குகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருந்தாலும் over valued என கூற முடியாது fully valued என கூறலாம் என்றும் சுதிப் தெரிவித்துள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+