உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை எதிர்கொண்டு வரும் வேளையில் பணவீக்கம் என்ற வேதாளம் அனைத்து நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் உட்கார்ந்து கொண்டு ஆட்டம் போட்டு வருகிறது.
உதாரணமாக இந்தியாவில் ரீடைல் பணவீக்கம் ஆர்பிஐ இலக்கான 6 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, இதேபோல் அமெரிக்காவில் பணவீக்கம் செப்டம்பர் மாதம் 3.7 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபர் மாதம் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதனால் ஆர்பிஐ, பெடரல் ரிசர்வ் ஆகியவை வருகிற டிசம்பர் மாத நாணய கொள்கை கூட்டத்தில் 0.25 முதல் 0.50 சதவீதம் வரையில் தங்களுடைய பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்துவதில் குறியாய் நிற்கிறது. எனவே வட்டி வருமானம் அளிக்காத சொத்துக்கள் அனைத்தும் சரிவு பாதைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
தங்கம் விலையில் தடாலடி சரிவு
தங்கம் விலை சர்வதேசச் சந்தையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 14 மாத சரிவில் உள்ளது. நேற்று அமெரிக்கச் சந்தை வர்த்தகம் முடியும் போது ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கத்தின் ஸ்பாட் சந்தை விலை 3845.02 டாலராக குறைந்துள்ளது, இது செப்டம்பர் 2025க்கு பின்பு பதிவான மோசமான சரிவாகும்.
ஆனால் ஆசியச் சந்தை வர்த்தகத்தில் ஸ்பாட் சந்தை விலையில் 0.34 சதவீதம் மட்டும் உயர்ந்து காணப்படுகிறது.
பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் உயர்த்துவதில் உறுதியாக இருக்கும் வேளையில் டாலர் மதிப்பில் எவ்விதமான சரிவு ஏற்பட வாய்ப்பில்லை, இதனால் தங்கம் விலை உயர்வுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு, ஆயினும் சில தடுமாற்றங்கள் உடன் தங்கம் விலை தொடர்ந்து சரிவு பாதையிலேயே பயணிக்கிறது.
இன்று சென்னை ரீடைல் சந்தையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை 76 ரூபாய் குறைந்து 13,604 ரூபாயாக உள்ளது, இதேபோல் 22 கேரட் தங்கம் விலை 70 ரூபாய் குறைந்து 12,470 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 1 கிலோ விலை 1,90,000 ரூபாயாக உள்ளது.
பிட்காயின் மதிப்பில் ஏற்பட்ட மோசமான சரிவு
டாலர் மதிப்பு வலிமையாக இருக்கும் போது பிட்காயின் மதிப்பு சரிவது என்பது இயல்பான ஒன்றாகும். அமெரிக்க பத்திர முதலீட்டின் மீதான வட்டி உயர்வுக்கு பின்பு பிட்காயின் விலை வேகமாக சரிய துவங்கியது மூலம் தற்போது 3 மாத சரிவான 64,616 டாலரைத் தொட்டு உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 1 சதவீதம் வரையில் சரிந்த பிட்காயின் கடந்த ஒரு வாரத்தில் 13.54 சதவீதம் சரிந்து முதலீட்டாளர்களை பயமுறுத்தியுள்ளது. கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டை தொடர்ந்து நிறுவன முதலீட்டாளர்கள் குறைத்து வரும் வேளையிஸ், கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளம் விற்பனையைக் கட்டுப்படுத்தி வருகிறது.
இதற்கிடையில் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு பிட்காயின் அவசியமில்லா முதலீடாக முதலீட்டாளர்கள் மத்தியில் மாறியுள்ளது.
இதன் எதிரொலியாக நவம்பர் மாதம் 2 -16ஆம் தேதிகளில் யூஎஸ் ஸ்பாட் பிட்காயின் ஈடிஎப்-ல் இருந்து சுமார் 2.42 பில்லியன் டாலர் முதலீடுகள் வெளியேறியுள்ளது. கடந்த 30 நாட்களில் ஸ்டேபிள்காயின் சப்ளை 14.2 பில்லியன் டாலர் குறைந்துள்ளதுள்ளது.


Click it and Unblock the Notifications